இவ்வளவு கம்மியாதான் செலவாகுமா? மோட்டோ ஜிபி போட்டியின் டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பாரத் மோட்டோ ஜிபி போட்டிக்கான டிக்கெட் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ரூ 800 முதல் ரூ 40 ஆயிரம் வரை தற்போது டிக்கெட்டுகள் விற்பனையாகி வருகின்றன. எந்தெந்த விலையில் டிக்கெட் இருக்கின்றன? எந்த விலையில் டிக்கெட் எடுத்தால் எந்த இடத்தில் இருந்து பார்க்கலாம்? என்ற விரிவான தகவல்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் முதன்முறையாக பாரத் மோட்டோ ஜிபி பைக் ரேஸ் வரும் செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடக்க உள்ளது. நொய்டா பெருநகரப் பகுதியில் உள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் என்ற இடத்தில் இந்த போட்டி நடக்க உள்ளது. இங்கு மோட்டோ ஜிபி, மோட்டோ 2, மோட்டோ 3 ஆகிய போட்டிகள் நடக்கிறது.

moto gp ticket price details

மொத்தம் மூன்று நாட்கள் நடக்கும் போட்டிக்கு ஒரே டிக்கெட் தான் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு டிக்கெட் எடுத்தாலே மூன்று நாட்களும் போட்டியை கண்டு கழிக்கலாம். இருப்பதிலேயே குறைந்த விலையாக ரூ 800க்கு டிக்கெட் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இந்த டிக்கெட் ஏற்கனவே விட்டு தீர்ந்து விட்டது. இந்த டிக்கெட்டை எடுத்தவர்கள் பேனிக் ஸ்டாண்ட் நார்த் (Panic Stand North) பகுதியிலிருந்து தான் போட்டியை காண முடியும்.

தற்போது விற்பனையாகும் டிக்கெட்டில் இருப்பதிலேயே குறைந்த விலை டிக்கெட்டாக ரூபாய் 2500க்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. பேணிக் ஸ்டாண்ட் நார்த் (Panic Stand North), நேச்சுரல் ஸ்டாண்ட் சவுத் (Narutal Stand South), பேனிக் ஸ்டாண்ட் சவுத் (Panic Stand South) ஆகிய பகுதிகளில் டிக்கெட் ரூபாய் 2500 க்கு எடுத்துக் கொள்ளலாம்.

moto gp ticket price details

இதில் நேச்சுரல் ஸ்டாண்ட் சவுத் (Narutal Stand South)பகுதியில் ட்ராக்கின் 9 மற்றும் 10 கார்னரில் பைக்குகள் வரும்போது பார்க்க முடியும். பேணிக் ஸ்டாண்ட் சவுத் (Panic Stand South) பகுதியை பொறுத்தவரை 12,13 மற்றும் 14ம் கார்னரில் பைக் வரும் போது பார்க்க முடியும். பேனிக் ஸ்டாண்ட் நார்த் (Panic Stand North) பகுதியில் முதல் கார்னரில் பைக் வரும் போது பார்க்க முடியும்.

அடுத்ததாக ரூ 6000-த்திற்கான டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. ஸ்டார் ஸ்டாண்ட் 1 ஈஸ்ட் (Star Stand 1 East), ஸ்டார் ஸ்டாண்ட் 2 ஈஸ்ட்(Star Stand 2 East), கிளாசிக் ஸ்டாண்ட் 2 ஈஸ்ட் (Classic Stand 2 East), கிளாசிக் ஸ்டாண்ட் 1 வெஸ்ட் (Classic Stand 1 West), ஆகிய பகுதிகளுக்கு ரூ 6000 டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

moto gp ticket price details

இதில் ஸ்டார் ஸ்டாண்ட் 1 ஈஸ்ட் (Star Stand 1 East) பகுதியில் டர்ன் 4ல் பைக் வரும் போதும், இருப்பதிலேயே நீளமான ஸ்கெட்ச் பைக் வரும் போதும் காண முடியும். ஸ்டார் ஸ்டாண்ட் ஃப்ரீ ஈஸ்ட் (Star Stand 1 East) பகுதியில் டென் போரில் பைக் நுழையும் போதும் வெளியேறும் போதும் பார்க்க முடியும்.

கிளாசிக் ஸ்டாண்ட் 2 ஈஸ்ட் (Classic Stand 2 East) பகுதியில் டர்ன் 7 மற்றும் 8 பகுதிகளில் பைக் செல்லும்போது பார்க்க முடியும். இந்தப் பகுதி டிராக்கின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. கிளாசிக் ஸ்டாண்ட் 1 வெஸ்ட் (Classic Stand 1 West) பகுதியிலிருந்து டர்ன் 14 மற்றும் டர்ன் 15 ஆகிய பகுதிகளில் பைக் வரும்போது பார்க்க முடியும்.

