சாக்கு நிறைய சில்லறைகளுடன் ஸ்கூட்டரை வாங்கிய வியாபாரி! ரூ90 ஆயிரத்தை சில்லறையாக சேமித்து கனவை நினைவாக்கினார்

இன்று இந்தியாவில் டூவீலர் இல்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு, இதற்காகப் பலர் பணத்தைச் சேமித்து வைத்து வைப்பார்கள். இப்படியாகத் தான் சேமித்து வைத்த சில்லறைகள் மூலம் ஒருவர் தனது கனவான கிரேஸியா ஸ்கூட்டரை வாங்கியுள்ளார். இது குறித்து விரிவாகக் காணலாம் வாருங்கள்.

அசாம் மாநிலம் கவுகாத்தியை அடுத்துள்ள போராகோன் பகுதியைச் சேர்ந்தவர் சைதுல் ஹோக்யூ, இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கென ஒரு ஸ்கூட்டர் வாங்க வேண்டும் என விரும்பினார். அப்பொழுது அவரிடம் பணமில்லை அதனால் அன்று முதல் பணத்தைச் சேமிக்க வேண்டும் என முடிவு செய்தார்.

Assam Man Buys Scooter with Coins

அப்பொழுது முதல் தன் கடையில் வரும் சில்லறை நாணயங்களைச் சேமித்து வைக்கத் துவங்கினர். ரூ1,2,5 மற்றும் 10 ரூபாய் நாணயங்களை ஒரு உண்டியலில் சேமித்து வைத்தார். சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ90 ஆயிரம் சேர்ந்த நிலையில் அந்த பணத்தை எல்லாம் ஒரு மூட்டையில் போட்டு கவுகாத்தியில் உள்ள ஒரு ஹோண்டா டீலரிடம் கொண்டுபோய் உள்ளார். அங்கு அவர் இந்த சில்லறைகளைக் கொடுத்த தனக்கு ஒரு கிரேஸியா ஸ்கூட்டர் வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

இதைக் கண்டு ஆச்சரியமடைந்த ஊழியர்கள், இது குறித்து ஷோரூம் நிர்வாகிகளிடம் கூறினர். அவர்கள் வந்து விசாரித்த போது இவர் உண்மையில் நாணயங்களாகச் சேர்த்து வைத்துத்தான் ஸ்கூட்டர் வாங்க வந்தது. தெரிந்தது. இதையடுத்து அவர்கள் அவரை பாராட்டி அவருக்கு அவர் விரும்பி கிரேஸியா ஸ்கூட்டரை விற்றனர்.

Assam Man Buys Scooter with Coins

கிரேஸியா ஸ்கூட்டரை பொருத்தவரை ரூ86,274 என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் அந்த ஷோரூமில் விற்பனையாகி வருகிறது. இதற்காக அவர் வழங்கிய சில்லறைக் காசுகளை ஷோரூம் ஊழியர்கள் வரிசையாக அமர்ந்து எண்ணிப்பார்த்து வாங்கிக்கொண்டனர். அவரும் சந்தோஷமாக இந்த ஸ்கூட்டரை வீட்டிற்கு ஓட்டி சென்றார்.

புதிய ஸ்கூட்டரை வாங்கிய சைதுல் ஹோக்யூ கூறும் போது : "சாக்கு நிறையச் சில்லறைகளைக் கொண்டு வந்து இந்த கிரேஸியா ஸ்கூட்டரை வாங்கியது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் போரோகோன் பகுதியில் சிறிய கடை ஒன்றை நடத்தி வருகிறேன். எனக்கு நீண்ட நாட்களாக ஸ்கூட்டர் ஒன்றை வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.

Assam Man Buys Scooter with Coins

இதற்காக 5-6 ஆண்டுள் சேமித்த பணம் தான் இந்த சாக்கு நிறைய இருக்கும் சில்லறைகள். இறுதியாக எனது கனவு தற்போது நினைவாகியுள்ளது. நான் இப்பொழுது சந்தோஷமாக உணர்கிறேன் " எனக் கூறினார். இவருக்கு ஸ்கூட்டரை விற்பனை செய்த ஹோண்டா டூவீலர் ஷோரூமின் உரிமையாளர் மணிஷ் போடரும் இது குறித்து பெருமையாகப் பேசினார்.

அவர் கூறும் போது : "எனது ஊழியர்கள் என்னிடம் வந்து, ஒருவர் சில்லறைக் காசுகளுடன் ஸ்கூட்டர் வாங்க வந்துள்ளார் எனச் சொன்ன போது ஆச்சரியமாக இருந்தது. அவரிடம் சென்று கேட்ட போது அவர் 5-6 வருடங்கள் சேமித்த பணத்தை வைத்து ஸ்கூட்டர் வாங்க வந்துள்ளதாகக் கூறினார். இது போன்ற சம்பவங்களை நான் செய்திகளில் தான் பார்த்திருக்கிறேன். என் வாழ்வில் இப்படி ஒரு சம்பவம் நடப்பது இது தான் முதன் முறை" எனக் கூறினார்.

கிரேஸியா ஸ்கூட்டரை பொருத்தவரை 125 சிசி பவரை கொண்டது. இது ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் 7.3எச் பி பவரையும், 7.90 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த செய்தி குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 5, 2023, 9:33 [IST]
English summary
Man brought honda activa scooter with sack full of coins
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+