Best Mileage பைக்குகளின் லிஸ்ட்.. இந்த பிரீமியம் தர பைக்குகள் இவ்ளோ மைலேஜை தருமா?

நம்மில் பலர் கம்யூட்டர் ரக இருசக்கர வாகனங்கள் மட்டுமே அதிகம் மைலேஜ் தரும் என நினைத்துக் கொண்டிருக்கின்றோம். பிரீமியம் தர மோட்டார்சைக்கிள்களிலும் அதிகம் மைலேஜ் தரக் கூடிய மாடல்கள் உள்ளன. கம்யூட்டர் ரக மோட்டார்சைக்கிள்களுடன் ஒப்பிடுகையில், சற்று குறைவான மைலேஜை அவை வழங்கும். இருப்பினும், அவற்றின் மைலேஜ் திறன் குறைச் சொல்லும் அளவிற்கு இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

இத்தகைய நல்ல மைலேஜை வழங்கக் கூடிய மிக சிறந்த மைலேஜ் தரும் பிரீமியம் பைக்குகளின் லிஸ்டையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். ரூ. 3 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வரை விலைக் கொண்ட பெஸ்ட் மைலேஜ் தரும் பிரீமியம் தர மோட்டார்சைக்கிள்களின் பட்டியலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

Best mileage premium bikes

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310: இந்த பைக்கே இந்தியாவின் மிக சூப்பரான மைலேஜ் தரும் பிரீமியம் தர பைக்குகளின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்து இருக்கின்றது. இது ஒரு லிட்டருக்கு 33.1 கிமீ மைலேஜை வழங்கும். இது அராய் சான்றளித்த மைலேஜ் திறன் ஆகும்.

இது ஓர் பவர்ஃபுல் மோட்டார் கொண்ட பிரீமியம் தர மோட்டார்சைக்கிளாக இருந்தாலும், மைலேஜை வாரி வழங்குவதில் மிக சிறந்த பைக்காகக் காட்சியளிக்கின்றது. இந்த பைக்கிற்கு ரூ. 2.72 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

Tvs apache rr310

இதன் விலை உங்களுக்கு சற்று அதிகமாக தெரிந்தாலும், அதில் கொடுக்கப்பட்டு இருக்கும் அம்சங்கள் மற்றும் அதன் பயன்பாடு அந்த விலைக்கு முழு தகுதியானது ஆகும். டிவிஎஸ் நிறுவனம் இந்த பைக்கை பிஎம்டபிள்யூ மோட்டாராட் ஜி310 ஆர் பைக்கை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் அதே பிளாட்பாரத்தை பயன்படுத்தியே தயாரிக்கின்றது.

Bmw g 310 r

பிஎம்டபிள்யூ ஜி310 ஆர்: இந்த பைக்கே டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 மாடலுக்கு அடுத்தபடியாக அதிகம் மைலேஜை தரும் மோட்டார்சைக்கிளாக இருக்கின்றது. இது ஒரு லிட்டருக்கு 30கிமீ வரை மைலேஜ் தரும். இதன் ஆரம்ப விலை ரூ. 2.80 லட்சம் ஆகும். இத்தகைய குறைவான விலையைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்த பைக் மிகமிக விலை குறைவான பிஎம்டபிள்யூ பைக்காகக் காட்சியளிக்கின்றது.

Ktm 390 duke

கேடிஎம் ட்யூக் 390: அராய் உறுதி அளித்திருப்பதன்படி இந்த மோட்டார்சைக்கிள் ஒரு லிட்டருக்கு 25.7 கிமீ வரை மைலேஜ் தரும். இந்தியர்களின் மிகவும் பிரியமான மோட்டார்சைக்கிள் பிராண்டுகளில் கேடிஎம் ட்யூக்-ம் ஒன்றாகும். இதற்கு நாட்டு மக்கள் மத்தியில் அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இதன் விலை ரூ. 2.96 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பைக்கில் 373.27 சிசி திறன் கொண்ட அதிக பவர்ஃபுல் மோட்டார் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பைக்கில் பிரீமியம் தர அம்சங்கள் மிக மிக அதிகமாக இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Royal enfield interceptor 650

ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650: இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிகவும் சூப்பரான 650 சிசி பைக்காக இது இருக்கின்றது. இதன் திறன் சற்று அதிகம் என்பதால் இதன் மைலேஜ் திறன் சற்று குறைவாக இருக்கின்றது. ஒரு லிட்டருக்கு இது 25 கிமீ வரை மட்டுமே பயணிக்கும்.

இது ஓர் க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள் ஆகும். 4 ஸ்ட்ரோக் 647.95 சிசி மோட்டாரே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 47.4 பிஎஸ் பவரையும், 52.3 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த பைக்கை குறைவான வேகத்தில் இயக்கும்போது கூடுதல் மைலேஜை பெற முடியும்.

Royal enfield super meteor 650

ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650: நிறுவனத்தின் லேட்டஸ்ட் வருகையாக இந்த பைக் இருக்கின்றது. இது ஒரு லிட்டருக்கு 25 கிமீ வரை மைலேஜ் தரும். இந்த பைக்கில் பாரல்லல் ட்வின் சிலிண்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இது அதிகபட்சமாக 46.3 பிஎச்பி பவரையும், 52.3 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் ஆரம்ப விலை ரூ. 3.49 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

மேலே உள்ள அனைத்து பைக் மாடல்களிலும் பிரீமியம் அம்சங்கள் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன. உங்களுக்கு இவற்றின் விலை சற்று அதிகமாக தென்பட்டால், அதில் வழங்கப்பட்டு இருக்கும் அம்சங்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். அதேவேளையில், மைலேஜ் விஷயத்திலும் நீங்கள் பெருமை கொள்ளும் வகையில் இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 12, 2023, 17:56 [IST]
English summary
Most best mileage premium bike list
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X