அடுத்த ரூ 8000-த்திற்கான டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. ஸ்டார் ஸ்டேண்டு 2 ஈஸ்ட் (Star Stand 2 East), கிளாசிக் ஸ்டாண்ட் 2 வெஸ்ட் (Classic Stand 2 West) ஆகிய பகுதிகளுக்கு மட்டும் இந்த விலையில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

ஸ்டார் ஸ்டாண்ட் 2 ஈஸ்ட் (Star Stand 2 East) பகுதி இருப்பதிலேயே நீளமான ஸ்கெட்ச் பைகள் வேகம் எடுக்கும் போது பார்க்க கூடிய இடமாக இருக்கும். கிளாசிக் ஸ்டான்ட் டூ வெஸ்ட் (Classic Stand 2 West) பகுதி டர்ன் 15 மற்றும் 16க்கு இடையே இருக்கிறது.

அடுத்ததாக ரூ 10 ஆயிரத்திற்கான டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. பிரீமியம் ஸ்டாண்ட் சவுத் (Premium Stand South) பகுதியில் இந்த டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. 10, 11 மற்றும் 12 க்கு இடையே இந்த சீட் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஷேடுகளும் அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக ரூபாய் 12 ஆயிரத்திற்கான டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. இது கிளாசிக் ஸ்டாண்ட் நார்த் (Classic Stand North)பகுதியில் உள்ள டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. இந்தப் பகுதி தான் டர்ன் 1 பகுதியிலிருந்து அடுத்து நீளமான ஸ்டிரெச்சில் பைக் செல்லும்போது பார்க்க முடிய கூடியதாக இருக்கிறது. இந்த டேனில் தான் பைக் ரேஸர்கள் ஆக்ரோஷமாக தங்களது பைக்குகளை திருப்புவார்கள்.

அடுத்ததாக ரூ 15 ஆயிரத்திற்கான டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்படுகிறது. இது பிரீமியம் டிக்கெட்டாக ஷேடுகளுடன் கூடிய சீட்கள் வழங்கப்படுகிறது. இந்தப் பகுதி ரேஸ் துவங்கும் பகுதியிலிருந்து டர்ன் 1 பகுதி வரை கிளியர் வியூ கிடைக்கும் வகையில் இந்த சீட்டிங் வழங்கப்பட்டுள்ளது.

அடுத்து ரூ 20 ஆயிரத்திற்கான டிக்கெட் மெயின் கிராண்ட் ஸ்டாண்ட் பகுதியில் வழங்கப்படுகிறது. பிளாக் சி முதல் இசட் வரையும் ஏஏ மற்றும் ஏபி ஆகிய பிளாக்கில் இந்த டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும். இங்கிருந்து ரேஸ் துவங்கும் இடத்தை காண முடியும் இது ப்ரீமியம் சீட்டிங்கில் ஷேடுடன் கூடிய சீட்டிங்கள் வழங்கப்படும் இடமாக இருக்கிறது.

அடுத்ததாக ரூபாய் 25,000 டிக்கெட்டுக்கு மெயின் கிராண்ட்கேட் அப்பர் டயரில் ஏ, பி, ஏசி, ஏடி ஆகிய பிளாக்குகளும், லோயர் டயரில் சி முதல் இசட் வரையிலும் ஏ ஏ மற்றும் ஏபி ஆகிய பிளாக்ககளும் வழங்கப்படுகிறது. இதுவும் பைக் ரேஸ் ஸ்டார்ட் ஆகும் பகுதியில் அமைந்துள்ளது. பிரிமியம் சீட்டிங்களாக சேடுகளுடன் வழங்கப்படுகிறது.

ரூ 30 ஆயிரத்திற்கான டிக்கெட்டை பொருத்தவரை மெயின் கேட் ஸ்டாண்ட் லோயர் டயர் பகுதியில் ப்ளாக் ஏ, பி, ஏசி, ஏடி ஆகிய பிளாக்களில் வழங்கப்படுகிறது .இந்த இடம் ரேஸ் ஸ்டார்ட் செய்யும் பகுதிக்கு மிகவும் அருகில் இருக்கும் இடமாக இருக்கிறது.

இருப்பதிலேயே அதிகபட்சமாக ரூபாய் 40 ஆயிரத்திற்கு டிக்கெட் விற்பனை ஆகிறது இது பிளாட்டினம் ஸ்டாண்ட் கார் பாக்ஸ் என வழங்கப்படுகிறது. மெயின் கிராண்ட் ஸ்டாண்ட் பகுதியில் தான் இந்த பிளாட்டினம் ஸ்டாண்ட் கார்ப் பாக்ஸாக அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 55 பாக்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் உணவு மற்றும் கூல்டிரிங்ஸ் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். இது ஏசி பொருத்தப்பட்ட பாக்ஸ்களாக இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பைக் ரேஸ் ரசிகர்கள் இந்த போட்டிக்காக பல ஆண்டுகளாக காத்திருந்தனர். தற்போது இந்த போட்டிக்கான டிக்கெட் ஓப்பனாகியுள்ள நிலையில் இந்த டிக்கெட்டை வாங்க கடும் போட்டி நிலவி வருகிறது.போட்டி துவங்குவதற்கு முன் அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்துவிடும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, June 26, 2023, 13:52 [IST]
English summary
Moto gp ticket prices and seating information complete guide
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X