இந்தியாவின் பெஸ்ட் மைலேஜ் தரும் பைக்கை தேடிட்டு இருக்கீங்களா? இதுல 1ஐ வாங்கி போட்டீங்க காலத்துக்கும் பலன்தான்!
"இந்தியாவில் இவ்ளோ அதிகம் மைலேஜ் தரும் பைக்குகள்கூட விற்பனைக்குக் கிடைக்குதா" என வாயை பிளக்கச் செய்யும் அளவிற்கு அதிகம் மைலேஜ் தரும் 4பைக்குகளின் லிஸ்டையே இந்த பதிவில் வழங்கியுள்ளோம். விரிவான பதிவிற்குள் போகலாம், வாங்க.
குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை காத்திருக்கும் தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12 ஆம் தேதி அன்று கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் குட்டீஸ்கள் என்னென்ன பட்டாசுகளை வெடிக்கலாம் என இப்போதே பிளான் போட தொடங்கிவிட்டனர். ஒரு சிலர் பட்டாசுகளை இப்போதே வாங்கிக் குவிக்கவும் ஆரம்பித்துவிட்டனர். இதேபோல், பெரியவர்கள் இந்த நாளை புதிய வாகனங்களுடன் கொண்டாட பிளான் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு, புது வாகனத்தை வாங்கும் பிளானில் இருப்பவர்களுக்கு உதவும் விதமாக இந்தியாவின் மிக சிறந்த மைலேஜ் தரும் இருசக்கர வாகனங்களின் லிஸ்டையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். தற்போது விற்பனையில் இருப்பதிலேயே அதிகம் மைலேஜ் தரும் நான்கு வகையான பைக்குகளின் லிஸ்டையே இந்த பதிவில் வழங்கி உள்ளோம். வாருங்கள் அவைகுறித்த விரிவான தகவலைக் காணலாம்.
ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் (Hero Splender Plus): இந்தியர்களின் நம்பிக்கையைப் பெற்ற பைக் மாடலாக இது இருக்கின்றது. முப்பது ஆண்டுகளாக இந்தியாவில் இந்த பைக் விற்பனையில் இருந்துக் கொண்டிருக்கின்றது. மேலும், இப்போதும் நாட்டின் மிக சிறந்த டூ-வீலராக இருக்கின்றது. தரம் மற்றும் நீடித்து உழைக்கும் திறன் ஆகியவற்றை இந்த பைக் கொண்டிருப்பதனாலேயே அநேகர் மத்தியில் இந்த பைக்கிற்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இந்த பைக்கில் 97.2 சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஹீரோ ஸ்பிளெண்டர் ஒரு லிட்டருக்கு 60 கிமீ முதல் 80 கிமீ வரை மைலேஜ் தரும். இதன் எஞ்ஜின் திறன் 7.91பிஎச்பி மற்றும் 8.05என்எம் டார்க்காக உள்ளது. இந்த பைக் ரூ.74,641 தொடங்கி ரூ.75,701 வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. இவை எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். ஒட்டுமொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் இது விற்பனைக்குக் கிடைக்கின்றது.
பஜாஜ் பிளாட்டினா 100 (Bajaj Platina 100): இந்தியாவின் மற்றுமொரு மிக சிறந்த மற்றும் அதிகம் மைலேஜ் தரும் பைக் மாடலாக பஜாஜ் பிளாட்டினா இருக்கின்றது. இந்தியாவின் மிக சிறந்த 100 சிசி பைக்காகவும் இது காட்சியளிக்கின்றது. இந்த பைக் ஒரு லிட்டருக்கு 70 கிமீ மைலேஜ் தரும்.
இத்தகைய சூப்பரான மைலேஜை தரும் இந்த பைக்கின் விலையோ மிக குறைவு என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா. ரூ. 69,638 இதுவே பைக்கின் ஆரம்ப விலை ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பைக்கில் 102 சிசி எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இதனால் 7.79 பிஎச்பி மற்றும் 8.30 என்எம் டார்க்கை வெளியேற்றும். தோற்றத்தில் மிக எளிமையாக இந்த பைக் தென்பட்டாலும் மைலேஜ் தருவதில் மிக சிறந்த பைக்காக இது காட்சியளிக்கின்றது. இது மலிவு விலையைக் கொண்டிருப்பதாலும், அதிக மைலேஜைக் கொண்டிருப்பதாலும் மக்கள் பலர் இந்த பைக்கை வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.
டிவிஎஸ் ரேடியான் (TVS Radeon): டிவிஎஸ் நிறுவனத்தின் மிக மிக சிறந்த மற்றும் எளிய மக்களுக்கான பைக்காக இது இருக்கின்றது. தினசரி பயன்பாட்டிற்கு உகந்த பைக்காக இது காட்சியளிக்கின்றது. இது ஓர் 110 சிசி பைக்காகும். இது அதிகபட்சமாக 70 கிமீ மைலேஜை வழங்கும். இந்த பைக்கின் ஆரம்ப விலை ரூ. 62,405 ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த விலைக்கே பலதரப்பட்ட அம்சங்களை டிவிஎஸ் வாரி வழங்கி இருக்கின்றது. இந்த பைக்கில் 109.7 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 8 பிஎச்பி மற்றும் 8.7 என்எம் டார்க்கை வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஹோண்டா ஷைன் 125 (Honda Shine 125): இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் மோட்டார்சைக்கிள்களில் இதுவும் ஒன்றாகும் இது மைலேஜ் விஷயத்திலும் பெஸ்டாக இருக்கின்றது ஒரு லிட்டருக்கு 65 கிமீ வரை மைலேஜ் தரும். இதில் பொருத்தப்பட்டு இருக்கும் மோட்டாரானது 123.9 சிசி திறன் கொண்டது ஆகும். 10.59 பிஎச்பி மற்றும் 11 என்எம் டார்க்கை வெளியேற்றும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த பைக்குகள் அனைத்தும் அதிகம் மைலேஜ் தரக் கூடியவை மட்டுமில்லைங்க. காலத்துக்கும் உழைக்கக் கூடியவையாகவும் காட்சியளிக்கின்றன. இத்தகைய திறனைக் கொண்டிருக்கின்ற காரணத்தினால்தான் இவற்றிற்கு வரவேற்பும் அதிகம். விலை, நீடித்த உழைப்பு மற்றும் அதிகம் மைலேஜை விரும்புவோர் இதில் ஏதேனும் ஒன்றை தேர்வு தாராளமாக தேர்வு செய்யலாம்.


Click it and Unblock the Notifications








