உலகை கலக்கும் தமிழ்நாட்டு தயாரிப்பு! அந்த நாட்டு மக்களே நம்மூர்ல தயாரிச்ச வண்டியை ஓட்ட போறாங்களா! கொல மாஸ்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் இரு சக்கர வாகனங்களில் ஒன்றாக ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 (Royal Enfield Super Meteor 650) திகழ்கிறது.
நடப்பு 2023ம் ஆண்டு ஜனவரி மாதம்தான், ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக் இந்திய சந்தையில் விற்பனைக்கு களமிறக்கப்பட்டது. இதை தொடர்ந்து அமெரிக்கா (USA) மற்றும் கனடா (Canada) ஆகிய நாடுகளில் சூப்பர் மீட்டியோர் 650 பைக் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய 2 நாடுகளிலும் ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் ஆரம்ப விலை (Price) 6,999 அமெரிக்க டாலர்களாக (US Dollars) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது தோராயமாக 5.82 லட்ச ரூபாய் ஆகும்.
அதே நேரத்தில் இந்த நாடுகளில் ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் டாப் மாடலின் விலை 7,299 அமெரிக்க டாலர்களாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது தோராயமாக 6.07 லட்ச ரூபாய் ஆகும். இந்த நேரத்தில் இந்திய சந்தையில் இந்த பைக்கின் விலை எவ்வளவு? என்பதையும் தெரிந்து கொள்வது நன்றாக இருக்கும்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் ஆரம்ப விலை 3.54 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் இதன் டாப் மாடலின் விலை 3.85 லட்ச ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலை என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
அமெரிக்க மற்றும் கனடா ஆகிய சந்தைகளில் விற்பனை செய்யப்படும் ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவது ஆகும். இங்கிருந்து அங்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. முன்னதாக இந்தியாவில் இருந்து இங்கிலாந்திற்கு (UK), ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதும் இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் ஆகும்.
அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய 2 சந்தைகளை பொறுத்தவரையில், ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக், மொத்தம் 3 வேரியண்ட்களில் (Variants) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அவை அஸ்ட்ரல் (Astral), இன்டர்ஸ்டெல்லர் (Interstellar) மற்றும் செலஸ்டியல் (Celestial) ஆகியவை ஆகும்.
இந்திய சந்தையில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 (Royal Enfield Interceptor 650) மற்றும் ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி 650 (Royal Enfield Continental GT 650) ஆகிய பைக்குகளில் பொருத்தப்பட்டுள்ள அதே இன்ஜின்தான், ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கிலும் கொடுக்கப்பட்டுள்ளது.
அது 648 சிசி பேரலல் ட்வின் இன்ஜின் ஆகும். அதிகபட்சமாக 46.2 பிஹெச்பி பவர் மற்றும் 52 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூன் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அஸிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச் வசதிகளும் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: 'மேட் இன் இந்தியா' பைக்குகள், அமெரிக்கா மற்றும் கனடா சாலைகளை கலக்கவிருப்பது நாம் பெருமை கொள்ள வேண்டிய ஒரு விஷயம்தான்! இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டின் (Tamil Nadu) சென்னை (Chennai) நகரில்தான், ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக் உற்பத்தி செய்யப்படுகிறது. இது நமக்கு இன்னும் கூடுதல் பெருமைதான்!


Click it and Unblock the Notifications








