விமானத்தில் வந்திறங்க போகும் பைக்குகள்! தீவிரமாக நடக்கும் மோட்டோ ஜிபி பாரத் பணிகள்!
இந்தியாவில் மோட்டோ ஜிபி பாரத் போட்டிக்கான ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் முதல் மோட்டோ ஜிபி போட்டி என்பதால் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த போட்டிக்காக விமானத்தில் பைக்குகள் வந்திறங்குவது முதல் டிராக்குகளை செட் செய்வது வரை தற்போது நடந்து வரும் ஏற்பாடுகள் குறித்து விரிவாக காணலாம் வாருங்கள்.
மோட்டோ ஜிபி பாரத் என்பது சர்வதேச அளவில் நடக்கும் பைக் ரேஸ் பந்தயமாகும். இது மிகவும் பிரபலமான பைக் ரேஸ் பந்தயம். இந்த பைக் ரேஸ் பந்தயத்திற்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள் இந்தியாவிலும் கோடிக்கணக்கான மக்கள் இந்த பைக் ரேஸ் பந்தயத்தை பார்க்க ஆர்வமாக இருக்கின்றனர்.

இதுவரை இந்த போட்டி வெளிநாடுகளிலேயே நடந்து வந்தது இந்தியாவில் நடந்ததில்லை இந்நிலையில் முதல் முறையாக இந்த போட்டியை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. வரும் செப்டம்பர் மாதம் 22 முதல் 24 ஆம் தேதி வரை நொய்டா பெருநகர பகுதியில் உள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் பகுதியில் இந்த போட்டிகள் நடக்கிறது.
இந்தப் போட்டியை ஃபேர் ஸ்ட்ரீட் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இந்தியாவில் நடத்துகிறது. இந்தியாவில் மோட்டோ ஜிபி பாரத் என்ற பெயரில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட் புக்கிங் ஏற்கனவே ஆன்லைனில் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த போட்டிக்காக சுமார் இரண்டு மாதங்கள் வரை நேரம் இருக்கும் நிலையில் இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

இந்தப் போட்டியை இந்தியாவில் நடத்துவது மூலம் இந்தியா மோட்டோ ஜிபி போட்டியை நடத்தும் 31 வது நாடாக சேர்ந்துள்ளது. இந்த போட்டி நடைபெறும் புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் மைதானம் ஏற்கனவே எஃப்1 கார் ரேஸ்கள் நடந்த மைதானம் தான். ஆனால் இங்கு பிரிமியர் பைக் ரேஸ் நடக்கும் முதல் போட்டி இதுதான்.
இந்த பைக் ரேஸ்க்காக இந்த புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் சின்ன மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. இந்த ரேஸ் டிராக் ஏற்கனவே எஃப்1 போட்டிகள் நடந்த ரேஸ் டிராக் என்பதால் இதில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்ய வேண்டிய தேவை இல்லை. உலகிலேயே 4 டிராக்களில் தான் எஃப்1 போட்டியும் மோட்டோ ஜிபி போட்டியும் ஒரே டிராக்கில் நடந்துள்ளது. அதில் இந்தியாவில் உள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டும் ஒன்று.

