செலவு பண்ணும் ஒவ்வொரு ஒரு ரூபாவுக்கும் இந்த எலெக்ட்ரிக் பைக் ஒர்த்தானது! குஜராத் நிறுவனத்துக்கு இவ்ளோ திறமையா!
குஜராத்தைச் சேர்ந்த மேட்டர் (Matter) எனும் நிறுவனம் வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கே டஃப் கொடுக்கக் கூடியி ஓர் எலெக்ட்ரிக் பைக்கை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ஏரா (Aera) எனும் பெயரில் விற்பனைக்கு வந்திருக்கும் இ-பைக் பற்றிய முக்கிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
குஜராத்தை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் மேட்டர் (Matter). இது ஓர் ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஆகும். எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை மட்டுமே மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. இதுவே இந்திய இருசக்கர வாகன பிரியர்களைக் கவரும் விதமாக அதன் புதுமுக எலெக்ட்ரிக் பைக் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

மேட்டர் ஏரா (Matter Aera) எனும் மின்சார மோட்டார்சைக்கிளையே அது விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. நான்கு விதமான ட்ரிம்களில் இந்த பைக் விற்பனைக்குக் கிடைக்கும். 4000, 5000, 5000 பிளஸ் மற்றும் 6000 பிளஸ் ஆகிய தேர்வுகளிலேயே அது விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான ரேஞ்ஜ் திறன் மற்றும் சிறப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.
இதன் உயர்நிலை ட்ரிம்மான 6000 பிளஸ், ஓர் முழு சார்ஜில் 150 கிலோ மீட்டர் வரை பயணிக்கும். மற்ற வேறியண்டுகளின் ரேஞ்ஜ் திறன் 125 கிமீ மட்டுமே ஆகும். ஆமாங்க, 6000 பிளஸ்ஸில் மட்டுமே அதிக பயண தூரத்தை முழு சார்ஜில் பெற முடியும். ஆனால், இது இப்போதைக்கு விற்பனைக்குக் கிடைக்காது.

இதேபோல், 4000 ட்ரிம்மின் விற்பனையும் இன்னும் தொடங்கப்படவில்லை. 5000 மற்றும் 5000 பிளஸ் ஆகியவற்றின் விற்பனை மட்டுமே இப்போது தொடங்கப்பட்டு இருக்கின்றது. இன்னும் சில தினங்களில் 4000 மற்றும் 6000 பிளஸ் ஆகிய ட்ரிம்களுக்கும் விற்பனை பணிகள் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அறிமுகமாக மேட்டர் நிறுவனம் 5000 தேர்விற்கு 1 லட்சத்து 43 ஆயிரத்து 999 ரூபாயை விலையாக நிர்ணயம் செய்து இருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக 5000 பிளஸ்-க்கு 1 லட்சத்து 53 ஆயிரத்து 999 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. மேட்டர் ஏரா ஓர் நேக்கட் ரக எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ஆகும்.

இந்திய சந்தையில் இந்த ரக வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு. இதற்கு பல்சர் இருசக்கர வாகன மாடலே முக்கிய சான்று. இதன் நேக்கட் வெர்ஷன்களுக்கு வரவேற்பு பல மடங்கு அதிகம். இத்தகைய வரவேற்பை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் விதமாகவே மேட்டர் நிறுவனம் ஏரா-வை நேக்கட் ஸ்டைலில் உருவாக்கி இருக்கின்றது.
மேலும், இதனை தினசரி இருசக்கர வாகன பயன்பாட்டாளர்களைக் குறி வைத்தும் மேட்டர் உருவாக்கி இருக்கின்றது. அதாவது, ஹீரோ ஸ்பிளெண்டர், பஜாஜ் பிளாட்டினா உள்ளிட்ட பைக்குகளுக்கு போட்டியாக இதை மேட்டர் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதன் தோற்றம் மற்றும் ஸ்டைல் உள்ளிட்டவை டிவிஎஸ் ரைடர், பஜாஜ் பல்சர் மற்றும் ஹார்னெட் 2.0 உள்ளிட்ட மாடல்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

எலெக்ட்ரிக் பைக்கில் நவீன கால தொழில்நுட்ப வசதிகள் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், மேட்டர் ஏராவில் வழங்கப்பட்டிருக்கும் 7.0 அங்குல முழு டிஜிட்டல் எல்சிடி திரை மிக முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகின்றது. இது 4ஜி இணைப்பு வசதிக் கொண்டது. இத்துடன் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டமும் இதில் வழங்கப்பட்டிருக்கின்றது.
இந்த இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், இ பைக்கை லாக் மற்றும் அன்லாக் செய்ய உதவும். இதுமட்டுமின்றி, லைவ் டிராக்கிங் தகவல், வாகனத்தின் ஆரோக்கியம் மற்றும் ஜியோஃபென்சிங் உள்ளிட்ட முக்கிய தகவல்களையும் இது வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேட்டர் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் பைக்கை முதன் முதலில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2023-லேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தியது.
இதைத்தொடர்ந்து இப்போதே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. இதனை சாவியில்லாமல் பன்படுத்திக் கொள்ள முடியும். இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மோட்டார் லிக்யூடு கூல்டு மோட்டார் ஆகும். இத்துடன், பெட்ரோல் டூ-வீலர்களில் வழங்கப்படுவதைப் போல வேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டிருக்கும். கூடுதல் சிறப்பு வசதிகளாக லிக்யூடு கூல்டு பேட்டரி பேக், 3பின் 5ஆம்ப் சார்ஜர், டபுள் கிரேடில் சேஸிஸ் மற்றும் இணைப்பு - இன்டலிஜென்ட் அம்சம் ஆகியவையும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
பாதுகாப்பான ரைடிங் அனுபவத்திற்காக இ-பைக்கில் டிஸ்க் பிரேக்குகள் இரு வீல்களிலும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், சிங்கிள் சேனல் ஏபிஎஸ்-ம் வழங்கப்பட்டு இருக்கின்றது. ஏரோவில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அனைத்து மின் விளக்குகளும் எல்இடி தரத்திலானவை ஆகும். ஆகையால், மின்சார செலவு மிகவும் சிக்கனமாகவே இருக்கும் என கூறப்படுகின்றது.
இந்த பைக்கின் அழகிய தோற்றத்திற்கு இந்த எல்இடி லைட்டுகளும் ஓர் காரணம் ஆகும். இத்துடன், பெட்ரோல் டூவீலர்களில் காணப்படுவதைப் போல எஞ்ஜின் குவார்ட், ஸ்பிளிட் டைப் இருக்கைகள், பில்லியன் ரைடருக்கான கிராப் ஹேண்டில் உள்ளிட்டவையும் ஏராவில் வழங்கப்பட்டு இருக்கின்றது. மிக சிறந்த ஏரோடைனமிக்ஸ் தோற்றத்திலும் இந்த பைக் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









