சூப்பர் பைக்கை லோனில் வாங்க எவ்வளவு கிரெடிட் ஸ்கோர் இருக்க வேண்டும்? சிலந்தி வலை மாதிரி போய் சிக்கிக்காதீங்க!

இருசக்கர வாகனத்தையும், அதில், பயணிக்க விரும்பாத ஓர் நபரையும் காண்பது என்பது சற்று கடினமான ஒன்று. அதிலும் சூப்பர் பைக்கை விரும்பாதவர்களை பார்ப்பது மிக மிக அரிது. தங்களுக்கான சூப்பர் பைக்கை எப்படியாவது வாங்கவிட வேண்டும் என வெறிக் கொண்டு காத்திருக்கும் இளைஞர்களே இந்தியாவில் இருக்கின்றனர்.

ஆனால், லோன் கிடைக்குமோ, கிடைக்காதோ, அப்படியே கிடைத்தாலும் அதற்கு வட்டி இருக்குமே என்கிற எண்ணங்கள் இளைஞர்களின் சூப்பர் பைக் கனவை கனவாக வைக்கச் செய்துவிடுகின்றன. இத்தகைய இளைஞர்களுக்கு உதவும் விதமாகவே இந்த பதிவை நாங்கள் இந்த பதிவை தொகுத்து வழங்கி இருக்கின்றோம்.

சூப்பர் பைக்

அதாவது, சூப்பர் பைக்கை லோனில் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் சூப்பர் பைக் லோனை பெற என்ன செய்ய வேண்டும்?, என்ன மாதிரியான ஆவணங்கள் தேவைப்படும் என்கிற தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த விரிவான பதிவிற்குள் போகலாம்.

சூப்பர் பைக்குகள், பெயருக்கு ஏற்ப சூப்பர் ஃபாஸ்ட் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டவை. அதுமட்டுமில்லைங்க, அதிக வேகத்தின்போது அதிக பாதுகாப்பை வழங்க வேண்டும் என்பதற்காக உயர் பாதுகாப்பு கருவிகள் அவற்றில் வழங்கப்பட்டிருக்கும். இதுமட்டுமின்றி, ரைடிங் அனுபவத்தை மேலும் சுவாரஷ்யமானதாக மாற்ற வேண்டும் என்பதற்காக உயர் ரக தொழில்நுட்ப கருவிகளும் சூப்பர் பைக்கில் வழங்கப்பட்டு இருக்கும்.

சூப்பர் பைக்

இதன் விளைவாகவே சூப்பர் பைக்குகளின் விலையும் சற்று அதிகமாகக் காட்சியளிக்கின்றன. எனவே சூப்பர் பைக்குகளுக்கான லோன் விஷயத்தில் வங்கிகள் கொஞ்சம் கெடுபிடியை அதிகமாகவே காட்டுகின்றன. அதேவேளையில், ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்கும்பட்சத்தில் லோன் பெறுவதில் எந்த சிக்கலும் இருக்காது. குறிப்பாக, வசதிக்கு ஏற்ப கடன் திட்டங்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.

ஆகையால், இந்த விஷயத்தில் தகுதி என்பது மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது. அப்படி என்னென்ன தகுதிகளை நிதி நிறுவனங்களும், வங்கிகளும் எதிர்பார்க்கின்றன? என கேட்கின்றீர்களா?.. வேற என்ன, நல்ல கிரெடிட் ஸ்கோர், போதுமான வருமானம் இவையே வங்கிகளின் முக்கிய தேவையாக இருக்கின்றது.

இந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும்பட்சத்தில் பிற வழக்கமான இருசக்கர வாகனங்களுக்கு கடன் பெறுவதைப்போலவே சூப்பர் பைக்குகளுக்கான லோன் பெறுவதும் சற்று சுலபமானதே ஆகும். 'சூப்பர் பைக் கடன்' என்கிற பெயரில் உயர் ரக மோட்டார்சைக்கிள்களுக்கான கடன்களை வங்கிகள் வழங்குகின்றன. பைக்கை விற்பனைச் செய்யும் நிறுவனங்களின் வாயிலாகவே லோன்களை பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

