ரிவர்ஸ் எடுக்கும்போது அசிஸ்டன்ட் போல உதவி பண்ணும்... டிவிஎஸ் ஐக்யூப்-க்கு சூப்பரான வில்லன் தயார்!
எல்எம்எல் நிறுவனம் இந்தியா ஆட்டோ எக்ஸ்போ 2023-இல் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்டாரை வெளியீடு செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
புகழ்பெற்ற இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான எல்எம்எல், அதன் மறு வருகையை மீண்டும் பதிவு செய்திருக்கின்றது. நிறுவனம் விரைவில் நடைபெற இருக்கும் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் அதன் மறு வருகையை பதிவு செய்ய இருப்பதாக சமீப சில நாட்களாக அறிவித்த வண்ணம் இருந்தது. இந்த அறிவிப்பையே நிறுவனம் தற்போது நிஜமாக்கியிருக்கின்றது. அதாவது 2023 ஆட்டோ எக்ஸ்போவின் இரண்டாம் நாளான இன்று (ஜனவரி 12) அதன் இந்தியாவிற்கான முதல் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்து தனது வருகையை உறுதிப்படுத்தி இருக்கின்றது.

பூஜ்ஜிய கட்டணத்தில் புக்கிங்
நிறுவனம் ஸ்டார் எனும் ஸ்கூட்டர் மாடலையே அறிமுகம் செய்துள்ளது. இது ஓர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். தற்போது இந்திய சந்தையில் விற்பனையில் இருக்கும் டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேத்தக் ஆகிய எலெக்ட்ரிக் ஸகூட்டர்களுக்கு போட்டியாக இதன் வருகை அமைந்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஏற்கனவே புக்கிங் தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. பூஜ்ஜியம் கட்டணத்திலேயே புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன.
இத்துடன், புதிய ஷோரூம்களை அமைக்கும் பணிகளையும் நிறுவனம் நாட்டில் மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையிலேயே எல்எம்எல் நிறுவனம் அதன் ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை 2023 ஆட்டோ எக்ஸ்போ வாயிலாக இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கின்றது. இதனை வழக்கமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் அல்ல என்பது குறிப்பிடத்தகுந்தது. ஸ்டார், ஓர் மேக்ஸி ரக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இதில் எக்கசக்க சிறப்பு தொழில்நுட்ப வசதிகளை எல்எம்எல் கொடுத்திருக்கின்றது.

அடேயப்பா இவ்ளோ சிறப்பம்சங்களா!!
தற்போது சந்தையில் நிலவும் போட்டியை உணர்ந்து மிக மிக அதிக நவீன கருவிகளை இந்த ஸ்கூட்டரில் எல்எம்எல் சேர்த்திருக்கின்றது. குறிப்பாக, 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, எல்இடி புரஜெக்டர் ரக ஹெட்லேம்ப், எல்இடி பகல்நேர மின் விளக்கு, ஹேப்டிக் ஃபீட்பேக் உள்ளிட்ட அம்சங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு உள்ளன. இதுமட்டுமில்லைங்க மனம் கவரும் அம்சம் என்று அழைக்கின்ற வகையில் ஓர் திரை ஸ்கூட்டரின் முன் பக்க ஏப்ரானில் வழங்கப்பட்டுள்ளது.
உணர்வுகளை வெளிப்படுத்தலாம்
இந்த திரை வாயிலாக ரைடர் தனது மூடை வெளிப்படுத்த முடியும். அதாவது மூடிற்கு ஏற்ப உணர்வுகளை வெளிப்படுத்த முடியும். இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் வாட்ஸ்-ஆப்பில் நண்பர்களுக்கு இமோஜியை அனுப்புவதுபோல் ஸ்கூட்டரின் முகப்பு பகுதியில் இமோஜிகளை நம்மால் தோன்ற செய்ய முடியும். ஹார்ட், ஸ்மைல் போன்ற சிம்பல்களைத் தோன்றச் செய்யலாம். இத்தகைய சூப்பரான மற்றும் தனித்துவமான அம்சங்களைக் கொண்ட இருசக்கர வாகனமாகவே எல்எம்எல் ஸ்டாரை உருவாக்கி இருக்கின்றது.

நவீன தொழில்நுட்ப வசதிகளுக்கு வரவேற்பு அதிகம்
இதுமட்டுமில்லைங்க ஆம்பியன்ட் லைட், இன்டெக்ரேட்டட் டிஆர்எல்கள், பேக் லைட்டுகள் மற்றும் இன்டிகேட்டர்களும் அதில் வழங்கப்பட்டிருக்கும். இதில் கொடுக்கப்பட்டிருக்கும் பல அம்சங்கள் வேறு ஸ்கூட்டரில் பார்க்கவே முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது. சந்தையில் சற்று போட்டி அதிகம் என்பதால் இந்த மாதிரியான சூப்பரான அம்சங்களை ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கி இருக்கின்றது. இந்தியர்கள் மத்தியில் அதிக தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட வாகனங்களுக்கு வரவேற்பு மிக அதிகம் அதன் காரணத்தினாலேயே யாருமே எதிர்பார்த்திராத அம்சங்களைக்கூட எல்எம்எல் அதன் ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கி இருக்கின்றது.
இதுமட்டுமில்லைங்க எல்எம்எல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பாதுகாப்பான ரைடிங்கிற்காக ஏபிஎஸ், ரிவர்ஸ் பார்க் அசிஸ்ட் (ரிவர்ஸ் எடுக்கும்போது ஓர் அசிஸ்டன்டை போல இது உதவி செய்யும்), டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம் போன்ற அம்சங்களைக்கூட எல்எம்எல் ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கி இருக்கின்றது. இதேபோல், பெரிய பூட் ஸ்பேஸும் இந்த ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன், ரைடர் தாராளமான ரைடிங் அனுபவத்தைப் பெறுவதற்கு ஏதுவாக கால் வைக்கும் இடத்தில் அதிக இட வசதி வழங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








