பொங்கலுக்குள்ள எல்எம்எல் இ-ஸ்கூட்டரை பாத்திடலாம்! ஓலா, ஹீரோ எலெக்ட்ரிக் நிலைமைதான் என்ன ஆக போகுதுனு தெரியல!

2கே கிட்ஸ்களுக்கு வேண்டுமானால் எல்எம்எல் எனும் பெயர் புதிதாக தெரியலாம். ஆனால், 70 மற்றும் 80களில் பிறந்தவர்களுக்கு இந்த பெயர் மிகவும் பரீட்சையமான ஒன்று. இந்தியாவின் இருசக்கர வாகன உலகில் கொடி கட்டி பறந்த நிறுவனங்களில் இதுவும் ஒன்று. ஆனால், இந்த நிறுவனம் இப்போது சந்தையில் இல்லை.

குறிப்பிட்ட சில காரணங்களுக்காக கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சந்தையைவிட்டு இது வெளியேறியது. இந்த நிலையில் இந்த புகழ்பெற்ற இருசக்கர வாகன உற்பத்தியாளர் மீண்டும் இந்திய சந்தையில் கால் தடம் பதிக்க இருப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கிறது. இதனை எல்எம்எல் நிறுவனம் அதன் சார்பில் உறுதிப்படுத்தி இருக்கின்றது. இந்த கடந்த முறை போலில்லாமல், இம்முறை எலெக்ட்ரிக் இருசக்கர வாகன பிரிவை மையமாகக் கொண்டு களமிறங்க இருக்கின்றது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நிறுவனம் தயார் நிலையில் வைத்துள்ளது. அதாவது, தனது இந்தியாவிற்கான முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை நாட்டில் வெளியீடு செய்வதற்கு எல்எம்எல் நிறுவனம் ரெடியாக இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே நிறுவனம் விரைவில் இந்தியா நடைபெற இருக்கும் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் அதன் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்த உலகிற்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எல்எம்எல் நிறுவனம் சுமார் 500 கோடி ரூபாய் முதலீட்டில் இந்தியாவில் தன்னுடைய வாகன உற்பத்தி பணிகளைத் தொடங்கி இருக்கின்றது. நிறுவனம் தற்போது விற்பனையில் இருக்கும் பிற மின்சார இருசக்கர வாகனங்களைக் காட்டிலும் தங்களுடைய தயாரிப்புகள் அனைத்தும் உயர் தொழில்நுட்ப வசதிக் கொண்டதாக இருக்கும் என தெரிவித்துள்ளது. அண்மையில் இதுகுறித்து பேசிய நிறுவனத்தின் சிஇஓ யோகேஷ் பாத்யா இந்த தகவலை உறுதிப்படுத்தினார். எல்எம்எல் நிறுவனம் முதலில் ஸ்டார் எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையே இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது.

இதையே இன்னும் சில தினங்களில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் எல்எம்எல் காட்சிப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, எல்இடி லைட்டுகள் மற்றும் ஜிபிஎஸ் கருவி, அட்ஜஸ்டபிள் இருக்கை, இன்டரேக்டீவ் திரை, ஃபோட்டே சென்சிட்டீவ் ஹெட்லேம்ப் என பற்பல அம்சங்கள் இடம் பெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்று இன்னும் பல ஆச்சரியமளிக்கும் அம்சங்கள் ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஸ்டார் ஓர் மேக்ஸி ரக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இந்த ரக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பட்ஜெட் இதுவரை இந்தியாவில் விற்பனைக்கு வரவில்லை. ஆகையால், இந்த ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வரும் எனில், இதுவே நாட்டின் முதல் பட்ஜெட் விலை மேக்ஸி ரக எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கும். ஏற்கனவே இந்த இருசக்கர வாகனத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.

இந்த மாதிரியான சூழலிலேயே எல்எம்எல் நிறுவனம் இதனை 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. விரைவில் இது பற்றிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2023 ஆட்டோ எக்ஸ்போ இந்த மாதம் 12 ஆம் தேதி தொடங்கி 15 ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. தலைநகர் டெல்லியில் உள்ள பிரகதி வளாகத்திலேயே இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.

எல்எம்எல் நிறுவனம் மட்டுமின்றி டாடா மோட்டார்ஸ் பல முன்னணி நிறுவனங்களும் தங்களின் எதிர்கால தயாரிப்புகளை இந்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்த திட்டமிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. எல்எம்எல் நிறுவனம் ஒட்டுமொத்த இந்திய சந்தையில் மூன்று எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. ஸ்டார், மூன்ஷாட் மற்றும் ஓரியன் ஆகியவையே அவை ஆகும். இதில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு ஏற்கனவே நாட்டில் புக்கிங் பணிகள் தொடங்கிவிட்டன.

ஆன்லைன் வாயிலாக புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. இதுதவிர, நாடு முழுவதும் 100 விற்பனையகங்களை அமைக்கும் பணியிலும் எல்எம்எல் களமிறங்கி இருக்கின்றது. இவற்றின் வாயிலாகவும் புக்கிங்குகள் ஏற்கப்பட உள்ளன. பூஜ்ஜியம் கட்டணத்திலேயே எல்எம்எல் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன் பதிவுகளை ஏற்று வருகின்றது. பொதுவாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் சில ஆயிரக் கணக்கான ரூபாயை புக்கிங்கிற்காக வசூலிக்கும். ஓலா மற்றும் ஏத்தர் போன்ற முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் ரூ. 999 எனும் முன்தொகையில் புக்கிங்குகளை ஏற்று வருகின்றன.

இந்த நிறுவனங்களைப் போல் இல்லாமல் 0 கட்டணத்தில் புக்கிங்கை எல்எம்எல் ஏற்கத் தொடங்கி இருப்பது இந்தியர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. எல்எம்எல் ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு வரும்பட்சத்தில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐக்யூப், ஏத்தர் 450 எக்ஸ், ஓலா எஸ்1 ப்ரோ மற்றும் ஹீரோ விடா ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு கடுமையான போட்டியாளனாக இருக்கும். எல்எம்எல் நிறுவனம் ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரைத் தொடர்ந்து அடுத்தடுத்ததாக இன்னும் பல மின்சார வாகனங்களை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் எல்எம்எல் இருசக்கர வாகன பிரியர்களை குஷியில் ஆழ்த்தி உள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, January 2, 2023, 18:47 [IST]
English summary
Lml star e scooter auto expo 2023
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+