மஹிந்திராக்கு ரூ4.12 கோடி அபராதம்! என்ன காரணம் தெரியுமா?

மஹிந்திரா டூவீலர் நிறுவனத்திற்கு ரூபாய் 4.12 கோடி அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வருவதற்கு முன்பு உள்ள பரிவர்த்தனையை ஜிஎஸ்டிக்கு மாற்றியதில் செய்யப்பட்ட குழப்பங்கள் காரணமாகவும் ஜிஎஸ்டி பதிவின்போது ஆவணங்கள் சமர்ப்பித்தது தொடர்பாகவும் நடந்த குழப்படி காரணமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மஹிந்திரா நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை டூவீலர் தொழிலில் தீவிரமாக இருந்து வந்தது. இந்நிலையில் அந்நிறுவனம் கடந்து சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது டூவீலர் நிறுவனத்தை மஹிந்திரா நிறுவனத்துடன் இணைத்துக் கொண்டது. இந்நிலையில் மஹிந்திரா டூவீலர் நிறுவனத்திற்கு ஜிஎஸ்டி பதிவின்போது நடந்த குழப்பத்தின் காரணமாக நிறுவனத்திற்கு ரூபாய் 4.12 கோடி அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

mahindra two wheeler fine

மஹிந்திரா டூவீலர் நிறுவனம் ஜிஎஸ்டி என்பது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் முன்பே நடந்து வந்த நிறுவனம் ஆகும். இந்நிலையில் இந்தியாவில் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு ஜிஎஸ்டிக்குள் நிறுவனம் சேரும் போது சில தரவுகளை சமர்ப்பித்தது அதை தரவுகள் தொடர்பான குழப்பங்கள் இருந்ததால் நிறுவனத்திற்கு ரூபாய் 4,11,50,120 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அபதாரத்தை மகாராஷ்டிரா மாநிலம் இந்தூரில் உள்ள ஜிஎஸ்டியின் ஆடிட் பிரிவு துணை கமிஷனர் விதித்துள்ளார். தற்போது மஹிந்திரா டூவீலர் நிறுவனம் மஹிந்திரா நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால் மஹிந்திரா நிறுவனம் தான் தற்போது இந்த அவரது செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது நேரடியாக மஹிந்திரா நிறுவனத்திற்கு தான் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

mahindra two wheeler fine

இது மட்டுமல்ல இந்த அபராதம் குறித்து ஜிஎஸ்டி தரப்பில் இருந்து அளிக்கப்பட்ட விளக்கத்தின் போது மஹிந்திரா நிறுவனம் ஜிஎஸ்டி இன்புட் வழியாக சில பில்களுக்கான பலன்களை பெற்றுள்ளது. ஆனால் அந்த பில்களுக்கு அந்நிறுவனத்திடம் பணம் வசூலித்த நிறுவனங்கள் பதிவு செய்யவில்லை. அதனால் இது ஒரு முறை கேடாகவே கருதப்படுகிறது. இதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்றொரு காரணமும் இத்துடன் சேர்கிறது.

அதன்படி ஜிஎஸ்டி துவங்கப்பட்ட போது இதற்கு முன்னர் இருந்த கல்விக்கான கலால் வரியை ஜிஎஸ்டிக்கு முன்பு உள்ளதை தற்போது சேர்க்க முடியாது என அறிவித்திருந்தது. ஆனால் மஹிந்திரா நிறுவனம் அதிலிருந்து இதற்கு மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கும் சேர்த்து மொத்தமாக ரூபாய் 4.12 கோடி அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி தற்போது மஹிந்திரா நிறுவனத்திற்கு பெரும் இடியாக விழுந்துள்ளது.

mahindra two wheeler fine

இந்நிலையில் மஹிந்திரா நிறுவனம் இது குறித்து கூறும்போது இது குறித்து மேல்முறையீடு செய்துள்ளதாகவும் மஹிந்திரா நிறுவனத்திற்கு சாதகமான முடிவு வரும் எனவும், இந்த அபராத விதிப்பால் அந்நிறுவனத்திற்கு எந்த விதமான நஷ்டமும் ஏற்படவில்லை எனவும், இந்த அபதாரத்தை மஹிந்திரா நிறுவனம் செலுத்த தேவையில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது.

மஹிந்தி நிறுவனம் தனது டூவீலர் தொழிலை நிறுத்தியுள்ள நிலையில் தற்போது அந்நிறுவனத்திற்கு அது செய்த வரி செலுத்துவதில் உள்ள முறைகேடு காரணமாக தற்போது இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டூவீலர் நிறுவனம் மஹிந்திரா நிறுவனத்தில் சேர்ந்து விட்டாலும் அந்நிறுவனம் செலுத்த வேண்டிய வரி பாக்கி இருப்பதால் இந்த அபராதம் என்பது விதிக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா நிறுவனம் இந்த அபராதம் குறித்து மேல்முறையீடு செய்துள்ள நிலையில், விரைவில் இதற்கு ஒரு தீர்வு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா நிறுவனத்தின் தரப்பில் இருந்து இந்த அவர்கள் செய்தது சரி என முறைகேடு செய்துள்ளனர். மேலும் மஹிந்திரா நிறுவனம் பொருட்களை வாங்கியதற்கான ஆதாரங்கள் இருப்பதால் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியது பொருட் கொடுத்தவர்களின் கடமை தான்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனம் தனது டூவீலர் தொழிலை நிறுத்தி விட்டதால் அந்நிறுவனத்தின் மீதான வரி குறித்து தற்போது ஜிஎஸ்டி ஆடிட் செய்து இவ்வாறான அபராதங்களை விதித்து வருகிறது. தற்போது நடைமுறையில் இந்நிறுவனம் செயல்பட்டு வந்தால் தொடர்ந்து இந்த வரியை செலுத்தி வரும், இதனால் அபராதங்கள் விதிக்கப்படாமல் இருந்திருக்கும், இது இந்நிறுவனத்திற்கு ஒரு சிறிய பிரச்சினை தான்.

More from DriveSpark

Article Published On: Saturday, December 30, 2023, 14:19 [IST]
English summary
Mahindra two wheeler fine 4 11 crore tax penalty appeal
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X