அஜித் உடன் பைக் ரைடு போயி மஞ்சு வாரியருக்கும் அது பிடித்துவிட்டது! செம காஸ்ட்லி பைக்கை சொந்தமா வாங்கிட்டாங்க
நடிகர் அஜித்குமாருடன் துணிவு படத்தில் நடிக்கும் போது பைக் ரைடு சென்றது பிடித்துப் போக நடிகை மஞ்சு வாரியர் சொந்தமாக பிஎம்டபிள்யூ 1250 ஜிஎஸ் பைக்கை வாங்கியுள்ளார். இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
மலையாள சினிமாவில் ஒரு கலக்கு கலக்கி தமிழ் சினிமாவிற்குள் நுழைந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் மஞ்சு வாரியர், இவர் சமீபத்தில் நடிகர் அஜித் உடன் நடித்த வெளியான துணிவு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த திரைப்படத்தில் இவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டது. ஏற்கனவே இவர் தமிழ் சினிமாவில் அசூரன் படத்தில் நடித்த கதாபாத்திரம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் அஜித் உடன் துணிவு திரைப்படத்தில் இவர் நடித்துக்கொண்டிருந்த போது படப்பிடிப்பிற்கான இடைவெளி நேரத்தில் நடிகர் அஜித் தனது பைக்கில் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் வலம் வந்து பைக் ரைடு செய்தார். அதில் ஒரு பகுதியாக அவர் நடிகை மஞ்சுவாரியரையும் அழைத்துச் சென்றிருந்தார். அதற்கு முன்பு வரை மஞ்சு வாரியருக்கு பைக் ரைடிங்கில் மிகப்பெரிய ஆர்வம் இல்லை.
ஆனால் நடிகர் அஜித் குழுவினருடன் பைக்கில் இமயமலைப்பகுதியில் ரைடு சென்ற போது இவருக்கு பைக் ரைடிங் பிடித்துவிட்டது. பின்னர் இவர் தானும் பைக் வாங்கி ரைடு செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்திக்கொண்டார். இந்நிலையில் இவர் சமீபத்தில் பைக் ஓட்டுவதற்கான லைசென்ஸ் வாங்கியது குறித்த செய்திகள் வெளியானது. இந்நிலையில் தான் இவர் தற்போது சொந்தமாக பைக் ஒன்றை வாங்கியுள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது.

நடிகை மஞ்சு வாரியர் கொச்சியில் சொந்தமாக பிஎம்டபிள்யூ ஜிஎஸ் 1250 பைக்கை வாங்கியுள்ளார் இந்த புகைப்படம் மற்றும் வீடியோவை அவரே தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் நடிகர் அஜித்குமார் தான் தான் பைக் வாங்கியதற்கான ஒரு இன்பிரேஷனாக இருந்தவர் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் ஒரு சிறிய துணிவு தான் ஒன்றை ஆரம்பிப்பதற்கான நல்ல இடம் என்றும், நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். அதற்கு நீண்ட தூரம் பைக் ஓட்ட வேண்டும். சாலையில் நான் ஏதாவது தவறு செய்துவிட்டால் மன்னித்துக்கொள்ளுங்கள் எனவும் இதில் குறிப்பிட்டுள்ளார்.
இவர் வாங்கியுள்ளது பிஎம்டபிள்யூ ஆர் 1250 ஜிஎஸ் பைக் ஆகும். இந்த பைக்கின் இன்ஜினை பொருத்தவரை 1254 சிசி இன்ஜின் கொண்ட 2 சிலிண்டர் பைக் ஆகும். இது ஏர்-லிக்யூட் கூலிங், டிஓஎச்சி, பாக்ஸர் இன்ஜின் போன்ற அம்சங்களைக் கொண்டது. இது 136 பிஎஸ் பவரையும், 143 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த பைக் இரண்வு வீல்களிலும் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 2 சேனல் ஏபிஎஸ் சிஸ்டமும் இருக்கிறது.
மேலும் இந்த பைக்கில் டிராக்ஷன் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், நேவிகேஷன், அட்ஜெஸ்டபுள் விண்ட் ஸ்கிரீன், எல்இடி டெயில் லைட், டிஜிட்டல் ஸ்பீடாமீட்டர் ஆகிய அம்சங்கள் இருக்கிறது. பைக்கிங்கை பொருத்தவரை இரண்டு விதமான மோடுகள் இந்த பைக்கில் உள்ளது மழை மற்றும் சாலை என இரண்டு விதமான மோடில் மழை பெய்யும் நேரம் மட்டும மழை மோடில் செல்லலாம் மற்ற நேரங்களில் ரோடு மோடில் பயணித்தாலே போதுமானது.
மேலும் இந்த பைக்கில் பாதுகாப்பு அம்சங்களாக பிஎம்டபிள்யூ ஸிவிஃப்ட் கேம், ஆட்டோமெட்டிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் கண்ட்ரோல், பவர் சாக்கெட், டயர் பிரஷர் கண்ட்ரோல், டைனமிக் இஎஸ்ஏ, கீலெஸ் ரைடு, டேடைம் ரைடிங் லைட், கியர் ஸிவிப்ட் அசிஸ்ட்ன்ட் ப்ரோ, எல்இடி டர்ன் இண்டிகேட்டர் ஆகிய அம்சங்கள் இந்த பைக்கில் இருக்கிறது.
இந்த பைக் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 3.6 நொடியில் எட்டி பிடிக்கும் பிக்கப் திறன் கொண்டது. அதிகபட்சமாக மணிக்கு 200 கி.மீ வேகம் வரை சீறிபாயும் திறன் கொண்டது. இது ஒரு அட்வெஞ்சர் ஆஃப்ரோடு பைக்காகும். இந்த பைக்கின் விலையைப் பொருத்தவரை ரூ20 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. ஆனால் கஸ்டமைசேஸனை பொருத்து விலை மாறுபடும் நடிகை மஞ்சு வாரியர் வாங்கிய பைக்கின் சரியான விலை விபரம் தெரியவில்லை. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








