காத்திருந்தது போதும்! தேதி குறிச்சாச்சு!இந்த பைக்கை புக் பண்ண ரெடியாகுங்க!
மேட்டர் நிறுவனம் தனது 5000 மற்றும் 5000+ பைக்குகளுக்கான புக்கிங்கை வரும் 17ம்தேதி துவங்குகிறது. இந்த பைக் இந்தியாவில் 25 இடங்களில் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த பைக் குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
ஆமதாபாத்தைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் மேட்டர் இந்நிறுவனம் கடந்தாண்டே தனது முதல் கியர் எலெக்ட்ரிக் பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏரா என்ற பெயரில் மொத்தம் 4 வேரியன்ட்களில் இந்த பைக் அறிமுகமானது, 4000, 5000, 5000+ மற்றும் 6000+ ஆகிய 4 வேரியன்ட்களில் அறிமுகமானது.

இந்த பைக் அறிமுகமாகும் போது 6000+ வேரியன்ட் பைக் மட்டும் முழு சார்ஜில் 150 கி.மீ பயணிக்கும் என்றும், மற்றும் வேரியனட் பைக்குகள் 125 கி.மீ ரேஞ்சை வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்நிறுவனம் முதலில் 5000 சிரீஸ் பைக்குகளான 5000 மற்றும் 5000+ பைக்குகளை முதலில் விற்பனைக்குக் கொண்டு வர முடிவு செய்துள்ளது.
இந்த பைக்குகளுக்கான புக்கிங் வரும் மே 17ம் தேதி துவங்குகிறது. இந்த பைக்கை ஆன்லைனில் மேட்டர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புக்கிங் செய்ய முடியும். அல்லது ஃபிலிப்கார்ட் போன்ற தளத்தில் இந்த பைக்கை புக் செய்ய முடியும்.
தற்போது முக்கிய நகரங்களான டில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், விசாக பட்டிணம், விஜயவாடா, மைசூரு, கோயமுத்தூர், மதுரை, தானே ரைகாட், புனே, நாக்பூர், நாசிக், ஆமதாபாத், காந்திநகர், சூரத், வதோதரா, ஜெய்பூர், இந்தூர், பாட்னா, லக்னோ, கான்பூர், கவுகாத்தி, கம்ரூப் மற்றும் புவனேஷ்வர் ஆகிய நகரங்களில் உள்ள மக்கள் மட்டுமே இந்த பைக்கை வாங்க முடியும். எதிர்காலத்தின் இதன் விற்பனை விரிவுபடுத்தப்படும்.
மேட்டார் நிறுவனம் தனது ஏரா 5000 சிரீஸ் பைக்கின் விலையையும் அறிவித்துள்ளது. 5000 பைக் ரூ1.44 லட்சம் என்ற விலையிலும் 5000+ பைக் 1.54 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது. மற்ற வேரியன்ட் பைக்குகள் பின்னர் அறிமுகப்படுத்தப்படும். இந்த பைக்குகளின் டெலிவரி இந்தாண்டு இறுதியில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த 5000 சிரீஸ் பைக்கை பொருத்தவரை 4 ஸ்பீடு ஹைப்பர் ஸ்விஃப்ட் கியர் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது 0-60 கி.மீ வேகத்தை வெறும் 6 நொடியில் பிக்கப் செய்துவிடும். இந்த பைக்கில் லிக்யூட் கூல்டு பேட்டரி மற்றும் பவர் டெரைன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கை ஒரு கி.மீ ஓட்ட சராசரியாக 25 பைசாதான் செலவாகும். இந்த பைக்கை 5 அம்ப் பிளக் மூலம் சார்ஜ் ஏற்றிக்கொள்ள முடியும். இந்த பைக்கில் நேவிகேஷன், மியூசிக், கால் அம்சம், 7 இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே சிஸ்டம் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவிற்கு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ள சூழ்நிலையை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சிறப்பாகப் பயன்படுத்தி வருகின்றன. அதில் இந்த மேட்டர் நிறுவனமும் ஒன்று இந்நிறுவனத்தின் பைக்கை ஓட்டி பார்க்க ஏராளமான மக்கள் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








