மேட்-இன்-இந்தியா பைக்கை நம்பி வாங்கும் ஜப்பான் மக்கள்!! இந்திய தயாரிப்புகளுக்கு உலக அரங்கில் கூடும் மவுசு!!

சுஸுகி மோட்டார்சைக்கிள் (Suzuki Motorcycle) நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 2023 வி-ஸ்ட்ரோம் எஸ்.எக்ஸ்250 பைக்கை ஜப்பானில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் விற்பனையில் இருக்கும் அதே எஸ்.எக்ஸ்250 மோட்டார்சைக்கிள் தான் ஜப்பான் நாட்டு சந்தையில் களமிறங்கப்பட்டு உள்ளது. இந்த சுஸுகி பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.

ஜப்பான் நாட்டை சேர்ந்த பிரபலமான 2-வீலர் பிராண்ட்களுள் ஒன்று சுஸுகி மோட்டார்சைக்கிள் ஆகும். இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளில் சுஸுகியின் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக நம் இந்தியாவை பொறுத்தவரையில், வாகனங்களை விற்பனை செய்ய ஏற்ற சந்தையாக பார்ப்பது மட்டுமின்றி, உற்பத்தி மையமாகவும் நம் நாட்டை சுஸுகி கருதுகிறது.

suzuki v-strom exported to japan

சுஸுகி வி-ஸ்ட்ரோம் எஸ்.எக்ஸ்250 மோட்டார்சைக்கிள் இந்திய கஸ்டமர்ஸை டார்க்கெட் செய்து கடந்த 2022இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனிஷியா என முக்கிய தெற்காசிய நாடுகளுக்கும் சுஸுகி வி-ஸ்ட்ரோம் எஸ்.எக்ஸ்250 பைக் கொண்டு செல்லப்பட்டது. பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனிஷியா நாடுகளில் இந்த பைக்கை புக் செய்பவர்களுக்கு இந்தியாவில் உருவாக்கப்படும் எஸ்.எக்ஸ்250 பைக்குகள் தான் கொண்டு செல்லப்படுகின்றன.

பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனிஷியா வரிசையில் தற்போது ஜப்பானும் இணைந்துள்ளது. சுஸுகியின் தாயகமான ஜப்பானில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மோட்டார்சைக்கிள் விற்பனை செய்யப்பட உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஜப்பான் நாட்டு சந்தையில் எஸ்.எக்ஸ்250 பைக்கின் விலையாக 569,800 யென் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.3.26 லட்சம் ஆகும்.

suzuki v-strom exported to japan

அதுவே, இந்தியாவில் இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.2.14 லட்சமாக தற்சமயம் உள்ளது. இந்தியாவில் குறைந்த விலையில் கிடைத்துவரும் அட்வென்ச்சர் பைக்குகளுள் ஒன்றாக வி-ஸ்ட்ரோம் எஸ்.எக்ஸ்250 விளங்குகிறது. இந்தியாவில் இருந்து ஜப்பானுக்கு கொண்டு செல்லப்படும் வி-ஸ்ட்ரோம் எஸ்.எக்ஸ்250 பைக்குகள், அங்கு பைக்கை புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வருகிற ஆகஸ்ட் 24ஆம் தேதியில் இருந்து டெலிவிரி செய்யப்பட உள்ளதாக சுஸுகி தெரிவித்துள்ளது.

ஆனால் ஆகஸ்ட் 24ஆம் தேதிக்கு முன்பாகவே எஸ்.எக்ஸ்250 பைக்கை ஜப்பான் வாடிக்கையாளர்கள் டெஸ்ட் ரைடு செய்து பார்க்க ஆரம்பித்துவிடுவர். ஜப்பானின் எஸ்.எக்ஸ்250 பைக்குடன் ஒப்பிடுகையில் இந்திய மாடல் 3 கிலோ எடைமிக்கதாக உள்ளது. இதை தவிர்த்து, இந்திய எஸ்.எக்ஸ்250 பைக்கிற்கும், ஜப்பானில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வி-ஸ்ட்ரோம் எஸ்.எக்ஸ்250 பைக்கிற்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை.

suzuki v-strom exported to japan

எஸ்.எக்ஸ்250 பைக்கில் 249சிசி சிங்கிள்-சிலிண்டர், ஆயில்-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 9,300 ஆர்பிஎம்-இல் 25 பிஎச்பி மற்றும் 7,300 ஆர்பிஎம்-இல் 22 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. அட்வென்ச்சர் பைக் என்பதால், எஸ்.எக்ஸ்250-இல் முன் சக்கரம் 19-இன்ச்சிலும், பின் சக்கரம் 17-இன்ச்சிலும் வழங்கப்படுகின்றன.

இந்த பைக்கில் 10-ஸ்போக் காஸ்ட் அலுமினியம் சக்கரங்கள், ட்யூயல்-பர்பஸ் டயர்கள் உடன் பொருத்தப் படுகின்றன. சஸ்பென்ஷனுக்கு பைக்கின் முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் 7-ஸ்டெப் ப்ரீலோடு அட்ஜெஸ்டபிள் மோனோஷாக்கும் இடம்பெறுகின்றன. பிரேக்கிங் பணியை கவனித்துக் கொள்ள இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்படுகின்றன. அத்துடன், ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் அம்சமும் இந்த பைக்கில் கொடுக்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ஒரு காலத்தில் சுஸுகி, யமஹா பைக்குகள் ஜப்பானில் உருவாக்கப்பட்டு இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டன. ஆனால், இன்றோ இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் எஸ்.எக்ஸ்250 பைக்குகள் ஜப்பான் வாடிக்கையாளர்களை சென்றடைய உள்ளன. இந்தியாவில் வாகனங்களை உற்பத்தி செய்வது மற்ற நாடுகளை காட்டிலும் செலவு குறைந்தது மற்றும் சவுகரியமானதும் கூட.

More from DriveSpark

Article Published On: Monday, August 14, 2023, 11:28 [IST]
English summary
Made in india suzuki v strom now exported to japan
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X