அன்னையர் தினத்தில் இதில் ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கி அசத்துங்க!! எடை ரொம்ப குறைவு - தாய்மார்களுக்கு ஏற்றவை
அன்னையர் தினம் இன்று (மே 14). தினமும் நடந்தே அருகில் உள்ள இடங்களுக்கு சென்றுவரும் உங்களது அம்மாவிற்கு ஒரு ஸ்கூட்டரை வாங்கி தர விரும்புகிறீர்களா? அதிலும் சற்று புதுமையாக எலக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்ய திட்டமிட்டுள்ளீர்கள் எனில் உங்களுக்காகவே இந்த செய்தியில் அன்னையர்களுக்கு ஏற்ற, எடை குறைவான 4 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பற்றி பார்க்கலாம்.
பௌன்ஸ் இன்ஃபினிட்டி இ1 (Bounce Infinity E1): மாடர்ன் தோற்றத்தில் சந்தையில் சமீபத்தில்தான் அறிமுகமான இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2kWh 48 வோல்ட் 39 ஆம்பியர் பேட்டரி தொகுப்பு வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஆற்றலை பெறும் எலக்ட்ரிக் மோட்டாரில் இருந்து ஸ்கூட்டருக்கு அதிகப்பட்சமாக 2.9 பிஎச்பி மற்றும் 83 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றல் கிடைக்கிறது.

இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஈக்கோ மற்றும் ஸ்போர்ட் என 2 விதமான ரைட் மோட்கள் வழங்கப்படுகின்றன. இதன் பேட்டரி ஐபி67 சான்றளிக்கப்பட்டது ஆகும். பேட்டரியை 4இல் இருந்து 5 மணிநேரத்திற்குள் முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் நிறுத்தாமல் 85கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். இன்ஃபினிட்டி இ1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை மிகவும் குறைவு, ரூ.60 ஆயிரம் மட்டுமே.
ஹீரோ ஆப்டிமா சி.எக்ஸ் (Hero Optima CX): ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 550 வாட்ஸ் BLDC மோட்டார் வழங்கப்படுகிறது. 1.2 பிஎச்பி வரையில் இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த எலக்ட்ரிக் மோட்டாருக்கு ஆற்றலை 52.2 வோல்ட், 30 ஆம்பியர் லித்தியம் பாஸ்பேட் பேட்டரி வழங்குகிறது. இந்த பேட்டரியை 0-வில் இருந்து 100% சார்ஜ் செய்ய 4-5 மணிநேரங்கள் தேவைப்படும்.

ஆப்டிமா சி.எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சிங்கிள் அல்லது டபுள் பேட்டரிகள் உடன் வாங்க முடியும். சிங்கிள் பேட்டரி உடன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.62,190 மற்றும் டபுள் பேட்டரிகளுடன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.77,490 ஆகும். இரு பேட்டரிகளுடன் சிங்கிள்-ஃபுல் சார்ஜில் 140கிமீ தொலைவிற்கு ஸ்கூட்டரை இயக்க முடியும். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப்-ஸ்பீடு 45kmph ஆகும்.
ஆம்பியர் மேக்னஸ் இ.எக்ஸ் (Ampere Magnus EX): யுஎஸ்பி சார்ஜிங் வசதி, எல்சிடி திரை, கீலெஸ் எண்ட்ரீ மற்றும் திருட்டை தடுக்கும் அலாரம் போன்ற மாடர்ன் தொழிற்நுட்ப வசதிகளை பெறும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இது. இந்த ஸ்கூட்டரில் 1.2 கிலோவாட்ஸ் வரையிலான திறனை வெளிப்படுத்தக்கூடிய மோட்டார் பொருத்தப்படுகிறது. இந்த மோட்டாரினுள் 60 வோல்ட், 30 ஆம்பியர் பேட்டரி வழங்கப்படுகிறது.

இதன் பேட்டரியை 5 ஆம்பியர் சாக்கெட் உபயோகித்து 0-100% சார்ஜ் செய்ய குறைந்தது 6 மணிநேரங்கள் தேவைப்படும். ஆனால் 6-7 மணிநேர சார்ஜிங்கில் அதிகப்பட்சமாக 121கிமீ தொலைவு பயணத்திற்கான சார்ஜை பெற்றுவிடலாம். மேக்னஸ் இ.எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப்-ஸ்பீடு 55kmph மட்டுமே ஆகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.74 ஆயிரம் என்ற அளவில் உள்ளது.
ஹீரோ போட்டான் (Hero Photon): இந்த வரிசையில் நாம் பார்க்கும் 2வது எலக்ட்ரிக் ஸ்கூட்டரான ஹீரோ போட்டானில் 72 வோல்ட் 26 ஆம்பியர் பேட்டரி தொகுப்பு மற்றும் 1,200 வாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது. இதனை ஏறக்குறைய 5 மணிநேரங்களில் முழுவதுமாக சார்ஜ் நிரப்பிக்கொண்டு, அதிகப்பட்சமாக 90கிமீ தொலைவிற்கு பயணிக்க முடியும். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப்-ஸ்பீடு 45kmph மட்டுமே.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: வழக்கமான ஸ்கூட்டருக்கு பதிலாக எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்த அன்னையர் தினத்தில் உங்களது அம்மாவுக்கு வழங்குவது சிறந்த முடிவாக இருக்கும். ஏனெனில், அவர்களால் எளிதாக & சவுகரியமாக இயக்கக்கூடிய அளவிற்கு குறைவான எடையில் இருப்பது மட்டுமின்றி, கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடாமல் பசுமையான போக்குவரத்தையும் காக்கக்கூடியவை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆகும்.


Click it and Unblock the Notifications









