Manju Warrier மற்றும் Soubin Shahir ரைட் ரைடு செய்துள்ளனர்! இதுக்கெல்லாம் விதை நம்ம அஜித் போட்டது!
நடிகை மஞ்சு வாரியர் மலையாள சினிமாவின் முன்னணி நடிகையான இவர், சில தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிகர் அஜித்துடன் நடித்து வெளியான துணிவு திரைப்படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
நடிகை மஞ்சு வாரியர் தற்போது மலையாள நடிகர் ஒருவருடன் பைக் ரைடு சென்ற புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை நடிகை மஞ்சு வாரியரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

நடிகை மஞ்சு வாரியர், துணிவு திரைப்படத்தில் நடிக்கும் போதே நடிகர் அஜித்குமாருடன் வடஇந்தியாவின் சில பகுதிகளில் பைக் ரைடு சென்றார். அப்பொழுது முதல் அவருக்கு பைக் என்பது என்பது பிடித்தமான ஒரு விஷயமாக மாறிவிட்டது. இந்நிலையில் துணிவு திரைப்படம் வெளியான பிறகு இவர் கேரளாவில் ஒரு ஆர்டிஓவில் பைக் ஓட்டுவதற்காக லைசென்ஸ் எடுத்தார்.
அதன்பின்னர் ஒரு சில மாதங்களில் பிஎம்டபிள்யூ ஆர் 1250 ஜிஎஸ் அட்வெஞ்சர் டூரர் பைக்கை சொந்தமாக வாங்கினார். இந்த செய்தி வைரலாக பரவியது. அவர் இந்த பைக்கை வாங்கிய அடுத்த சில மாதங்களிலேயே மற்றொரு மலையாள நடிகரான செளபின் சாஹீர் என்பவரும் பிஎம்டபிள்யூ ஆர்1250 டிராபி எடிசன் பைக்கை வாங்கினார்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து கேரளாவின் சில பகுதிகளில் பைக் ரைடு செய்துள்ளனர். இந்த பைக் ரைடின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தான் நடிகை மஞ்சு வாரியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டத்திருந்தார். இது அவர்களது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
இந்த புகைப்படத்தை பதிவிடும் போது அதில் அவர் "நான் எதிர்கொள்ளாத பயம், எனது எல்லைகளாக மாறுகிறது. எனக்கு உற்ற நண்பர்களாகவும் நல்ல வழியாகாட்டியாகவும் இருப்பதற்கு நன்றி" என குறிப்பிட்டு அதில் நடிகர் செளபின் சாஹீர், பினீஷ் சந்திரா ஆகியோரை டேக் செய்திருந்தார். பினீஷ் சந்திரா தான் இந்த புகைப்படத்தை எடுத்ததாக கூறி அவருக்கு நன்றியும் தெரிவித்திருந்தார்.
மேலும் இதில் அவர் தன் ரசிகர்களுக்கு அறிவுரையாக: "பைக் ஓட்டும்போது முறையான ரைடிங் கியர்களை அணிந்து பைக் ஓட்டுங்கள், நான் இந்த புகைப்படத்தில் அணியாததற்கு மன்னியுங்கள்." என குறிப்பிட்டிருந்தார். பலர் இது குறித்து அவரது கமென்டில் விமர்சனம் செய்திருந்தனர்.
மலையாள திரையுலகில் அதிக விலை கொண்ட பைக்கை சொந்தமாக வாங்கி ஓட்டி வருவது நடிகை மஞ்சு வாரியர் மட்டும் தான். அவரிடம் தற்போது பிஎம்டபிள்யூ ஆர் 1250 ஜிஎஸ் அட்வெஞ்சர் டூரர் பைக் இருக்கிறது. இந்த பைக்கை பொருத்தவரை 1245 சிசி ட்வின் சிலிண்டர் பாக்ஸர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் 134 பிஎச்பி பவரை 7,750 ஆர்பிஎம்மிலும், 143 என்எம் டார்க் திறனை 6,250 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக் போக நடிகை மஞ்சு வாரியரிடம் முற்றிலும் மஞ்சள் மற்றும் கருப்பு நிற டூயல் டோன் கஸ்டம் பெயிண்டிங் செய்யப்பட்ட மினி கூப்பர் கார், மாருதி பலேனோ ஹேட்ச்பேக் மற்றும் ரோஞ்ச்ரோவர் என்ற சொகுசு எஸ்யூவி கார்கள் இருக்கிறது.
நடிகர் செளபின் சாஹீரை பொருத்தவரை டிராஃபி எடிசன் பைக்கை வைத்திருக்கிறார். இந்த பைக்கிலும் மஞ்சுவாரியர் பைக்கில் உள்ள அதே இன்ஜின் தான் இருக்கிறது. மஞ்சு வாரியரின் பைக் கருப்பு நிற ஃபினிஷிங் செய்யப்பட்டுள்ளது. செளபின் சாஹீர் பைக் கிராவிட்டி ப்ளூ, மெட்டாலிக் பெயிண்ட்களை கொண்டது.
நடிகர் செளபின் சாஹீரும் வாகனங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர். இவரிடம் வால்வோ எக்ஸ்சி90 மற்றும் லெக்ஸஸ் இஎஸ் 300எச் என்ற சொகுசு செடான் கார், பழைய தலைமுறை டபிள்யூ212 மெர்சிடீஸ்-பென்ஸ் இ கிளாஸ் சொகுசு செடான் கார், ஹார்லி டேவிட்சன் 750 பைக், ஃபோக்ஸ்வேகன் ஜிடிஆர் 2 டோர் போலோ கார் ஆகிய வாகனங்கள் இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பைக் ரைடிங் என்பது வெறும் பயணம் மட்டுமல்ல ஒரு வித நிம்மதி மற்றும் வித்தியாசமான உணர்வை தருவது, குறிப்பாக உயர் ரக பைக்குகளில் பயணம் செய்வது த்ரில்லிங் மற்றும் சுவாரஸ்யமான அனுபவத்தை தரும். இந்த முயற்சியில் தான் இந்த இரு மலையாள நடிகர்களும் இறங்கியுள்ளனர். இவர்களை பார்த்து ரசிகர்களும் பைக் ரைடிங்கில் இறங்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








