நீங்க சீன் காட்டவே தேவையில்ல! இந்த பைக்குல ஒரு ரவுண்டு போனாலே போதும்.. எல்லார் கண்ணும் உங்க மேலதான் இருக்கும்!

சாலையில் இருப்பவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என வாகன ஓட்டிகள் சிலர் கண்டமேனிக்கு சாகசத்தில் ஈடுபடுவதை நாம் கண்டிருப்போம். நம்மில் சிலர் இதனை செய்தும் இருப்போம். இவ்வாறு செய்யும் ஒன்னு போலீஸிடம் சிக்கிக் கொள்ளும் நிலை உருவாகின்றது. இல்லை என்றால் கீழே விழுந்து கை - கால்களை உடைத்துக் கொள்ளும் நிலை ஏற்படுகின்றது. இந்த அளவுக்கு எந்த ரிஸ்க்கும் எடுக்காமல், சாலையில் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க முடியுமா?, கட்டாயம் முடியும்.

ஆட்டோ எக்ஸ்போவை பயன்படுத்த திட்டம்

இத்தகைய ஓர் மோட்டார்சைக்கிளே வெகு விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கின்றது. ஓர் புதுமுக நிறுவனமே அதன் அட்டகாசமான இருசக்கர வாகனத்தை இந்திய இருசக்கர வாகன சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதுகுறித்த தகவலை அந்த பைக் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே உறுதிப்படுத்திவிட்டது. நிறுவனம் வெளியிட்ட சமீபத்திய டீசர் படத்தின் வாயிலாக இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வெகு விரைவில் இந்தியாவில் 2023 ஆட்டோ எக்ஸ்போ நடைபெற உள்ளது.

எம்பிபி சி1002வி

இந்த உலக புகழ்பெற்ற வாகன கண்காட்சியில் சில முன்னணி நிறுவனங்கள் தங்களின் எதிர்கால வாகன மாடல்களைக் காட்சிப்படுத்த இருக்கின்றன. இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் இந்த உலகிற்கு முதல் முறையாக அறிமுகம் செய்ய இருக்கின்றன. இந்த கண்காட்சியையே புதுமுக நிறுவனம் பயன்படுத்தி தனது உலக புகழ்பெற்ற இருசக்கர வாகன மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இத்தாலி நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் எம்பிபி (MBP)-யே அந்த புதுமுக நிறுவனம் ஆகும்.

எம்பிபி சி1002வி-யை காண தயாரா?

இந்தியாவில் கால் தடம் பதிக்கும் விதமாக தனது பைக் மாடல்களை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்த எம்பிபி திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆகையால், காட்சிப்படுத்தலுக்கு பின்னர் நிறுவனத்தின் பைக்குகள் விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நிறுவனம் அதன் குறிப்பிட்ட சில இருசக்கர வாகன மாடல்களை மட்டுமே 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்த திட்டமிட்டு உள்ளது. அந்தவகையில், நிறுவனம் காட்சிப்படுத்த திட்டமிட்டிருக்கும் மாடல்களில் ஒன்றே சி1002வி (MBP C1002V) என கூறப்படுகின்றது.

எம்பிபி சி1002வி

நிறுவனம் வெளியிட்டிருக்கும் டீசர் படத்தில் இந்த பைக்கின் படமே இடம் பிடித்துள்ளது. மறைமுகமாக இடம் பெறும் வகையில் பைக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கை எம்பிபி நிறுவனம் கடந்த ஆண்டு நடைபெற்ற இஐசிஎம்ஏ-விலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தகுந்தது. பிரபல ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு போட்டி அளிக்கும் வகையில் உலக சந்தையில் எம்பிபி நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் விற்பனையில் உள்ளன.

மலை குன்று போன்ற தோற்றம்

அந்தவகையில், சி1002வியும் ஹார்லி டேவிட்சனின் நைட்ஸ்டர் எனும் மாடலுக்கு போட்டி அளிக்கும் வகையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இது டுகாட்டி டையவல் மாடலுக்கும் போட்டியாக இருக்கும். அந்த அளவிற்கு அட்டகாசமான தயாரிப்பாக இதனை எம்பிபி உருவாக்கி இருக்கின்றது. இரு மலை குன்றுகள் அருகருகே நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதைப் போன்ற ஸ்டைலில் இந்த பைக்கின் உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் கவர்ச்சியான தோற்றத்தை பைக்கிற்கு வழங்கும் வகையில் உள்ளது.

எம்பிபி சி1002வி

அதிக பவர்ஃபுல் மோட்டார்

இத்துடன், கொழு கொழு தோற்றம் கொண்ட டயர்கள் டூ-வீலரில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், இந்த பைக்கில் அதி திறனை வெளியேற்றக் கூடிய ஓர் பவர்ஃபுல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. 997 சிசி லிக்யூடு கூல்டு வி-ட்வின் மோட்டாரே சி1002வி பைக்கில் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 95 பிஎஸ் பவரையும், 102 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு மோட்டாரே பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்தை வழங்குவதற்கு ஏதுவாக முன் பக்கத்தில் இரண்டு 320 மிமீ டிஸ்க் பிளேட்டுகளும், பின் பக்கத்தில் 300 மிமீ டிஸ்க் பிளேட் ஒன்றும் வழங்கப்பட்டிருக்கும். 18 அங்குல கவர்ச்சிகரமான தோற்றம் கொண்ட வீலே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதிலேயே 130 மற்றும் 240 செக்சன் டயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த பைக்கின் கிரவுண்ட் கிளியரன்ஸ் மிகவும் ஆரோக்கியமானதாக உள்ளது.

150 மிமீ உயரம் கொண்டதாகவே அது உள்ளது. பைக்கின் ஒட்டுமொத்த எடை 262 கிலோகிராம் ஆகும். இந்த இலகுவான எடை காரணமாக லைட் க்ரூஸர் பைக்காக இது காட்சியளிக்கின்றது. இந்த அம்சம் மட்டும் இல்லைங்க இன்னும் பல சிறப்பு வசதிகள் இந்த பைக்கில் இடம் பெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் எம்பிபி சி1200வி மோட்டார்சைக்கிளில் ஐந்து அங்குல டிஎஃப்டி திரை இடம் பெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த திரை ஸ்மார்ட்ஃபோன் இணைப்பு வசதிக் கொண்டது. இதுமட்டுமில்லைங்க, நேவிகேஷன் போன்ற சிறப்பு வசதியும் இந்த திரையில் இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த அம்சங்கள் அனைத்தும் இந்தியர்களை ஈர்க்கும் வகையில் உள்ளது. ஆகையால், இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் இந்தியர்கள் மத்தியில் இது நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, January 6, 2023, 10:53 [IST]
English summary
Mbp c1002v will debut auto expo 2023
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+