சென்னையில் திறக்கப்படும் எல்எம்எல் ஷோரூம்?.. கொண்டாட்டத்தில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன காதலர்கள்!
எல்எம்எல் நிறுவனம் வெகு விரைவில் அதன் மறு வருகையை பதிவு செய்ய இருக்கின்றது. மறு பிறவி எடுக்க இருப்பதை முன்னிட்டு நிறுவனம் நாடு முழுவதும் ஷோரூம்களை அமைக்கும் பணியில் களமிறங்கி இருக்கின்றது. முதலில் 50க்கும் மேற்பட்ட ஷோரூம்களை திறக்க அது திட்டமிட்டு இருக்கின்றது.
அனைத்தும் இந்தியாவின் முக்கிய நகரங்களை மையமாகக் கொண்டு திறக்கப்பட உள்ளன. அந்தவகையில் தமிழகத்தின் தலைநகரான நமது சென்னையிலும் எல்எம்எல் ஷோரூம் அமைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. தற்போது நிறுவனம் 50 ஷோரூம்களை விரைவில் திறக்க இருப்பதாக மட்டுமே தகவல்கள் வெளியாகி உள்ளன.

எல்எம்எல் நிறுவனத்திற்கு இந்தியாவில் அறிமுகம் தேவையில்லை. ஏற்கனவே இந்திய இருசக்கர வாகன பிரிவில் சக்கைப்போடு போட்ட நிறுவனமே இந்த எல்எம்எல் ஆகும். இந்த பழம் தின்னு கொட்டைபோட்ட நிறுவனம் இந்த முறை பெட்ரோல் வாகனங்களுக்கு பதிலாக மின்சார இருசக்கர வாகனங்களை மட்டுமே விற்பனைக்கு வழங்க இருக்கின்றது.
நிறுவனம் ஸ்டார் எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையே இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்க இருக்கின்றது. இதன் இந்திய வருகையை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கடந்த ஜனவரியில் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியது. இதுவே இந்தியாவில் எல்எம்எல் ஸ்டார் முழுமையாக காட்சியளித்தது முதல் முறையாகும்.

இந்த மாடல் மட்டுமின்றி இன்னும் சில எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் விற்பனைக்கு களமிறக்கப்பட உள்ளன. டீலர்களே ஆபரேட் செய்யும் டீலர்களுக்கு சொந்தமான ஷோரூம்களாக நிறுவனத்தின் புதிய விற்பனையகங்கள் செயல்பட இருக்கின்றன. இந்த விற்பனையகங்கள் கூடிய விரைவிலேயே செயல்பாட்டிற்கு வர இருக்கின்றன. எல்எஸ்எல் ஸ்டார் மிட்-மேக்ஸி ரக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும்.
இதுவரை எந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் இடம் பெறாத அம்சங்களை இதில் எல்எம்எல் வழங்கி இருக்கின்றது. 360 டிகிரி கேமிரா, எல்இடி பகல் நேர மின் விளக்கு, எல்இடி புரஜெக்டர் ரக ஹெட்லேம்ப் உள்ளிட்ட அம்சங்களே இதில் கொடுக்கப்பட்டு இருக்கும். இதுதவிர இமோஜிகளை வெளிக்கொணரும் திரையும் இந்த ஸ்கூட்டரின் முன் பக்கத்தில் வழங்கப்பட்டு இருக்கும்.

இது போன்று இன்னும் பல தனித்துவமான அம்சங்களைத் தாங்கிய வாகனமாகவே எல்எம்எல் ஸ்டார் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றது. ஒயர்லெஸ் சார்ஜிங், ஆம்பியன்ட் லைட், டிஜிட்டல் திரை, செல்போன் இணைப்பு உள்ளிட்ட அம்சங்களும் ஸ்டார் மின்சார ஸ்கூட்டரில் இடம் பெற இருக்கின்றன.
இதுதவிர, டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஹில் ஹோல்டு அசிஸ்ட், ரிவர்ஸ் மோட் மற்றும் ஏபிஎஸ் போன்றவையும் அதிலம் இடம் பெற இருக்கின்றது. இந்த ஸ்கூட்டரில் என்ன மாதிரியான பேட்டரி பேக் பயன்படுத்தப்பட இருக்கின்றன என்பது பற்றிய விபரம் அறிவிக்கப்படவில்லை. இதுகுறித்த தகவல் வெகு விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளையில், கழட்டி மாட்டும் வசதிக் கொண்ட பேட்டரி பேக் இதில் பயன்படுத்தப்பட இருப்பது உறுதியாகி உள்ளது. இத்தகைய அம்சம் கொண்ட ஸ்கூட்டராகவே எல்எம்எல் ஸ்டார் வெகுவிரைவில் விற்பனைக்கு வர இருக்கின்றது. இவற்றை விற்பனைச் செய்யும் விதமாக நாட்டின் முக்கிய நகரங்களில் ஷோரூம்களை திறக்கும் முயற்சியில் நிறுவனம் களமிறங்கி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே எல்எம்எல் இந்திய மின் வாகன சந்தையில் கால் தடம் பதிக்கும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது. இந்த நிறுவனத்தின் பெட்ரோல் டூ-வீலர்களுக்கு கிடைத்ததைப் போலவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எங்களால் யூகிக்க முடிகின்றது.


Click it and Unblock the Notifications









