மறக்க முடியுமா? பழைய எம்80 பைக்கை ஓட்டி சீரியல் புரமோஷன் செய்த நடிகர் மிர்ச்சி செந்தில்!
நடிகர் மிர்ச்சி செந்தில் டிவி சீரியலுக்காக பழைய எம்80 பைக்கை ஓட்டிய வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. இந்த பைக் ஒரு காலத்தில் பலரால் ஓட்டப்பட்டு வந்தாலும் தற்போது எங்குமே காணமுடிவதில்லை. இந்த பைக் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டிவி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் மிர்ச்சி செந்தில். இவர் தற்போது ஒரு தனியார் டிவி சேனலுக்காக அண்ணா என் சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் அவர் 4 தங்கைகளுக்கு அண்ணாக நடித்து வருகிறார். இந்த சீரியலுக்காக அவர் பழைய பஜாஜ் எம்80 பைக்கை ஓட்ட பயிற்சி எடுத்து வருகிறார்.

இந்த பஜாஜ் எம்80 என்ற பெயர் உங்களுக்கு தெரிந்திருக்கிறது என்றால் நீங்கள் 90கள் அல்லது அதற்கு முன்பு பிறந்தவர்களாக தான் இருக்க முடியும். ஒரு காலத்தில் பலரால் விரும்பி வாங்கப்பட்ட பைக்காக இது இருந்தது. பால் காரர் முதல் மெக்கானிக் வரை பலர் இந்த ரக பைக்கை தான் வைத்திருப்பார்கள். ஆனால் இன்று இந்த பைக்கை நாம் மறந்தே போய்விட்டோம்.
பஜாஜ் நிறுவனம் இந்த எம்80 பைக்கை தயாரித்து வெளியிட்டது. இது இதற்கு முந்தைய தலைமுறை பைக்கான எம்50 பைக்கின் அப்டேட் வெர்ஷனாக வெளியானது. இந்த பைக்கில் 74.08 சிசி ரக ஏர்கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டிருந்தது. இது அதிகபட்சமாக 4.7 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இது ஒரு 2 ஸ்டோக் இன்ஜின் ஆகும். அதன் பிறகு எம்80 3 மற்றும் 4 ஸ்டோக் இன்ஜின் பைக்குகளும் வெளியானது.
இந்த 2 மற்றும் 3 ஸ்டோக் இன்ஜின்களில் உள்ள முக்கியமான அம்சம் இதில் கியரை மாற்றும் தொழிற்நுட்பம் கையில் இருந்தது. இன்று எந்த பைக்கிலும் கையில் கியரை மாற்றும் தொழிற்நுட்பம் பொருத்தப்படவில்லை. எல்லாம் கால்களுக்கு சென்றுவிட்டன. ஆனால் அன்று கியரை மாற்றும் தொழிற்நுட்பம் சில பைக்குகளில் மட்டும் கையில் இருந்தது. அதில் பஜாஜ் எம்80 பைக்கும் ஒன்று.
இதில் 4 ஸ்டோக் இன்ஜின் கொண்ட பைக் வெளியனாது. ஆனால் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்த பைக்கில் மட்டும் கியர் காலுக்கு மாற்றப்பட்டது. இந்த பைக்கில் 3 ஸ்டோக் இன்ஜின் வெர்ஷன் வரை 3 கியர்கள் தான் இருந்தன, 4 ஸ்டோக் இன்ஜின் கொண்ட எம்80ல் மட்டும் 4 கியர்கள் வழங்கப்பட்டது. இந்த பைக் அதிக பவர் காரணமாக சரக்குகளை ஏற்றி செல்ல அதிகமாக பயன்படுத்தினர்.
அதிகமான எடை இருந்தாலும் அசால்டாக இந்த பைக் இழுத்து செல்லும் என்பதால் இந்த பைக்கை பலர் விரும்பினர். ஆனால் நாட்கள் ஆக ஆக மக்களிடம் இந்த பைக் மீதான மோகம் குறைந்தது. மற்ற பைக்குகளின் பக்கம் மக்கள் திரும்பிவிட்டனர். இதனால் விற்பனை நிறுத்தப்பட்டது. தற்போது வெகு சில பைக்குகளே பயன்பாட்டில் உள்ளது. பலர் இந்த ரக பைக்குகளை பத்திரமாக பாதுகாத்து வருகின்றனர்.
இந்த பைக்கை ஓட்டி அவர் சீரியலுக்கு புரமோஷன் செய்த வீடியோவில் இந்த சீரியலிலும் இவர் இந்த பைக்கை ஓட்டி வரப்போவதாகவும், அதுவும் ஒரே நேரத்தில் 4 பேரை இந்த பைக்கில் ஏற்றி வரப்போவதாகவும் கூறியுள்ளார். அதற்காக பயிற்சியை எடுத்து வருவதாக இந்த வீடியோவில் பேசியுள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இப்படி மறக்கப்பட்ட பைக்கை நடிகர் சரவணன் தனது சீரியலுக்காக மீண்டும் ஓட்டி அதை வீடியோவா எடுத்து வெளியிட்டது, பலருக்கு அந்த பைக்கின் நினைவுகளை நமக்கு கொண்டு வந்து விட்டது. இது போன்று டிசைன் செய்யப்பட்ட பைக் மீண்டும் புதிய பெட்ரோல் இன்ஜின் அல்லது எலெக்ட்ரிக் பைக் வடிவில் மீண்டும் மார்கெட்டிற்கு வந்தால் நிச்சயம் நல்ல வரவேற்பை பெறும்.


Click it and Unblock the Notifications