இந்தப் போட்டி நடைபெறும் போது ஏற்படும் விபத்து நிகழ்ந்தால் அதில் ரைடருக்கு காயங்கள் பெரிய அளவில் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஆங்காங்கே ஸ்பெஷன் ஃபோம் பேரியர்கள் பொருத்தப்பட வேண்டும். இந்த சர்க்யூட்டில் ஏற்கனவே ஃபோம் பேரியர்கள் இருந்தாலும், இது எஃப் ஒன் கார் ரேஸ் பந்தயத்திற்காக பயன்படுத்தப்பட்டது தான். அதனால் இந்த பாரத் மோட்டோ ஜிபி போட்டிக்கு புதிதாக ஃபோம் பேரியர்கள் வாங்கப்பட்டுள்ளது.
இந்த மோட்டோ ஜிபி போட்டியை நிர்வகிப்பது எஃப்ஐஎம்(FIM) என்ற சர்வதேச அமைப்புதான் இந்த அமைப்பு ஒவ்வொரு போட்டி நடக்கும் இடத்தையும் கண்காணித்து பல்வேறு சோதனைகளை செய்து ஹோமோலோகேஷன் என்ற சான்றை வழங்குவார்கள். அதன்படி இந்த புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டிலும் ஹோமோலோகேஷன் சான்று வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஹோமோலோகேஷன் சான்று இல்லையென்றால் அந்த இடத்தில் மோட்டோ ஜிபி போட்டியே நடத்த முடியாது. இதற்கு சர்வதேச அமைப்பு அனுமதியையும் வழங்காது.. மோட்டோ ஜிபி போட்டியின் ஒன்பதாவது சீசனை கஜகஸ்தானில் நடந்த திட்டமிட்டபோது சரியான டிராக் இல்லாததால் போட்டியே ரத்து செய்யப்பட்டது. சமீபத்தில் ஃபின்லாந்தில் கூட இப்படியான சம்பவம் நடந்தது.
இந்தியாவில் இந்த போட்டியில் நடந்த திட்டமிட்ட போது எஃப்ஐஎம், டிரோனா ஸ்போர்ட்ஸ் மற்றும் ஐஆர்டிஏ (ரைடர் அசோசியேஸன்) ஆகிய மூன்று அமைப்புகள் தனித்தனியாக இந்த ரேஸ் டிராக்கை கடந்த ஓர் ஆண்டுகளாக அவ்வப்போது சோதனை செய்து வருகின்றனர். இதனால் இந்த போட்டி கடைசி நேரத்தில் சான்றளிக்கப்படாமல் ரத்து செய்யப்பட வாய்ப்புகள் குறைவுதான்.
இந்த போட்டி மொத்தம் மூன்று விதமான வெர்ஷன்களாக நடைபெறுகிறது. மோட்டோ ஜிபி, மோட்டோ 2, மோட்டோ 3 ஆகிய வெர்ஷன்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கான பைக்குகள் எல்லாம் போட்டி துவங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்புதான் இந்தியாவிற்கு கொண்டு வரப்படும். அதற்க முன்னர் வந்தால் பைக்கிற்கான பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்பதால் இது கடைசி நேரத்தில் தான் திட்டமிடப்படும்.
இதற்காக டிரொனா ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 747 ஜம்போ பிரைட்டர் ஏர்கிராப்ஃடை ஒருங்கிணைத்துள்ளது. இந்த விமானத்தில் தான் இத்தாலியில் இருந்து இந்த பைக்குகள் இந்தியாவிற்கு வர உள்ளன. இதில் மோட்டோ ஜிபி பந்தயத்தில் கலந்து கொள்ள உள்ள பைக்குகள் மற்றும் அது சார்ந்த பொருட்கள் எல்லாம் கொண்டு வரப்பட உள்ளன.
இதுபோக ஏற்கனவே கடல் வழியாக 20 கண்டெய்னரில் ஸ்பெஷல் ஃபோம் பேரியர், ஒளிபரப்பு கருவிகள், டயர் மற்றும் எரிபொருள் ஆகியன கொண்டுவரப்பட்டுள்ளன. இது போக தற்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் எப்படி செய்வது என ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. போலீசாரும் இந்த போட்டியை நடத்தும் போது பாதுகாப்பு வழங்குவதற்காக ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மோட்டோ ஜிபி போட்டியை இந்தியாவில் நடத்துவது இந்தியாவிற்கு பெருமையான தருணமாக இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் தற்போது தீவிரமாக நடந்து வரும் நிலையில் இந்த போட்டியை காண ரசிகர்களும் ஆர்வமாகி வருகின்றனர். எந்த பிரச்சனையும் இல்லாமல் இந்த போட்டி செப்டம்பர் மாதம் தூங்குவதற்காக நாம் காத்திருப்போம்


Click it and Unblock the Notifications









