ஓலாவுக்கு போட்டியாக மஹிந்திராவும் வர போகுதா!.. எல்லாரும் சேர்ந்து சுத்துபோட்டா இந்த ஓலா என்ன பண்ணுமோ!

இந்தியாவின் முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக ஓலா எலெக்ட்ரிக் உருவெடுத்து இருக்கின்றது. வாடகை வாகன சேவை நிறுவனமாக இந்தியாவில் கால் தடம் பதித்த ஓலா, தற்போது மிகப் பெரிய மிகப் பெரிய மின்சார வாகன உற்பத்தியாளராக மாறி இருக்கின்றது.

நிறுவனம் இப்போதைய நிலவரப்படி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இத்துடன் சேர்த்து வெகு விரைவில் எலெக்ட்ரிக் பைக் மற்றும் கார் உள்ளிட்டவற்றையும் அது விற்பனை செய்ய இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக அந்நிறுவனம் இ-பைக் மற்றும் மின்சார கார் தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றது.

Classic legends to launch affordable ebike

இவற்றில் முதலில் எலெக்ட்ரிக் பைக்கே விற்பனைக்கு வர இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட மின்சார பைக்குகளுக்கான வர்த்தக பதிவை ஓலா எலெக்ட்ரிக் இந்தியாவில் செய்தது. அதுதவிர, கான்செப்ட் மாடலாக உருவாக்கப்பட்ட பைக் சிலவற்றை அது காட்சிப்படுத்தியது.

ஆகையால், சரவெடி போல் அடுத்தடுத்து என பன்முக எலெக்ட்ரிக் பைக்குகளை ஓலா விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான மஹிந்திராவிற்குச் சொந்தமான கிளாசிக் லெஜண்ட்ஸ் ஓலாவிற்கு போட்டியாக சில பணிகளை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நிறுவனம், மிக மிக மலிவு விலையில் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றத. இதுகுறித்த தகவல்களே தற்போது வெளியாகி உள்ளன. கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் 2025-26 ஆம் நிதியாண்டில் 1000 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதை உறுதிப்படுத்தி இருக்கின்றது.

உலகளவில் தன்னுடைய பிராண்டை மேம்படுத்தும் வகையில் இந்த முதலீட்டை அது செய்ய இருக்கின்றது, கிளாசிக் லெஜண்ட்ஸ். கிளாசிக் லெஜெண்ட்ஸ் கீழே ஜாவா, யெஸ்டி மற்றும் பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிறுவனத்தின் ஏதேனும் ஓர் மாடலே விரைவில் எலெக்ட்ரிக் வெர்ஷனில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நிறுவனத்தின் மிகப் பெரிய முதலீட்டை அனுபம் தரேஜா உறுதி செய்திருக்கின்றார். கிளாசிக் லெஜண்ட்ஸின் நிறுவனர் இவர் ஆவார். புதிய முதலீடு வரவிருக்கும் தயாரிப்புகள் மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கான விநியோக வலையமைப்பை மேம்படுத்தும் நோக்கிலேயே செய்யப்பட இருக்கின்றது என்பதையும் அவர் உறுதி செய்திருக்கின்றார்.

இதன் வாயிலாக நிறுவனம் நஷ்டத்தில் இருந்து லாபத்தை நோக்கி நகரும் என நம்பப்படுகின்றது. இப்போதைய நிலவரப்படி நிறுவனம் பெரிய அளவில் லாபத்தையும் ஈட்டவில்லை. அதேவேளையில், அது நஷ்டமும் அடையவில்லை என கூறப்படுகின்றது. ஆகையால், புதிய முதலீட்டின் வாயிலாக வாடிக்கையாளர்களை இரட்டிப்பாக்கும் பணிகளையே அது மேற்கொள்ளும் என தெரிகின்றது.

உலகமே மின் வாகன பயன்பாட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே கிளாசிக் லெஜண்ட்ஸும் அதை நோக்கிய பயணத்தை தற்போது தொடங்கி இருக்கின்றது. இந்த நிறுவனம் யுனிவர்சிட்டி ஆஃப் வார்விக் உடன் இணைந்தே தன்னுடைய மிக மிக விலை குறைவான எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை தயாரித்துக் கொண்டு இருக்கின்றது.

இதை முதலில் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளிலேயே முதலில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. இதைத்தொடர்ந்தே,உலகின் பிற நாடுகளில் அது விற்பனைக்கு வர இருக்கின்றது. அந்தவகையில், இந்தியாவிலும் கிளாசிக் லெஜன்ட்ஸின் மலிவு விலை எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ வார்த்தைகள் எதுவும் நிறுவனத்திடம் இருந்து வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைக் காட்டிலும் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே எலெக்ட்ரிக் பைக்குகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இந்த நிலையை பூர்த்தி செய்யும் வகையில் விரைவில் கிளாசிக் லெஜண்ட்ஸ் அதன் மலிவ விலை இ-பைக்குகளை விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Sunday, September 17, 2023, 18:12 [IST]
English summary
Mahindra owned classic legends to launch affordable ev
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+