காமெடி நடிகராக இருந்தாலும்... பைக் விஷயத்தில் கெத்து காட்டிட்டாரு!! யாரென்று தெரிகிறதா?

பிரபல காமெடி நடிகர் ஒருவர் விலைமிக்க பிஎம்டபிள்யூ பைக்கான ஆர்1250 ஜிஎஸ் மோட்டார்சைக்கிளை வாங்கியுள்ளார். எந்த காமெடி நடிகர் அவர்? அவர் வாங்கியுள்ள பிஎம்டபிள்யூ பைக்கில் அப்படி என்ன சிறப்புகள் உள்ளன என்பதை பற்றிய முழுமையான விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஏற்கனவே ஒரு பைக் பயன்பாட்டில் இருந்தாலும், நம் அனைவருக்குமே ஏதேனும் ஒரு பைக் கனவு பைக்காக இருக்கும். அந்த கனவை சிலர் நினைவாக்கி இருப்பீர்கள், சிலர் இன்னமும் கனவில் மட்டுமே ஓட்டி கொண்டு இருப்பீர்கள். சிலர் என்பதை விட, பலர் இன்னமும் கனவில் தான் அந்த பைக்கை கண்டு கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். ஏனெனில் உளவியல் ரீதியாக பார்த்தோமேயானால், நம்மால் வாங்க முடிந்த பைக்கை நாம் கனவு பைக்காக நினைக்க மாட்டோம்.

பிரபல காமெடி நடிகர் வாங்கியுள்ள விலைமிக்க பிஎம்டபிள்யூ பைக்!

வாங்கவே முடியாத அளவிற்கு, அதிகப்படியான விலை கொண்ட மோட்டார்சைக்கிள் தான் கனவில் வந்து தொல்லை கொடுக்கும். ஆனால் இந்த பிரச்சனை எல்லாம் சினிமா நடிகர், நடிகைகளுக்கு பெரியதாக இருக்காது. ஏனெனில் விலையுயர்ந்த பைக்கை கூட இப்போது நினைத்தால், அடுத்த சில நாட்களில் அவர்களால் வாங்கிவிட முடியும். இதை ஏன் இப்போது கூறுகிறேன் என்றால், பிரபல மலையாள காமெடி நடிகர் சோபின் ஷாகிர் விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ ஆர்1250 ஜிஎஸ் பைக்கை டெலிவிரி எடுத்துள்ளார்.

மலையாள நடிகர் சோபின் ஷாகிரை உங்களில் பெரும்பாலானோர்க்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். நடிகர் துல்கர் சல்மானின் சார்லி மற்றும் கும்பலாங்கி நைட்ஸ் போன்ற ஹிட் மலையாள படங்களில் நடித்துள்ளார். இத்தகைய நடிகர் ஷோரூம் ஒன்றில் பிஎம்டபிள்யூ பைக்கை டெலிவிரி பெறும் படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன.

பிரபல காமெடி நடிகர் வாங்கியுள்ள விலைமிக்க பிஎம்டபிள்யூ பைக்!

ஆர்1250 ஜிஎஸ் ஆனது பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் உலகளவில் விற்பனை செய்வதிலேயே விலையுயர்ந்த அட்வென்ச்சர் பைக் ஆகும். இத்தகைய பைக்கின் ட்ரோபி எடிசனை மலையாள நடிகர் சோபின் ஷாகிர் வாங்கியுள்ளார். அதாவது இதன் விலை வழக்கமான ஆர்1250 ஜிஎஸ் பைக்கை காட்டிலும் கூடுதலாக இருக்கும். வழக்கமான ஆர்1250 ஜிஎஸ் பைக்குடன் ஒப்பிடுகையில், ட்ரோபி எடிசன் ஆனது தோற்றத்தில் சற்று மாறுப்பட்டது.

குறிப்பாக, இந்த ஸ்பெஷல் எடிசன் ஆர்1250 ஜிஎஸ் பைக்கில் வித்தியாசமான டிசைனில் என்ஜின் பாதுகாப்பான், ஸ்கிட் பிளேட் மற்றும் ரைடரின் கை விரல்களை பாதுகாக்க அளவில் சிறியதான ஹேண்ட் கார்ட்ஸ் உள்ளிட்டவை பொருத்தப்படுகின்றன. இந்த ட்ரோபி எடிசனில் க்ராஸ்-ஸ்போக்டு சக்கரங்கள் பொருத்தப்படுகின்றன. பின்பக்கத்தில் வளையாத இரும்பினால் ஆன லக்கேஜ் ராக் வழங்கப்படுகிறது.

பிரபல காமெடி நடிகர் வாங்கியுள்ள விலைமிக்க பிஎம்டபிள்யூ பைக்!

அதேபோல் இருக்கை அமைப்பும் ஆக்ரோஷமான பயணத்திற்கு ஏற்ப வழங்கப்படுவதால், இந்த ட்ரோபி எடிசன் பைக் ஆஃப்-ரோடு பயணங்களுக்கும் மிகவும் ஏற்றதாக இருக்கும். தொழிற்நுட்ப அம்சங்கள் என்று பார்த்தால், சாவியில்லா என்ஜின் ஸ்டார்ட் வசதி மற்றும் டயர்களில் காற்றின் அழுத்தத்தை தொடர்ந்து கண்காணிக்கும் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

ஆர்1250 ஜிஎஸ் பைக்கின் இந்த ட்ரோபி எடிசனில் நன்கு பெரியதான விண்ட்ஸ்க்ரீன் பொருத்தப்படுகிறது. அத்துடன் ரேடியேட்டரை பாதுகாக்க பாதுகாப்பானும் பொருத்தப்படுகிறது. மற்றப்படி என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. வழக்கமான பிஎம்டபிள்யூ ஆர்1250 ஜிஎஸ் பைக்கில் பொருத்தப்படும் அதே 1,254சிசி, 2-சிலிண்டர், பாக்ஸர் என்ஜின் தான் இந்த ட்ரோபி எடிசனிலும் பொருத்தப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 18, 2023, 11:08 [IST]
English summary
Malayalam comedy actor soubin shahir buys bmw r1250 gs trophy edition
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X