ஓலா, ஏத்தர் கதையை முடிக்க நாளை அறிமுகமாகிறது எல்எம்எல் ஸ்டார் இ-ஸ்கூட்டர்! இருக்கு தரமான சம்பவம் காத்திருக்கு!

பிரபல எல்எம்எல் நிறுவனம் இந்திய மின் வாகன சந்தையில் கால் தடம் பதிக்கும் விதமாகவும், அதன் மறு வருகையை உறுதிப்படுத்தும் விதமாகவும் நாளைய தினம் இந்தியால் ஓர் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியீடு செய்ய இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மறு வருகை உறுதி

இந்தியாவின் மின் வாகன பிரிவில் ஓலா, ஏத்தர் மற்றும் ஹீரோ எலெக்ட்ரிக் ஆகிய நிறுவனங்களின் ஆதிக்கம் மிக பெரிய அளவில் உள்ளது. இவற்றிற்கு போட்டி அளிக்கும் விதமாகவே விரைவில் எல்எம்எல் நிறுவனம் அதன் கால் தடத்தை இந்தியாவில் பதிக்க இருக்கின்றது. இந்தியாவில் கொடிக்கட்டி பறந்த நிறுவனங்களில் எல்எம்எல் (LML)-ம் ஒன்று. இந்த நிறுவனம் அதன் இந்திய மறு வருகையை சென்ற ஆண்டு செப்டம்பரில் உறுதிப்படுத்தியது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

மின்சார ஸ்கூட்டர்தான் ஃபர்ஸ்ட்

இதைத்தொடர்ந்து, புதிய தயாரிப்புகளை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் அது தீவிரமாகக் களமிறங்கியது. நிறுவனம் இந்திய சந்தையில் முதலில் ஸ்டார் எனும் எலெக்ட்ரிக் வாகனத்தையே முதலில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இது ஓர் மின்சார ஸ்கூட்டர் ஆகும். இதன் வெளியீட்டு நிகழ்வே நாளைய தினம் இந்திய அரங்கேற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை நிறுவனம் அதன் சார்பாக உறுதிப்படுத்தி இருக்கின்றது.

எங்கு அறிமுகம் செய்ய போறாங்க

தலைநகர் டெல்லியில் உள்ள பெல்-லா மாண்டே ஹோட்டலில் ஜிஐசிடபிள்யூ பேஷன் வீக் நாளை நடைபெற இருக்கின்றது. இந்த நிகழ்விலேயே ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு செய்யப்பட இருக்கின்றது. இதுவே எல்எம்எல் நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொதுவெளியில் காட்சிப்படுத்துவது முதல் முறை ஆகும். இதுமட்டுமில்லைங்க விரைவில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவிலும் இந்த இருசக்கர வாகனம் காட்சிப்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஜனவரி 13 தொடங்கி 18 வரையில் இந்த நிகழ்வு டெல்லியில் நடைபெற இருக்கின்றது. ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இருசக்கர வாகன உற்பத்தியை எல்எம்எல் நிறுவனம் கையில் எடுத்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. சுமார் 500 கோடி முதலீட்டில் மின் வாகன உற்பத்தி பணியை நிறுவனம் மேற்கொள்ள இருக்கின்றது. நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நாடு முழுவதும் விற்பனைக்குக் கொண்டு வரும் விதமாக 100க்கும் மேற்பட்ட ஷோரூம்களை அமைக்கும் பணியில் அது களமிறங்கி இருக்கின்றது.

ஸ்டாரோட முடிய போறது இல்ல

நாட்டின் அனைத்து முக்கிய நகர்புற பகுதிகளிலும் ஷோரூம்கள் அமைக்கப்பட இருக்கின்றன. எல்எம்எல் நிறுவனம் ஸ்டார் மட்டுமின்றி இன்னும் பல இருசக்கர வாகனங்களை இந்திய சந்தையில் அறிமகும் செய்ய இருக்கின்றது. அந்தவகையில், ஸ்டாரைத் தொடர்ந்து மூன்ஷாட் மற்றும் ஒரியன் ஆகிய எலெக்ட்ரிக் டூ-வீலர் கள் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றன. இதில் ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரே விரைவில் இந்திய மின்வாகன சந்தையை அலங்கரிக்க இருக்கின்றது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

இந்க வாகனத்திற்கான புக்கிங் பணிகள் ஏற்கனவே நாட்டில் தொடங்கிவிட்டன. 0 கட்டண தொகையில் புக்கிங்கை எல்எம்எல் ஏற்கத் தொடங்கி இருக்கின்றது. இது இந்தியர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. எல்எம்எல் ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு வரும்பட்சத்தில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஓலா எலெக்ட்ரிக், ஹீரோ எலெக்ட்ரிக், பஜாஜ், டிவிஎஸ் ஐக்யூப், ஏத்தர் 450 எக்ஸ், ஓலா எஸ்1 ப்ரோ மற்றும் ஹீரோ விடா ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு கடுமையான போட்டியாளனாக இருக்கும்.

ஸ்டார்ல இவ்ளோ வசதிகள் இடம் பெற போகுதா

எல்எம்எல் நிறுவனம் ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரைத் தொடர்ந்து அடுத்தடுத்ததாக இன்னும் பல மின்சார வாகனங்களை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் எல்எம்எல் இருசக்கர வாகன பிரியர்களை குஷியில் ஆழ்த்தி உள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, எல்இடி லைட்டுகள் மற்றும் ஜிபிஎஸ் கருவி, அட்ஜஸ்டபிள் இருக்கை, இன்டரேக்டீவ் திரை, ஃபோட்டே சென்சிட்டீவ் ஹெட்லேம்ப் என பற்பல அம்சங்கள் இடம் பெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபோன்று இன்னும் பல ஆச்சரியமளிக்கும் அம்சங்கள் ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம் பெற இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அண்மையில் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த நிறுவனத்தின் சிஇஓ-வும் இந்த தகவலை உறுதிப்படுத்தினார். ஸ்டார் ஓர் மேக்ஸி ரக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இந்த ரக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுவரை இந்தியாவில் விற்பனைக்கு வரவில்லை. ஆகையால், இந்த ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வரும் எனில், இதுவே நாட்டின் முதல்மேக்ஸி ரக எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, January 5, 2023, 17:54 [IST]
English summary
Lml star e scooter debut
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+