இந்த கவாஸாகி ஏதோ பெரிய பிளான்ல தான் இருக்கு போலையே! விலை கம்மி பண்ணுறதும் புதிய பைக்க களமிறக்குதாவும் இருக்கே!
"இந்த கவாஸாகி ஏதோ பெரிய பிளான்ல இருக்கும் போலிருக்கே என கூறும் அளவிற்கு" அந்த நிறுவனம் இந்தியாவில் சில அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. சமீபத்தில்கூட அந்த நிறுவனம் டபிள்யூ 175 ஸ்ட்ரீட் எனும் மலிவு விலைக் கொண்ட பைக் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.
இந்த பைக்கை இந்தியாவின் புகழ்பெற்ற இந்தியா பைக் வீக் 2023 வாயிலாகவே அது விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதற்கு அறிமுக விலையாக ரூ. ரூ.1.35 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதன் வருகையால் கவாஸாகியின் மலிவு விலை பைக் மாடலாக டபிள்யூ 175 ஸ்ட்ரீட் அமைந்தது.

ராயல் என்பீல்டின் தயாரிப்புகளுக்கு மிகப் பெரிய போட்டியை வழங்கும் நோக்கில் இத்தகைய மலிவான விலையில் பைக்கை கவாஸாகி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ஆகையால், இதன் வருகையை ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. இந்த நிலையிலேயே, மற்றுமொரு ஷாக்களிக்கும் சம்பவமாக கவாஸாகி நிறுவனம், ஏற்கனவே விற்பனையில் இருந்த டபிள்யூ 175 பைக்கின் விலையைக் குறைத்தது.
யாரும் நம்ப முடியாத அளவிற்கு இதன் விலையில் ரூ. 25 ஆயிரத்தை அது குறைத்தது. இந்த நடவடிக்கையால், நிறுவனத்தின் தற்போதைய மிக மிக விலைக் குறைவான பைக் மாடலாக டபிள்யூ 175 மாறி இருக்கின்றது. விலை குறைப்பிற்கு முன்னர் வரை இந்த பைக்கின் விலை ரூ.1.47 லட்சம் தொடங்கி ரூ.1.49 லட்சம் வரை இருந்தது.

ஆனால், 25 ரூபாய் வரை குறைக்கப்பட்டு இருப்பதால் டபிள்யூ175 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 1.22 லட்சம் - ரூ.1.31 லட்சம் என குறைந்துள்ளது. இந்த மாதிரியான தொடர்ச்சியான அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து மற்றுமொரு சர்ப்ரைஸ் நடவடிக்கையாக நிறுவனம் இந்தியாவில் விரைவில் ஓர் சூப்பரான பைக்கை விற்பனைக்குக் களமிறக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கவாஸாகி எலிமினேட்டர் 450 எனும் க்ரூஸர் ரக பைக்கையே அந்த நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, இந்த பைக்கின் இந்திய வருகை உறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்த நிலையிலேயே, இந்த பைக் இந்தியாவில் வருகின்ற பிப்ரவரி மாதம் அல்லது மார்ச் மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியர்கள் மத்தியில் இந்த பைக்கிற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையிலேயே எலிமினேட்டர் 450 பைக்கின் வருகை அடுத்த மாதத்தின் முதல் காலாண்டிற்குள் அரங்கேற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்போதைய நிலவரப்படி நிறுவனத்தின்கீழ் வல்கேன் எஸ் எனும் க்ரூஸர் பைக்கே இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இது ஓர் 650 சிசி பைக் மாடல் ஆகும். இதன் எடை 235 கிலோவாகும். இதைவிட குறைவான எடைக் கொண்ட தயாரிப்பாகவே கவாஸாகி எலிமினேட்டர் 450 இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் எடை 176 கிலோ மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், வல்கேன் எஸ் மாடலைக் காட்டிலும் இந்த பைக்கை மிக சுலபமாக கையாள முடியும் என்பது தெளிவாக தெரிகின்றது.

இந்த பைக்கில் கவாஸாகி நிறுவனம் 451 சிசி திறன் கொண்ட பாரல்லல் ட்வின் எஞ்ஜினையே பயன்படுத்தி இருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 49 பிஎச்பி பவரை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த பைக்கின் உருவாக்கத்தில் டிரெல்லிஸ் ஃப்ரேம் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இத்துடன், 18 அங்குலம் - 16 அங்குல வீல் காம்பினேஷனே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இத்துடன், டெலிஸ்கோபிக் மற்றும் டூயல் ஸ்பிரிங் சஸ்பென்ஷனே இந்த பைக்கில் மிக சிறந்த ரைடிங் அனுபவத்தை வழங்கும் விதமாக பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. மேலும், மிக சிறந்த பிரேக்கிங் வசதிக்காக டிஸ்க் பிரேக்குகள் இரு வீல்களிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. புதிய கவாஸாகி எலிமினேட்டர் 450 பைக்கின் வருகை ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650-க்கு போட்டியாக அமைய இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த பைக்கின் விலை சற்று காஸ்ட்லியானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும், நல்ல ரெஸ்பான்ஸ் இந்த பைக்கிற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனை கவாஸாகி நிறுவனம் சிகேடி அல்லது சிபியூ வாயிலாகவே விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









