இந்த எலெக்ட்ரிக் சைக்கிள்களுக்கு முன்னாடி பைக்கே வேஸ்ட்தாங்க! ஓட்ட ஆரம்பிச்சீங்க அதைவிட்டு இறங்கவே மனசு வராது!

இந்தியாவில் பைக்குகளுக்கே டஃப் கொடுக்கும் திறன் மற்றும் வசதிகளுடன் எலெக்ட்ரிக் மிதிவண்டிகள் சில விற்பனைக்குக் கிடைக்கின்றன. அவற்றின் லிஸ்டையும், அந்த இ-சைக்கிளின் சிறப்புகள் என்ன?, விலை என்ன? மற்றும் என்ன மாதிரியான பயன்பாட்டை அது வழங்கும்? என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளுக்குக் கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே மின்சாரத்தில் இயங்கும் மிதிவண்டிகளுக்கும் வரவேற்பு மிக அமோகமாகக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் விளைவாக இந்தியாவில் இ-சைக்கிள்கள் பரந்த அளவில் விற்பனைக்குக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றன. ஆனால், நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கும் அனைத்து மின்சார மிதிவண்டிகளையும் பெஸ்டானது என்று கூறிவிட முடியாது.

Top electric cycles in india

குறிப்பிட்ட சில மாடல்களே அதிக சிறப்புகள் வாய்ந்தவையாக இருக்கின்றன. அதேநேரத்தில், எலெக்ட்ரிக் பைக் மற்றும் ஸ்கூட்டர்களுக்கே டஃப் கொடுக்கக் கூடிய வசதிக் கொண்ட இ-சைக்கிள்களும் நம்முடைய நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அவற்றின் லிஸ்டையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

டெகத்லான் ராக்ரைடர் இ-எஸ்டி100 (Decathlon Rockrider E-ST100): பிரபல விளையாட்டு பொருட்கள் விற்பனை நிறுவனமான டெகத்லான், மிக சமீபத்திலேயே எலெக்ட்ரிக் சைக்கிள் விற்பனையில் தன்னுடைய கால் தடத்தைப் பதித்தது. இந்த நிறுவனம் ஆரம்பகட்டமாக பெங்களூருவில் மட்டுமே இ-சைக்கிள் விற்பனையைத் தொடங்கி இருக்கின்றது.

Decathlon rockrider e st100

நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் சைக்கிளாக ராக்ரைடர் இ-எஸ்டி100-ஐயே விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இதனால் பெடல் அசிஸ்ட் வசதியுடன் மணிக்கு 25 கிமீ வேகத்தில் செல்ல முடியும். இதற்காக 250W மோட்டார் ராக்ரைடர் இ-எஸ்டி100இல் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது 42 என்எம் டார்க்கை வரை வெளியேற்றும் திறன் கொண்டது.

இந்த இ-சைக்கிளில் சாம்சங் லித்தியம் அயன்-செல் பேட்டரியே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் விலை ரூ. 84,999 ஆகும். இது ஆரம்ப நிலை தேர்வின் விலை மட்டுமே ஆகும்.

Hero lector f6

ஹீரோ லெக்ட்ரோ எஃப்6ஐ (Hero Lectro F6i): இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக சிறந்த இ-சைக்கிள்களில் இதுவும் ஒன்றாகும். இதன் விலை ரூ. 56,999 என ஆகும். உயர் தொழில்நுட்ப வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் மிதிவண்டியாக இது காட்சியளிக்கின்றது.

அலாய் ஃப்ரேம் மற்றும் டூயல் டிஸ்க் பிரேக் என எக்கசக்க அம்சங்கள் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன. 36V/250W BLDC ஹப் மோட்டாரும், IP67 தர 36V கழட்டி மாட்டும் வசதிக் கொண்ட லித்தியம் அயன் பேட்டரியுமே எலெக்ட்ரிக் சைக்கிளில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. ஓர் முழு சார்ஜில் 60 கிமீ வரை ரேஞ்ஜ் தரும். நகர பயன்பாட்டிற்கு மிக சிறந்த எலெக்ட்ரிக் சைக்கிளாக லெக்ட்ரோ எஃப்6ஐ காட்சியளிக்கின்றது.

Emotorad emx

இமோட்டாராட் இஎம்எக்ஸ் (EMotorad EMX): இந்தியாவைச் இ-சைக்கிள் உற்பத்தி நிறுவனமே மோட்டாராட். இது விற்பனைக்கு வழங்கும் மிகவும் அட்டகாசமான எலெக்ட்ரிக் சைக்கிளாக இஎம்எக்ஸ் இருக்கின்றது. 36V 10.4 Ah லித்தியம் அயன் பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது முழுவதுமாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் 50 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இதேபோல், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 25 கிமீ ஆகும். இந்த வேக திறனுக்காக 250W ஹப் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. டூயல் சஸ்பென்ஷன், நேவிகேஷன் என எக்கசக்க அம்சங்கள் இமோட்டாராட் இஎம்எக்ஸ் இ-சைக்கிளில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதில் பைக்கைவிட மிக ஸ்மூத்தான ரைடிங் அனுபவத்தை பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Firefox urban eco

ஃபையர்ஃபாக்ஸ் அர்பன் ஈகோ (Firefox Urban Eco): இந்தியாவின் மிக சிறந்த சைக்கிள் தயாரிப்பாளர்களில் ஃபையர்ஃபாக்ஸும் ஒன்றாகும். இந்த நிறுவனத்தின்கீழ் விற்பனைக்குக் கிடைக்கும் மிக சூப்பரான எலெக்ட்ரிக் மிதிவண்டியாக அர்பன் ஈகோ இருக்கின்றது. நகர்புற பயன்பாட்டிற்கு உகந்த வாகனமாக இது தயார் செய்யப்பட்டு இருப்பதால் இதற்கு அர்பன் ஈகோ என பெயரிடப்பட்டு இருக்கின்றது.

ஜெர்மன் தொழில்நுட்பத்தை தழுவியே அர்பன் ஈகோ தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. இதன் விலை ரூ. 74,999 ஆகும். இந்த இ-சைக்கிளை எந்த மாதிரியான சாலையிலும் வைத்து பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. கரடு முரடான சாலையில்கூட இதை பயன்படுத்திக்க முடியும்.

Toutche electric heileo m200

டட்சே எலெக்ட்ரிக் ஹெய்லியோ எம்200 (Toutche Electric Heileo M200): இந்தியாவின் மிக சிறந்த எலெக்ட்ரிக் சைக்கிளாக இது காட்சியளிக்கின்றது. இதில் ஓர் முழு சார்ஜில் 60கிமீ தொடங்கி 80 கிமீ வரையில் பயணிக்க முடியும். இந்த ரேஞ்ஜ் திறனுக்காக 36V லித்தியம் அயன் பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதன் விலை ரூ. 55,900 ஆகும்.

டிரைவஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இதுபோன்று இன்னும் பல இ-சைக்கிள்கள் எலெக்ட்ரிக் பைக் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. மேலே பார்த்த இ-சைக்கிள்கள் அனைத்தும் அதிக உறுதியானவை மற்றும் பிரீமியம் வசதிகள் நிறைந்தவை எனவேதான் அதன் விலையும் இருசக்கர வாகனங்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, May 13, 2023, 18:44 [IST]
English summary
List of top 5 electric bicycles in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X