இந்திய ஆட்டோ எக்ஸ்போவை கலக்கும் 2 இத்தாலிய பைக்குகள் இவைதான்!! விற்பனைக்கு எப்போ வருமோ!

இத்தாலியில் மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் ஈடுப்பட்டுவரும் எம்பிபி நிறுவனம் நடைப்பெற்றுவரும் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் 2 மோட்டார்சைக்கிள்களை காட்சிக்கு நிறுத்தியுள்ளது. இந்த புதிய இத்தாலிய பைக்குகளை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் செயல்படும் ஆதிஷ்வர் ஆட்டோ ரைடு இந்தியா (AARI) நிறுவனம் இத்தாலிய மோட்டார்சைக்கிள் பிராண்டான மோட்டோ பொலோக்னா பாசியோன் (MBP)-ஐ 2023 ஆட்டோ எக்ஸ்போவின் மூலம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. எம்பிபி பிராண்டில் இருந்து ஆட்டோ எக்ஸ்போவில் எம்502என் மற்றும் சி1002வி என்ற இரு மோட்டார்சைக்கிள்கள் வெளியீடு செய்யப்பட்டுள்ளன.

2023 ஆட்டோ எக்ஸ்போவை கலக்கும் 2 இத்தாலிய பைக்குகள் இவைதான்!!

இத்தாலியில் பொலோக்னா பகுதியில் இருந்து செயல்படும் எம்பிபி நிறுவனத்தின் வாகனங்கள் இந்தியாவிற்கு வருவது இதுவே முதல்முறை ஆகும். இந்த பிராண்டில் இருந்து 2023 ஆட்டோ எக்ஸ்போவில் நிறுத்தப்பட்டு இருப்பவை 500சிசி மற்றும் 1000சிசி என செயல்திறன்மிக்க பைக்குகள் தான் என்றாலும், இத்தாலியில் எம்பிபி நிறுவனம் 125சிசி பைக்குகளில் இருந்து மேக்ஸி-ஸ்கூட்டர்ஸ், அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள்கள் உள்பட ஸ்ட்ரீட்-நாக்டு பைக்குகளையும் விற்பனை செய்கிறது.

தற்போது வெளியீடு செய்யப்பட்டிருக்கும் எம்502என் மற்றும் சி1002வி பைக்குகள் இரண்டும் இந்தியாவில் பெனெல்லி-கீவே டீலர்ஷிப்களில் விற்பனை செய்யப்பட உள்ளன. இதில் எம்பிபி எம்502என் ஆனது எந்தவொரு ரைடரும் இயக்குவதற்கு ஏற்ற நாக்டு பைக்காகும். முற்றிலுமாக இத்தாலியன் ஸ்டைலில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பைக்கில் பாடி பேனல்கள் நேர்த்தியாக ஏரோடைனாமிக்கிற்கு ஏற்ப பொருத்தப்பட்டுள்ளன.

2023 ஆட்டோ எக்ஸ்போவை கலக்கும் 2 இத்தாலிய பைக்குகள் இவைதான்!!

அதேபோல் இந்த பைக்கில் பெட்ரோல் டேங்க் கோண வடிவில் வடிவமைக்கப்பட்டிருப்பது மட்டுமின்றி, பைக்கின் பின்பக்கத்திலும் காற்று துளைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் இந்த பைக்கின் எல்இடி ஹெட்லைட்டை பற்றியும் சொல்லியே ஆக வேண்டும். ஏனெனில் இதன் ஹெட்லைட் ஆனது சுற்றுப்புற சூழலை பொறுத்து தன்னிச்சையாக ஆன்/ஆஃப் ஆகக்கூடியது.

எம்502என் பைக்கில் 486சிசி, லிக்யுடு-கூல்டு, இணையான-இரட்டை சிலிண்டர் என்ஜினை எம்பிபி நிறுவனம் பொருத்துகிறது. 8 வால்வுகள் மற்றும் போஸ்ச் இ.எஃப்.ஐ உடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 8,500 ஆர்பிஎம்-இல் 50.95 பிஎச்பி பவரையும், 6,750 ஆர்பிஎம்-இல் 45 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த ஸ்ட்ரீட் நாக்டு ரக மோட்டார்சைக்கிளில் சிறப்பம்சமாக 4.2-இன்ச் முழு-வண்ண டிஎஃப்டி திரை வழங்கப்படுகிறது.

2023 ஆட்டோ எக்ஸ்போவை கலக்கும் 2 இத்தாலிய பைக்குகள் இவைதான்!!

எம்பிபி சி1002வி மோட்டார்சைக்கிளை பொறுத்தவரையில், இது தொலைத்தூர பயணங்களுக்கு ஏற்ற 1000சிசி க்ரூஸர் பைக்காகும். இதில் பொருத்தப்படும் 997சிசி, லிக்யுடு-கூல்டு, 4-ஸ்ட்ரோக், 80-டிகிரி இரட்டை-சிலிண்டர் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 7,600 ஆர்பிஎம்-இல் 93.87 பிஎச்பி மற்றும் 6,500 ஆர்பிஎம்-இல் 102 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

இந்த பைக்கில் என்ஜின் உடன் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. சி1002வி பைக்கில் 5-இன்ச்சில் டிஎஃப்டி வண்ண இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை வழங்கப்பட்டுள்ளது. க்ரூஸர் பைக்குகளில் சஸ்பென்ஷன் அமைப்பு தான் முக்கியமானவை. இந்த இத்தாலிய க்ரூஸர் பைக்கில் முன்பக்கத்தில் தலைக்கீழான டெலெஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் கேஒய்பி ப்ரோலிங்க் ஷாக்கும் பொருத்தப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Friday, January 13, 2023, 14:55 [IST]
English summary
Mbp m502n and c1002v bikes unveiled at 2023 auto expo
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+