இதோட வருகையை ராயல் என்பீல்டு தாங்குமா? சீன நிறுவனம் போட்டிருக்க பிளான பாத்தா நிறைய பைக் மாடல் காலியாகும் போல!
சீன நிறுவனம் இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலக புகழ்பெற்ற ஆட்டோ எக்ஸ்போவை பயன்படுத்தி தனது முக்கிய பைக் மாடல்களான எக்ஸ்-கேப் 650 மற்றும் எக்ஸ்-கேப் 650 எக்ஸ்-ஐ வெளியீடு செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
சீன நிறுவனமான ஹோங்ஹெங் வெயிக்கிள் குழுமத்திற்கு சொந்தமானது மோட்டோ மோரினி (Moto Morini). இது ஓர் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்டோ எக்ஸ்போ வாயிலாக தனது இருசக்கர வாகன மாடல்களை மீண்டும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்திருக்கின்றது.

நிறுவனம் நான்கு மோட்டார்சைக்கிள்களை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியது. அவற்றில், எக்ஸ்-கேப் 650 (Moto Morini X-CAPE 650) மற்றும் எக்ஸ்-கேப் 650 எக்ஸ் (Moto Morini X-CAPE 650X) ஆகிய இரு மோட்டார்சைக்கிள் பற்றியே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.
எக்ஸ்-கேப் 650 மற்றும் எக்ஸ்-கேப் 650 எக்ஸ்
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 650 இரட்டையர்களை (கான்டினென்டல் 650 மற்றும் இன்டர்செப்டார் 650)-போல், மோட்டோ மோரினி நிறுவனம் இந்திய சந்தையில் களமிறக்கி இருக்கும் இரட்டையர்கள் பைக் மாடலே எக்ஸ்-கேப் 650 மற்றும் எக்ஸ்-கேப் 650 எக்ஸ் ஆகும். உருவத்தில் மட்டுமே இவை மாற்றங்களைக் கொண்டிருக்கின்றன. அதுவும் கணிசமான மாற்றங்களை மட்டுமே அது கொண்டிருக்கின்றது.

எஞ்ஜின் விபரம்
எஞ்ஜின் மற்றும் சிறப்பம்சங்கள் விஷயத்தில் இரண்டும் ஒரே மாதிரியானதாக இருக்கும். எனவேதான் எக்ஸ்-கேப் 650 எக்ஸ் மற்றும் எக்ஸ்-கேப் 650 பைக்குகளாக பார்க்கப்படுகின்றன. இந்த பைக்கில் 650 சிசி திறன் கொண்ட 8 வால்வுகள் அடங்கிய 60 எச்பி மற்றும் 54 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்
இந்த இருசக்கர வாகன மாடல்களில் மிக சிறந்த இயக்க அனுபவத்தை வழங்குவதற்காக முன்பக்கத்தில் மசரோச்சி அட்ஜெஸ்டபிள் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் கேஒய்பி ஷாக் அப்சார்பரும் கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன், அட்ஜெஸ்டபிள் விண்ட் ஸ்கிரீன், 7 அங்குல டிஎஃப்டி திரை, 19 அங்குல ஸ்கார்பியன் ரேல்லி எஸ்டிஆர் டயர்கள், பிரெம்போ பிரேக்குகள் மற்றும் பாஷ் ட்யூவல் சேனல் ஏபிஎஸ் மற்றும் 18 லிட்டர் கொள்ளளவுக் கொண்ட ஃப்யூவல் டேங்க் ஆகியவையும் இருசக்கர வாகனத்தில் வழங்கப்பட்டுள்ளன.

கவர்ச்சியான தோற்றத்திற்காக என்ன சேர்க்கப்பட்டுள்ளது
மேலும், பைக்கின் கவர்ச்சியான தோற்றத்திற்காக அழகிய தோற்றம் கொண்ட முழு எல்இடி ஹெட்லைட் மற்றும் பேக்லிட் ஸ்விட்ச் கியர் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்று எக்கசக்கமான சிறப்பம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இருசக்கர வாகனத்தின் ரைடிங் அனுபவத்தை மிக சிறந்ததாக மாற்றும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.
மோட்டோ மோரினி நிறுவனம் ஆதிஸ்வர் ஆட்டோ ரைடு இந்தியா நிறுவனத்துடன் இணைந்தே தனது இருசக்கர வாகனங்களை இந்தியாவில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் அனைத்து இருசக்கர வாகன மாடல்களும் அதிக பிரீமியம் வசதிகள் கொண்டவை ஆகும். இந்த பைக்குகளின் விலை இப்போதும் அறிவிக்கப்படவில்லை.
போட்டியாளர்கள்
விரைவில் இதுகுறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த பைக் விற்பனைக்கு வரும்பட்சத்தில் கவாஸகி வெர்சிஸ் 650, சுஸூகி வி -ஸ்டிரோம் 650எக்ஸ்டி மற்றும் டிரையம்ப் டைகர் 660 ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக இருக்கும். இத்துடன் ராயல் என்பீல்டு 650 இரட்டையர்களுக்கும் இதன் வருகை இக்கட்டான சூழலை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








