Short Height கொண்டவரா நீங்க?.. உங்க ஒசரத்துக்கு ஏற்ற ஸ்கூட்டர்களின் பட்டியல் இதோ! சுலபமா ஓட்ட ஏற்ற வண்டிகள்!

உயரம் குறைவானவர்களும் பயன்பெறும் வேண்டும் என்பதற்காக இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் சில, இந்தியாவில் சற்று உயரம் குறைவான ஸ்கூட்டர் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன. சுலபமாக ஏறி-இறங்க, குறிப்பாக டிராஃபிக் நிறைந்த சாலையிலும், சிக்னல்களிலும் எளிதில் கையாளக் கூடிய வாகனங்களை அவர்கள் விற்பனைக்கு வழங்குகின்றனர்.

அப்படி எந்த ஸ்கூட்டர் மாடல்கள் இந்தியாவில் உயரம் குறைவானவர்களை மையப்படுத்தி விற்பனைக்கு வழங்கப்படுகின்றன. அவற்றின் உயரமும், விலையும் எவ்வளவு என்கிற தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அத்தோடு, இருசக்கர வாகனங்களின் சிறப்புகள் பற்றிய தகவலையும் இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

Scooters with lowest seat height

டிவிஎஸ் ஜெஸ்ட் 110 (TVS Zest 110): உயரம் குறைவானவர்களுக்கு ஏற்ற இருசக்கர வாகனமாக டிவிஎஸ் ஜெஸ்ட் இருக்கின்றது. இந்தியாவின் மலிவு விலை ஸ்கூட்டராகவும் இது இருக்கின்றது. இதன் உயரம் 760 மிமீ ஆகும். நம்முடைய இந்த பட்டியலிலேயே மிகவும் உயரம் குறைவான ஸ்கூட்டர் இதுவே ஆகும். வேறு எந்த ஸ்கூட்டரும் இந்த அளவு உயரம் குறைவாக இருக்காது.

டிவிஎஸ் ஜெஸ்ட் ஸ்கூட்டரில் 109.7 சிசி சிங்கிள் சிலிண்டர் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் சிங்கிள் சிலண்டர், ஏர் கூல்டு, எஃப்ஐ மோட்டார் ஆகும். இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 7.7 பிஎச்பியையும், 8.8 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

Tvs zest

டிவிஎஸ் நிறுவனம் வெகு விரைவில் ஸ்கூட்டி ஸ்கூட்டரை விற்பனையில் இருந்து அகற்ற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அது வெளியேற்றப்பட்டாலும், ஜெஸ்ட் விற்பனையில் இருக்கும். இப்போதைய நிலவரப்படி ரூ. 73,036க்கு இது விற்கப்பட்டு வருகின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

Hero pleasure plus

ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் (Hero Pleasure Plus): டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் ஸ்கூட்டருக்கு அடுத்தபடியாக ஹீரோ பிளஷ்ஷர் அதிகம் உயரம் குறைவான ஸ்கூட்டராக இருக்கின்றது. இதன் உயரம் 765மிமீ ஆகும். இந்த ஸ்கூட்டரில் 110.9சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 7.9பிஎச்பி பவரையும், 8.7என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் விலை ரூ.68,368 ஆகும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

Honda activa

ஹோண்டா ஆக்டிவா (Honda Activa): இந்த ஸ்கூட்டரை பயன்படுத்தாதவர்கள் சிலர் இதை அதிகம் உயரம் கொண்டது என நினைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், இதன் ஒட்டுமொத்த உயரமே 765 மிமீ-தான். இந்தியாவில் இந்த ஸ்கூட்டர் ரூ. 75,347 தொடங்கி ரூ. 78,920 வரையில் விற்கப்படுகின்றது. 110 சிசி மற்றும் 120 சிசி என இரு விதமான மோட்டார் தேர்வுகளில் இது விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Tvs jupiter

டிவிஎஸ் ஜுபிடர் (TVS Jupiter): இந்த ஸ்கூட்டரும் ஹோண்டா ஆக்டிவாவை போல் 110 சிசி மற்றும் 125 சிசி என இரு விதமான மோட்டார் ஆப்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதேபோல், அதன் உயரமும் ஹோண்டா ஆக்டிவாவை ஒத்ததாக இருக்கின்றது. ஆக்டிவாவிற்கு போட்டி அளிக்க வேண்டும் என்பதற்காக பல விஷயங்களில் அதற்கு டஃப் கொடுக்கும் விதமாக டிவிஎஸ் ஜுபிடரை உருவாக்கி இருக்கின்றது.

இதன் விலை ரூ. 71,390 - ரூ 82,825 ஆகும். இவையும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் 110 சிசி ஜுபிடர் அதிகபட்சமாக 7.7 பிஎச்பி பவரையும், 125 சிசி ஜுபிடர் 8 பிஎச்பி பவரையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

Honda grazia

ஹோண்டா கிரேஸியா 125 (Honda Grazia 125): உயரம் குறைவானவர்களுக்கான ஹோண்டாவின் மற்றுமொரு தயாரிப்பே இந்த ஸ்கூட்டர் மாடல் ஆகும். இதன் அதிகபட்ச உயரம் 765 மிமீ ஆகும். இதன் விலை ரூ. 82,520 (எக்ஸ்-ஷோரூம் விலை) ஆகும். இந்த ஸ்கூட்டரில் 123.97 சிசி மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 8.19 பிஎச்பி பவரையும், 10.4 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். மேலும், இவையே இந்தியாவில் உயரம் குறைவானவர்களுக்கு ஏற்ற இருசக்கர வாகனம் ஆக விற்பனைக்குக் கிடைக்கின்றன. இல்லத்தரசிகள் (புடவை அணிபவர்கள்) தொடங்கி வயதானோர் வரை சுலபமாக பயன்படுத்துவதற்கு ஏற்ற வாகனங்களும் இவையே ஆகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 19, 2023, 8:36 [IST]
English summary
List of scooters suitable for short people
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X