வாடிக்கையாளர்களுக்கு லோன் சுலபமாக கிடைக்க வேண்டும் என்கிற நோக்கில் இவ்வாறு இருசக்கர வாகன விற்பனையாளர்கள் செய்கின்றனர். உங்கள் வருமானம், கிரெடிட் ஸ்கோர் வரலாறு மற்றும் மோட்டார்சைக்கிளின் விலை ஆகியவற்றை பொருத்து லோன்களுக்கான கன்டிஷன்கள் மாறுபடும். இதுதவிர வாடிக்கையாளர்களுக்கும் சில ஆப்ஷன்கள் வழங்கப்படும். லோனை சுலபமாக திரும்பி செலுத்த ஏதுவாக இஎம்ஐ கால அவகசாத்தை தேர்வு வாய்ப்பும் வசதி கடன்தாரர்களுக்கு வழங்கப்படுகின்றது.

ஆனால், இதற்கு கிரெடிட் ஸ்கோர் மிக சிறப்பாக இருக்க வேண்டும். 750-க்கும் அதிகமான கிரெடிட் ஸ்கோர் இருக்க வேண்டும். இதுபோன்று இன்னும் சில கட்டாய தேவைகள் இருக்கின்றன. அதாவது, கடன் பெற விரும்புபவர் 21 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்த வேண்டும். இதேபோல், 65க்கும் குறைவான வயதுக் கொண்டவராக இருத்தல் வேண்டும். குறைந்தபட்ச வருமானம் இருத்தல் வேண்டும்.

ஒரு வேளை நீங்கள் பிசினஸ் மேனாக இருந்தால் உங்கள் வருமானம் பற்றிய விபரத்தை சமர்பிக்க வேண்டி இருக்கும். அதேவேலையில் நீங்கள் பணி புரியும் நபராக இருந்தால் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும். இந்த தகுதிகள் அனைத்தும் சரியாக இருப்பின் சூப்பர் பைக்குகளுக்கான கடன் கிடைப்பதில் எந்த சிரமமும் இருக்காது.

ஒவ்வொரு வங்கி வெவ்வேறு விதமான வட்டியை சூப்பர் பைக் கடன்களுக்கு வசூலிக்கின்றன. அந்தவகையில், இருப்பதிலேயே அதிகமாக எச்டிஎஃப்சி வங்கி 11.99 சதவீதம் வட்டியை ஓராண்டுக்கு வசூலிக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக ஆக்ஸிஸ் வங்கி இருக்கின்றது. இந்த வங்கி ஓராண்டிற்கு 10.55 சதவீதம் வரை வட்டி வசூலிக்கின்றது. ஐசிஐசிஐ வங்கியில் ஆண்டுக்கு 9.50 சதவீதம் வரை இன்டரஸ்ட் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

எஸ்பிஐ-யில் 8.65 சதவீதம் தொடங்கி 9.45 சதவீதம் வரை இன்டரஸ்ட் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இதைவிட குறைவான சதவீதத்திலும் சில வங்கிகள் வாடிக்கையாளர்களை ஈர்க்கும்போது அவ்வப்போது சூப்பர் பைக்குகளுக்கான கடன்களை வழங்கிக் கொண்டிருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. வருமான சான்றை போலவே அடையாள சான்று, வங்கி கணக்கு விபரம், பான் அட்டை, முகவரி சான்று போன்ற உள்ளிட்டவையும் சூப்பர் பைக் கடனுக்கு முக்கிய தேவையாக இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

சூப்பர் பைக்கை பெற வங்கிக் கடன் ஒரு சிறந்த வழி ஆகும். இதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால், சூப்பர் பைக்குகளுக்கான கடனை தேடி செல்லும்போது சற்று கவனமாக இருத்தல் வேண்டும். ஒரு சில வங்கிகள் அதிக வட்டியை சூப்பர் பைக் கடன் வசூலிக்கின்றன.

இது சிலந்தி வலையை போன்றது. தேவையில்லாமல் சிக்கிக் கொள்ள கூடாது. உங்களின் வருமானத்திற்கு ஏற்ற சூப்பர் பைக்கை தேர்வு செய்வது மிக சிறந்தது. இதேபோல், மாத தவனையை தேர்வு செய்யும்போதும் கட்டாயம் கவனம் தேவை. இவற்றில் சிக்கினால் மீள்வது சற்று சிரமம்.

More from DriveSpark

Article Published On: Thursday, March 23, 2023, 15:15 [IST]
English summary
Most important things to know before get super bike loan
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+