ஃப்ளிப்கார்ட்டில் எல்லாரும் இந்த எலக்ட்ரிக் பைக்கை தான் புக் செய்றாங்க!! கியர் கொண்ட இந்தியாவின் முதல் இ-பைக்

மேட்டர் ஏரா (Matter Aera), இந்தியாவின் முதல் கியர் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகள் 40,000 என்ற இமாலய எண்ணிக்கையை கடந்துள்ளது. இதுகுறித்தும், இந்த எலக்ட்ரிக் பைக்கை பற்றியும் முழுமையாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

எலக்ட்ரிக் 2-வீலர்களுக்கான தேவை நம் நாட்டில் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது என்றாலும், அவற்றுள் அதிக தேவை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கே ஆகும். அதாவது ஸ்கூட்டர்களையே எலக்ட்ரிக்கில் வாங்க பெரும்பாலானோர் விரும்புகின்றனர். மற்றப்படி எலக்ட்ரிக் பைக்கின் பக்கம் அவ்வளவாக செல்வது இல்லை. ஆனால் இந்த நிலை கொஞ்ச கொஞ்சமாக மாறி வருகிறது.

matter aera electric bike 40000 pre-bookings

இதனை வெளிக்காட்டும் விதமாகவே, மேட்டர் ஏரா எலக்ட்ரிக் பைக்கிற்கான முன்பதிவுகள் வெறும் 1 மாதத்திற்கு உள்ளாகவே 40,000 என்ற மைல்கல்லை கடந்துள்ளது. மேட்டர் ஏரா எலக்ட்ரிக் பைக்கிற்கு இந்த அளவிற்கு வரவேற்பு கிடைப்பதற்கு 2 விஷயங்களை முக்கிய காரணங்களாக சொல்லலாம். ஒன்று, கியர் வசதி கொண்ட இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பைக் இதுவாகும். இதனை ஹைலைட்டாக சுட்டிக்காட்டியே ஏரா எலக்ட்ரிக் பைக்கை வாடிக்கையாளர்களுக்கு மேட்டர் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

இரண்டாவது, மேட்டர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் மட்டுமின்றி, பிரபல ஆன்லைன் விற்பனை தளமான ஃப்ளிப்கார்ட் மூலமாகவும் மேட்டர் ஏரா எலக்ட்ரிக் பைக்கை வாங்கலாம். இவை யாவும் ப்ரீ-புக்கிங் ஆகும். அதாவது பைக்கின் உற்பத்தி முழுமையாக துவங்கப்படுவதற்கு முன்பாகவே புக்கிங்குகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகின்றன. ஆதலால், டெலிவிரிகள் துவங்கியவுடன் முதலாவதாக ப்ரீ-புக் செய்தவர்களுக்கே மேட்டர் ஏரா எலக்ட்ரிக் பைக்குகள் டெலிவிரி செய்யப்படும்.

matter aera electric bike 40000 pre-bookings

மேட்டர் ஏரா எலக்ட்ரிக் பைக்கை 5000 மற்றும் 5000+ என்ற 2 விதமான வேரியண்ட்களில் முன்பதிவு செய்யலாம். இவை இரண்டிலும் ஒரே மாதிரியான எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரி தொகுப்புகளே கிடைக்கும். மேட்டர் ஏராவில் 5kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி ஆனது ஐபி67-ஆல் சான்றளிக்கப்பட்டது மற்றும் லிக்யுடு-கூல்டு சிஸ்டத்தை கொண்டது.

ஏரா எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 125கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என்கிறது மேட்டர் நிறுவனம். பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்ய 5 மணிநேரங்கள் வரையில் தேவைப்படும். அதுவே ஃபாஸ்ட் சார்ஜரை உபயோகித்து வெறும் 2 மணிநேரத்திற்கு உள்ளாக இந்த பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பிவிடலாம்.

matter aera electric bike 40000 pre-bookings

மேட்டர் ஏரா எலக்ட்ரிக் பைக்கின் இரு வேரியண்ட்களிலும் 4-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 4 விதமான ரைடிங் மோட்கள் கிடைக்கும். பைக்கை நிறுத்துவதற்கு பைக்கின் இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன் பயணிகளின் கூடுதல் பாதுகாப்பிற்காக ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் கருவியும் உள்ளது. இரு வேரியண்ட்களுக்கும் இடையேயான வித்தியாசம் என்னவென்றால், கனெக்டட் தொழிற்நுட்பம் தான்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: மேட்டர் ஏரா எலக்ட்ரிக் பைக்கிற்கு குறுகிய காலத்தில் 40,000 என்ற இமாலய எண்ணிக்கையில் ப்ரீ-புக்கிங் கிடைத்திருப்பதில் ஃப்ளிப்கார்ட் முக்கிய பங்கு வகிக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் இந்தியாவில் பலர் பயன்படுத்தக்கூடிய ஆன்லைன் ஷாப்பிங் தளமாக ஃப்ளிப்கார்ட் விளங்குவதை பற்றி நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். டெலிவிரிக்கு பின் நிஜ உலகில் இந்த எலக்ட்ரிக் பைக் எந்த அளவிற்கு அதன் வாடிக்கையாளர்களை கவரவுள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 13, 2023, 21:56 [IST]
English summary
Matter aera electric bike pre bookings crossed 40000 mark
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X