பட்டி டிங்கரிங் பார்த்து பட்டாசாக மாறிய பல்சர் என்எஸ்160 பைக்! என்னென்ன புதுசா இருக்குது தெரியுமா?

இந்திய இளைஞர்கள் அதிகம் பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் பைக்கை விரும்பி வருகின்றனர். இந்த பைக் நீண்ட ஆண்டுகளாக விற்பனையாகி வருகிறது. சிறு வயதில் இந்த பைக்கை வாங்க வேண்டும் எனக் கனவாக இருந்தவர்கள் எல்லாம் வளர்ந்து சம்பாதித்து இந்த பைக்கை சொந்தமாக வாங்கி வருகின்றனர். அந்த அளவிற்கு இந்த பைக் மக்களை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் பஜாஜ் நிறுவனம் இந்திய மார்கெட்டில் அப்டேட் செய்யப்பட்ட பல்சல் என்எஸ்200 மற்றும் என்எஸ்160 ஆகிய பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹார்டுவேர் மற்றும் காஸ்மெட்டிக்ஸ் அப்டேட்களை பெற்றுள்ளது. முக்கியமான ஒபிடி 2 இன்ஜினை பெற்ற பைக்காக இந்த பைக் களம் இறங்கியுள்ளது.

பட்டி டிங்கரிங் பார்த்து பட்டாசாக மாறிய பல்சர் என்எஸ்160 பைக்! என்னென்ன புதுசா இருக்குது தெரியுமா?

இதில் என்எஸ் 160 பைக் மக்கள் அதிகம் விரும்பும் பைக்காக இருக்கிறது. இதில் பழைய வெர்ஷனிலிருந்து புதிய பைக்கில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பைக்கில் கவனிக்கத்தக்க விஷயங்கள் அதிகம் இருக்கிறது. அதில் டாப் 5 விஷயங்களைப் பற்றிக் காணலாம் வாருங்கள்.

விலை: புதிய 2023 பஜாஜ் பல்சர் என்எஸ்160 பைக்கை பொருத்தவரை ரூ1.35 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்த விலை பழைய மாடல் பைக்கை விட ரூ10 ஆயிரம் அதிகமாகும். விலை அதிகமாக இருந்தாலும் இதில் புதிதாக வழங்கப்பட்டுள்ள அம்சங்கள் மற்றும் அப்டேட் செய்யப்பட்ட விஷயங்களைக் கணக்கிடும் போது ஒர்த் தான் எனத் தோன்றுகிறது.

பட்டி டிங்கரிங் பார்த்து பட்டாசாக மாறிய பல்சர் என்எஸ்160 பைக்! என்னென்ன புதுசா இருக்குது தெரியுமா?

அம்சங்கள்: புதிய 2023 பஜாஜ் பல்சர் என்எஸ்160 பைக்கை பொருத்தவரை முதலில் கவனிக்கத்தக்க விஷயம் என்றால் யூஎஸ்டி ஃபோர்க் தான். பழைய மாடலில் இல்லாத ஒரு அம்சமாக இது இருக்கிறது இது போக டூயல் சேனல் ஏபிஎஸ், அப்டேட்டட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் பொருத்தப்பட்டுள்ளது.

புதிதாக வழங்கப்பட்டுள்ள இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் டேங்கில் இருக்கும் பெட்ரோலில் இன்னும் எவ்வளவு தூரம் பைக் போகும் என்ற தகவல், ரியல் டைம் மைலேஜ் குறித்த தகவல்கள், கியர் போசிஷன் இன்டிகேட்டர் உள்ளிட்டவைகள் உள்ளது. இதன் மூலம் ரைடர்கள் பயணம் சுலபமாக அமையும் என்பதால் இதை வழங்கியுள்ளது.

பட்டி டிங்கரிங் பார்த்து பட்டாசாக மாறிய பல்சர் என்எஸ்160 பைக்! என்னென்ன புதுசா இருக்குது தெரியுமா?

இன்ஜின்: புதிய 2023 பஜாஜ் பல்சர் என்எஸ்160 பைக்கை பொருத்தவரை அப்ரேட்டட் 160.3 சிசி சிங்கிள் சிலிண்டர், ஆயில் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது ஆர்டிஇ எமிஷன் கட்டுப்பாடுகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 17 பிஎச்பி பவரையும், 14.6 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது.

டயர் மற்றும் பிரேக்குகள் : பல்சர் என்எஸ் 200 பைக்கில் உள்ளது போல 2023 பல்சர் என்எஸ் 160 பைக்கில் 17 இன்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 100/80 டயர்கள், பின்பக்கம் 130/70 டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. பிரேக்கிங்கை பொருத்தவரை முன்பக்கம் 300 மிமீ மற்றும் பின்பக்கம் 230 மிமீ டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.

எடை: புதிய யூஎஸ்டி ஃபோர்க்ஸ், அப்டேட் செய்யப்பட்ட இன்ஜின், டூயல் சேனல் ஏபிஎஸ், அப்டேட் செய்யப்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகிய அம்சங்களுடனும் இந்த பைக்க பழைய மாடல் பைக்கை விட வெறும் 1 கிலோ தான் அதிகமாகியுள்ளது. தற்போது இந்த பைக் 152 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது.

இந்த பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ் நீண்டநாட்களாக பல்சர் விரும்பிகள் எதிர்பார்த்த அம்சம், இதைக் கொண்டு வந்தது பாராட்டுகளைப் பெற்றுள்ளது. புதிய யூஎஸ்டி ஃபோர்க்கள் சிறப்பான பெர்ஃபாமென்ஸை வழங்கும் என எதிர்பார்க்கலாம். அதே நேரம் லுக்கும் சிறப்பாக இருக்கிறது. இந்த பைக் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 15, 2023, 18:30 [IST]
English summary
List of top 5 things in 2023 bajaj pulsar ns 160 bike
மேலும்... #bajaj auto
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X