பெத்த மகன் இப்படி செஞ்சா எந்த அம்மாதான் சும்மா இருப்பாங்க.. நடு ரோட்டில் கண்ணீர் விட்டு அழ வச்சுட்டாரு! வீடியோ

ஓர் அம்மா தன்னுடைய மகன் வேண்டத்தகாத செயலை செய்வதைப் பார்த்த பின்னர் நடு ரோட்டிலேயே கண்ணீர் விட்டு அழுதிருக்கின்றார். இதுகுறித்த காட்சிகளே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. அவர் நடு ரோட்டில் நின்று கண்ணீர் விட்டு அழும் அளவிற்கு அந்த இளைஞர் அப்படி என்ன செய்தார் என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

பிள்ளைங்க ஆசப்பட்டு கேக்குதேனு பெற்றோர்கள் பலர் கண் மூடித் தனமாக அதிக சிசி திறன் கொண்ட வாகனங்களை வாங்கிக் கொடுத்துவிடுகின்றனர். அதை வாங்கி கொடுத்த பின்னர்தான் அவர்களுக்கு பெரும் தலைவலியே உருவாகின்றது. "உங்க பையன் நல்லா வந்துட்டானே. இப்படி ஒரு மகனை பெத்ததுக்கு நீங்க என்ன புண்ணியம் பண்ணீங்களோ" இப்படி எல்லாம் ஊரார் பேசுவாங்க என்பதே பெற்றோர்கள் பலரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

Mom cries

ஆனால், உண்மையில் பல பெற்றோர்கள் காதுகளுக்கு வருவதோ, "ஏன்யா உன் மவன அடக்கியே வைக்க மாட்டியா, அங்க இருக்க குட்டி செவத்துல ஒக்காந்துட்டு போற வர பொண்ணுங்களை எல்லாம் கிண்டல் பண்ணிட்டு இருக்கு. இதுல வேற நீ வாங்கி கொடுத்த வண்டிய வச்சு ராக்கெட்டு கணக்கா சர்சர்னு போயிட்டு வந்துட்டும் இருக்கான்" இப்படியான செய்திகளாகவே இருக்கின்றது.

இந்த மாதிரியான ஓர் மகன் பற்றிய தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். இந்த இளைஞர் குறித்து நீண்ட நாட்களாக அக்கம் பக்கத்தினர், உங்க பையன் வண்டில ரொம்ப வேகமா போறான் பாத்து கண்டிச்சு வைங்கனு சொல்லி இருக்காங்க. ஆனால், அந்த இளைஞரின் பெற்றோர்களோ தன் மகன் மீதிருக்கும் நம்பிக்கையினால் பெரிய அளவில் அவரை கண்டிக்கவில்லை.

Tears in eyes son speeding on a motorcycle

இந்த நிலையிலேயே தன் தாயின் கண் முன்னிலையிலேயே மிக அதிக வேகத்தில் அந்த இளைஞர் பைக்கில் சென்றிருக்கின்றார். இதை நேருக்கு நேராக பார்த்துவிடவே அந்த தாய் என்ன சொல்வது என்றே தெரியாமல் கண் கலங்கி துடிவிட்டார். எந்தவொரு பெற்றோரும் தன் பிள்ளைகளின் ஆசையையும், கனவையையும் நிறைவேற்ற வேண்டும் என்று மட்டுமே நினைப்பார்கள்.

ஆனால், அதையே அட்வான்டேஜாக எடுத்துக் கொண்டு நம்மில் ஒரு சிலர் அவர்களுக்கு தெரியாமல் சில வேண்டத்தகாத செயல்களைச் செய்துக் கொண்டிருக்கின்றோம். அந்த வகையிலேயே இளைஞர் சூப்பரான சிசி திறன் கொண்ட மோட்டார்சைக்கிளில் சாலைகளில் சீறி பாய்ந்த வண்ணம் சென்றுக் கொண்டிருந்திருக்கின்றனர். இந்த நிலையிலேயே ஒரு நாள் அவர் அதீத வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கும்போது அவரின் அம்மாவின் கண்களில் சிக்கி இருக்கின்றார்.

Over speeding bike

இதை பார்த்த உடன் முதலில் ஆதங்கப்பட்ட அவரின் அம்மா, அவரை திட்டி தீர்க்கத் தொடங்கினார், அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் கண்ணீர் விட்டு அழுக தொடங்கிவிட்டார். இந்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இந்த வீடியோவை உத்தர்காண்ட் டிராஃபிக் காவல்துறையே அவர்களின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றனர்.

இதை அவர்கள் யுட்யூபில் இருந்து எடுத்திருப்பார்கள் என தெரிகின்றது. இந்த வீடியோவை அவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மட்டுமே பகிர்ந்திருக்கின்றனர். பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் ஆசைப்படுகிறார்கள் என அதிக விலையைக் கொடுத்து அதிக சிசி திறன் கொண்ட பைக்குகளை வாங்கிக் கொடுக்கின்றனர்.

ஆனால், அவர்களோ பெற்றோர்களின் கனவுகளை மறந்துவிட்டு அந்த பைக்கில் உயிரை பணையம் வைக்கின்ற வகையில் அதிக வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். ஆகையால், பைக்கை பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் கொஞ்சம் கவனம் தேவை என்பதை வெளிக்காட்டும் விதமாக இந்த வீடியோவை காவல்துறை வெளியிட்டு இருக்கின்றது.

இருசக்கர வாகன ஓட்டிகள் அதிகளவில் விபத்திச் சிக்கில் உயிரிழப்பதற்கு காரணமே அவர்கள் அதிக வேகத்தில் சீறிப்பாய்வதுதான். இதனையே கவலையாகக் கொண்டு இளைஞரின் அம்மா அழுது இருக்கின்றார். ஆனால், பல இளைஞர்கள் தங்கள் வீட்டில் இருப்பவர்களை நினைத்துக் கூட பார்ப்பது இல்லை. தொடர்ந்து அதிவேகத்தில் சென்று விபத்தில் சிக்கி கை-கால் உள்ளிட்டவற்றை இழக்கின்றனர். இதுமட்டுமா சில நேரங்களில் உயிரையும் இழக்கின்றனர். அவர்கள் மட்டுமின்றி சில நேரங்களில் அப்பாவிகளின் உயிரும் விபத்தில் பறிபோகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: "யார் எப்படி போனா நமக்கென்ன. நாம சந்தோஷமா இருந்தா போதும்" இத்தகைய மன நிலையைக் கொண்டவர்களாகவே இன்றைய கால இளைஞர்கள் பலர் இருக்கின்றனர். ஒரு சில இளைஞர்கள் பெத்தவங்களை பற்றிகூட கவலைப்படுவதில்லை. அவங்களுக்கு நல்ல பெயர் சேர்க்கவில்லை என்றாலும் பரவாயில்லை, ஆனால், அவபெயரை மட்டும் ஏற்படுத்தி இதுபோன்று ரோட்டில் அழவிடக் கூடாது என்பதே எங்களின் வேண்டுகோள் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, August 31, 2023, 20:15 [IST]
English summary
Mom cries after seeing his son over speeding on bike
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X