மலிவு விலை சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சோதனை ஓட்டத்தை தொடங்கியதா பஜாஜ்! வெளியாகிய படங்கள்!
பஜாஜ் (Bajaj) நிறுவனத்தின் புகழ்பெற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றாக சேத்தக் இவி (Chetak EV) இருக்கின்றது. இந்த ஒற்றை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை மட்டுமே பஜாஜ் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டு இருக்கின்றது. இது நிறுவனத்தின் சற்று காஸ்ட்லியான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாகும்.
இந்த மாடலில் மலிவு விலை தேர்வை விற்பனைக்குக் கொண்டு வரும் பணிகளிலேயே பஜாஜ் சமீப சில காலமாக ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே பஜாஜ் நிறுவனத்தின் அந்த மலிவு விலை சேத்தக் இவி ஸ்பை செய்யப்பட்டு இருக்கின்றது (கேமிராவின் கண்களில் சிக்கி இருக்கின்றது).

நிறுவனம் விலை குறைவான சேத்தக்கை தீவிரமாக சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்திக் கொண்டிருக்கும் அது கேமிராவின் கண்களில் சிக்கி இருக்கின்றது. இதன் வாயிலாக நிறுவனம் மலிவு விலை சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் தீவிரமாகக் களமிறங்கி இருப்பது தெளிவாக தெரிகின்றது.
தற்போது விற்பனையில் இருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரைக் காட்டிலும் குறைவான விலையில் புதிய தேர்வை விற்பனைக்குக் கொண்டு வருவதற்காக அதில் காஸ்ட் கட்டிங் வேலை பலவற்றை பஜாஜ் செய்திருக்கின்றது. அந்தவகையில், மிட்-மவுண்ட் எலெக்ட்ரிக் மோட்டாருக்கு பதிலாக, புதிய தேர்வில் ஹப் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இதனால், மிகப் பெரிய அளவில் செலவு குறைப்பை அது செய்திருக்கின்றது. தொடர்ந்து, செலவை குறைக்கும் விதமாக பிளாஸ்டிக் பாடி பேனல்களையும் புதிய சேத்தக்கில் பயன்படுத்தி இருக்கும் என தெரிகின்றது. இதுபோன்று இன்னும் பல வேலைகளை புதிய சேத்தக்கில் எதிர்பார்க்கலாம். ஆனால், அது என்னென்ன மாதிரியான மாற்றங்களை செய்திருக்கின்றது என்பது பற்றிய விபரங்கள் துள்ளியமாக இதுவரை அறவிக்கப்படவில்லை.
இதுகுறித்த தகவல்கள் அடுத்தடுத்து வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதே சமயத்தில், இந்த மாற்றங்களால் சேத்தக்கின் கவர்ச்சியான தோற்றத்தில் எந்த மாற்றமும் அரங்கேறவில்லை என கூறப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே தற்போது வெளியாகி இருக்கும் ஸ்பை படங்களும் அமைந்து இருக்கின்றது.

மேலும், பஜாஜ் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் விலையை குறைக்கும் விதமாக பல்வேறு மாற்றங்களைச் செய்திருந்தாலும், அது போட்டியாளர்களுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சிறப்பு வசதிகளை வழங்குவதில் எந்த கஞ்சத் தனமும் காட்டவில்லை என கூறப்படுகின்றது. ஆகையால், பிரீமியம் அம்சங்களுக்கு இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சற்றும் பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கலாம்.
தொடர்ந்து பேட்டரி பேக்கை பொருத்த வரை 2.9 kWh திறன் கொண்டதே எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் ஓர் முழு சார்ஜில் 100 கிமீ முதல் 120 கிமீ வரையிலான ரேஞ்ஜ் திறனை எதிர்பார்க்கலாம். இதன் வருகை ஓலா மற்றும் ஏத்தர் எனெர்ஜி நிறுவனங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மிகக் கடுமையான போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இப்போது விற்பனையில் இருக்கும் பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 1.30 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஓர் முழு சார்ஜில் 108 கிமீ ரேஞ்ஜை பெற்றுக் கொள்ள முடியும்.
மேலும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 63 கிமீ ஆகும். இதன் பேட்டரிகளை சார்ஜ் செய்ய 5 மணி நேரங்களே போதுமானது ஆகும். இதுதவிர, இணைப்பு வசதி, ஸ்டீல் பாடி, மழை நீரில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வசதி, ப்ளூடூத் இணைப்பு, திருட்டைத் தவிர்க்கும் தொழில்நுட்பம் என ஏகப்பட்ட அம்சங்கள் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியர்கள் மத்தியில் விலை குறைவான இருசக்கர வாகனங்களுக்கு மவுசு அதிகம். இதை உணர்ந்தே இருசக்கர வாகன உற்பத்தியாளர்களான ஏத்தர், ஓலா ஆகிய நிறுவனங்களும் கூட மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்குக் கொண்டு வந்தன. இவற்றைத் தொடர்ந்தே தற்போது பஜாஜும் இந்த பணியில் களமிறங்கி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









