டிடிஎஃப் வாசன் அடுத்து இந்த பைக் தான் வாங்குவாரா? இத்தாலி நிறுவனத்தின் பைக் இந்தியாவுல கெத்து காட்ட போகுது!

இந்தியாவில் ஆட்டோ எக்ஸ்போ 2023 பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் தங்கள் தயாரிப்புகளை இந்த எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியுள்ளனர். தற்போது மக்கள் இந்த வாகனங்களைக் காணக் கூட்டமாக அழை மோதி வருகின்றனர். இந்நிலையில் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன மோட்டோ மோர்னி செய்எம்மீஸ்ஸோ பைக்குகள் குறித்துக் காணலாம்

மோட்டோமோர்னி நிறுவனம் இத்தாலியில் பிரபலமான நிறுவனம். இந்நிறுவனம் இந்தியாவில் களம் இறங்கி தனது தயாரிப்புகளை விற்பனைக்குக் கொண்டு வரத் துவங்கிவிட்டது. அந்த வகையில் தற்போது அந்நிறுவனம் செய்எம்மீஸ்ஸோ என்ற பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. ரேட்ரோ ஸ்டிரீட் மற்றும் ஸ்கிரம்பிளர் ஆகிய இரண்டு பைக்குகளை காட்சிப்படுத்தியுள்ளது.

டிடிஎஃப் வாசன் அடுத்து இந்த பைக் தான் வாங்குவாரா? இத்தாலி நிறுவனத்தின் பைக் இந்தியாவுல கெத்து காட்ட போகுது!

இந்நிறுவனம் ஏற்கனவே எக்ஸ் கேப் என்ற பைக்குகளை காட்சிப்படுத்தியுள்ள நிலையில் இந்த செய்எம்மீஸ்ஸோ பைக்கும் அத்துடன் இணைந்துள்ளனர். இந்த பைக்கை ஏற்கனவே இந்நிறுவனம் கடந்த நவம்பர் மாதமே வெளியிட்டுள்ள நிலையில் தற்போது மக்கள் மத்தியில் தனது பைக்கை காட்சிப்படுத்து மூலம் மக்களிடம் இந்நிறுவனத்தை விரைவாகக் கொண்டு சேர்க்க முடியும் என்பதால் இந்த ஆட்டோ எக்ஸ்போவில் இந்த பைக்குகளை காட்சிப்படுத்தியுள்ளது.

முன்னரே நாம் சொன்னது போல செய்எம்மீஸ்ஸோ பைக்கில் 2 வேரியன்ட்கள் இருக்கிறது. ரேட்ரோ ஸ்டிரீட் மற்றும் ஸ்கிரம்பிளர் ஆகிய வேரியன்ட்கள் உள்ளன. கலரை பொருத்தவரை ஒவ்வொரு வேரியன்டிற்கும் 3 கலர் ஆப்ஷன்கள் உள்ளன. ரேட்ரோ ஸ்டிரீட் வேரியன்டை பொருத்தவரை மேட் க்ரே, மெட்டாலைஸ்டு ஒயிட், மிலானோ ரெட், ஆகிய கலர்களும், ஸ்கிரம்பிளர் பைக்கை பொருத்தவரை இன்டிகோ ப்ளூ, மேட் கிரீன், கிராஃபைட் பிளாக் ஆகிய நிறங்களும் இருக்கிறது.

டிடிஎஃப் வாசன் அடுத்து இந்த பைக் தான் வாங்குவாரா? இத்தாலி நிறுவனத்தின் பைக் இந்தியாவுல கெத்து காட்ட போகுது!

இந்த இரண்டு வேரியன்டிற்கும் உள்ள வித்தியாசம் ஃப்ளை ஸ்கிரீன், அண்டர் பெல்லி புரோடெக்ஷன், ஸ்போக்டு ரிம் ஆகிய ஆப்ஷன்களுடன் ஆஃப்ரோடு அம்சங்கள் நிறைந்ததாக ஸ்கிரம்பிளர் மாடல் இருக்கும். இன்ஜினை பொருத்தவரை இரண்டு வேரியன்டிலும் ஒரே 649 சிசி இன்லைன் ட்வின், டிஓஎச்சி, லிக்யூடு, கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 55 எச்பி பவரை 8250 ஆர்பிஎம்மிலும், 54 என்எம் டார்க் திறனை 7000 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும். இந்த பைக் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் சஸ்பென்சஸ் சிஸ்டத்தை பொருத்தவரை ஹைஎண்ட் அட்ஜெஸ்டபிள் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் முழுமையாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய 120 மிமீ யூஎஸ்டி ஃபோர்க்ஸ், பின்பக்கம் முழுமையாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய 118 மிமீ மோனோ ஷாக் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. பிரேக்கிங்கை பொருத்தவரை முன்பக்கம் 298 மிமீ ரோட்டார், ஃப்ளோட்டிங் கேலிபர் செட்டப், 255 மிமீ சிங்கிள் டிஸ்க் செட்டப், மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது.

டிடிஎஃப் வாசன் அடுத்து இந்த பைக் தான் வாங்குவாரா? இத்தாலி நிறுவனத்தின் பைக் இந்தியாவுல கெத்து காட்ட போகுது!

இரண்டு பைக்குகளிளும் 5 இன்ச் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்டேஷன் கன்சோல் பொருத்தப்பட்டுள்ளது. ப்ளூ டூத் கனெக்டிவிட்டி, ரைடிங் மோட், 10 கலர் சீட்கள், மற்றும் யூஎஸ்பி போர்ட் ஆகியன ஸ்கிரம்பிளர் வேரியன்டில் உள்ளது. இந்த இரண்டு பைக்கின் வீல் பேஸை பொருத்தவரை 1440 மீமீ நீளம் கொண்டது. சீட் 785 மமீ உயரம் கொண்டது. இந்த மொத்தம் 215 கிலோ எடை கொண்டது. 170 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது. பைக்கின் டேங்க் 15.5 லிட்டர் கொள்ளளவு கொண்டது. இந்த பைக் மார்கெட்டில் டிரையம்ப், கவாசகி, ஹோண்டா ஆகிய நிறுவனங்களில் வாகனங்களுக்குப் போட்டியாகக் களம் இறங்குகிறது.

இந்த பைக்கின் விலையைப் பொருத்தவரை ரெட்ரோ ஸ்டிரீட் பைக்கை பொருத்தவரை ரூ6.89 லட்சம் என்ற விலையிலும், ஸ்கிரம்பிளர் பைக்கை பொருத்தவரை ரூ6.99 லட்சம் என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பைக்கிற்கான புக்கிங் துவங்கிவிட்டது. ரூ10 ஆயிரம் கொடுத்து இந்த பைக்கை புக்கிங் செய்யலாம். ஆனால் இந்த பைக்கின் டெலிவரி துவங்கவில்லை. மக்களிடம் இந்த பைக்கை காட்டவே காட்சிப்படுத்தியுள்ளனர். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, January 16, 2023, 17:16 [IST]
English summary
Moto Morini showcased Seiemmezzo retro and scrambler bikes in the auto expo 2023
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+