3 நாளில் 30 ஆயிரம் டிக்கெட்கள் விற்பனை! நீங்க டிக்கெட் புக் பண்ணியாச்சா? அப்புறம் கேட்டாலும் கிடைக்காது!

பாரத் மோட்டோ ஜிபி போட்டிக்கான டிக்கெட்கள் ஆன்லைனில் விற்பனை துவங்கிய மூன்றாவது நாளே 30 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. நீங்களும் இந்த போட்டியை காண டிக்கெட்டை இப்பொழுதே ஆன்லைனில் புக்கிங் செய்யலாம். இப்பொழுது மிஸ் செய்தால் பின்னர் கிடைக்காது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் முதன்முறையாக மோட்டோ ஜிபி பாரத் போட்டி நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. வரும் செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை பெருநகர நொய்டா பகுதியில் உள்ள புத் இண்டர்நேஷனல் சர்க்யூட் என்ற ரேஸ் டிராக்கில் இந்த போட்டிகள் நடக்கிறது.

Motogp bharat tickets

இந்தியாவில் இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை ஃபேர் ஸ்ட்ரீட் ஸ்போர்ட்ஸ் என்ற அமைப்பு நடத்தி வருகிறது. இந்த அமைப்புதான் ஏழு ஆண்டுகளுக்கு இந்த போட்டியை இந்தியாவில் நடத்த உரிமையை வாங்கி உள்ளது. இந்த ஆண்டு முதன் முறையாக இந்த போட்டியை நடத்துகிறது. இனி அடுத்த 7 ஆண்டுகள் இந்த போட்டிகள் நடத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.

தற்போது இந்த போட்டியை நடத்த ரேஸ் டிராக் தயார் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த போட்டியை நேரில் காண்பதற்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் துவங்கியது. மொத்தம் மூன்று நாட்கள் நடக்க உள்ள இந்த போட்டியில் மோட்டோ ஜிபி, மோட்டோ 2, மோட்டோ 3 ஆகிய போட்டிகள் நடக்க உள்ளது.

Motogp bharat tickets

மூன்று போட்டிகளுக்கும் ஒரே டிக்கெட்டுகளாக ஆன்லைனில் டிக்கெட்டுகள் பரபரப்பாக விற்பனையாகி வருகிறது. இந்தப் போட்டியை நேரில் காண சுமார் 1.6 லட்சம் பேருக்கு இடவசதி இருக்கிறது. இந்நிலையில் ரேஸ் டிராக் பகுதி பகுதியாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு விதமான டிக்கெட் விலையில் டிக்கெட்கள் விற்பனையாகி வருகிறது.

ஆன்லைனில் புக்மைஷோ தளத்தின் மூலம் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டிக்கெட் புக்கிங் துவங்கும் முன்பே அதற்கான முன்பதிவு துவங்கியது. முன்பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் டிக்கெட்கள் வழங்கப்பட்டது. தற்போது அனைவருக்கும் டிக்கெட் உடனடியாக எடுத்துக் கொள்ளும்படி டிக்கெட் விற்பனை பரபரப்பாக நடந்து வருகிறது.

Motogp bharat tickets

டிக்கெட் விற்பனை துவங்கிய மூன்று நாட்களில் 30,000 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. இந்தியாவில் உள்ள பைக் ரேஸ் ரசிகர்கள் மத்தியில் மோட்டோ ஜிபி போட்டியை நேரில் காண வேண்டும் என்ற ஆசை வெகு நாட்களாக இருந்தது. ஆனால் இதைக் காண வெளிநாடு தான் செல்ல வேண்டும் என்ற நிலை இருந்தது.

தற்போது இந்த நிலை மாறி இந்தியாவிலேயே இந்த போட்டியை காண வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் இந்தியாவில் உள்ள மோட்டார் பைக் ரேஸ் ரசிகர்கள் இந்தப் போட்டியை நேரில் காண ஆர்வமாக உள்ளனர். பலர் டிக்கெட்டை புக் செய்து வரும் நிலையில் உங்கள் டிக்கெட்டை இப்பொழுதே புக் செய்யுங்கள், போட்டி துவங்கும் நேரத்தில் டிக்கெட் கிடைக்காது.

டிரைவிங் ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் நடக்கவுள்ள மிகப்பெரிய பைக் ரேஸ் போட்டி இது. இந்த போட்டிக்கான டிக்கெட் தற்போது விற்பனையாகி வரும் நிலையில் விரைவில் இந்த டிக்கெட்டுகள் தீர்ந்து போக கூட வாய்ப்புள்ளது. இதனால் இந்த போட்டியை நீங்கள் நேரில் காண விரும்பினால் தற்போது இந்த போட்டிக்கான டிக்கெட்டை புக்கிங் செய்து கொள்ளுங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, June 30, 2023, 22:37 [IST]
English summary
Motogp bharat 30k tickets sold track check on
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X