சென்னையில் உருவான ரேடியோ ஸ்டேஷன்!! இன்று அடைந்திருக்கும் உயரம் ரொம்ப பெரிசு - ரேடியோ மிர்ச்சி!
இந்தியாவில் விரைவில் நடைபெற இருக்கும் மோட்டோஜிபி பாரத் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் அதிகாரப்பூர்வ ரேடியோ பார்ட்னராக ரேடியோ மிர்ச்சி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களையும், இந்தியாவில் நடைபெறும் மோட்டோஜிபி பந்தயம் குறித்தும் விரிவாக இனி பார்க்கலாம்.
மோட்டோஜிபி பந்தயங்களை இதற்கு முன் பல்வேறு நாடுகளில் நடைபெற்று பார்த்திருப்பீர்கள். ஆனால் இந்த 2023ஆம் ஆண்டிற்கான கிராண்ட் பிரிக்ஸ் இந்தியாவிலும் நடைபெற உள்ளது. இந்தியாவில் முதல்முறையாக துவங்கவுள்ள இந்த பந்தயம் வருகிற செப்டம்பர் 22இல் துவங்கி 24ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.

டெல்லிக்கு அருகே உத்திர பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் உள்ள புத் சர்வதேச பந்தய களத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடக்கும் கிரண்ட் பிரிக்ஸ் பந்தயங்களுக்கு இந்தியன் ஆயில் ஸ்பான்சர் செய்கிறது. ஃபேர்ஸ்ட்ரீட் ஸ்போர்ட்ஸ் மற்றும் டோர்னா ஸ்போர்ட்ஸ் நிறுவனங்கள் இந்த பந்தயங்களை நிர்வகிக்க உள்ளன.
இந்த நிலையில், பாரத் கிராண்ட் பிரிக்ஸ் போட்டிக்கான அதிகாரப்பூர்வ ரேடியோ பார்ட்னராக ரேடியோ மிர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பிரபலமான ரேடியோ நிலையங்களுள் ஒன்றான ரேடியோ மிர்ச்சி சென்னையில் தேனாம்பேட்டையில் தலைமையகத்தை கொண்டுள்ளது. இதுகுறித்து ஃபேர் ஸ்ட்ரீட் ஸ்போர்ட்ஸ் நிற்வனத்தின் முதன்மை நிர்வாக மேலாளர் ரோகித் ஷர்மா கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, "ரேடியோ மிர்ச்சி 98.3 எஃப்.எம் இந்தியன் ஆயில் கிராண்ட் பிரிக்ஸிற்கான எங்கள் பிர்த்யேக ரேடியோ பார்ட்னராக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த கூட்டணி நிச்சயமாக பந்தயப் பாதையில் ஸ்டால்கள் மற்றும் சில பல நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் பார்வையாளர்களின் அனுபவத்தையும் பங்கேற்பையும் மேம்படுத்தும்.
மேலும், ரேடியோ மிர்ச்சி 98.3 எஃப்.எம்-இன் பரவலான கவரேஜுடன், நாடு முழுவதிலும் உள்ள பந்தய ரசிகர்களுடன் எங்களால் இணைய முடியும்" என்றார். ரேடியோ மிர்ச்சி 98.3 எஃப்.எம் பாரத் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியின் முதன்மையான எஃப்.எஃப் பாட்னராக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. ரேடியோ மிர்ச்சிக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகளை இணைந்து நடத்திய அனுபவம் உள்ளது.

முதன்மையான பார்ட்னராக இணைந்துள்ளதால், ரேடியோ மிர்ச்சியின் ஆர்.ஜே-கள் பாரத் மோட்டோஜிபி-ஐ நேரில் பார்வையிட்டு, அதுகுறித்த விபரங்களை ரேடியோ வாயிலாக வழங்குவர். இதுகுறித்து ரேடியோ மிர்ச்சி 98.3 எஃப்.எம்-இன் வணிக இயக்குனரும், முதன்மை துணை தலைவருமான கமல் ஜெத்வா கூறுகையில், "இந்த கூட்டணியின் மூலம், எங்கள் ஆடியன்ஸுக்கு மோட்டார் ஸ்போர்ட் அனுபவத்தை வழங்குவதற்கும், நாட்டின் பிரீமியர் பந்தய நிகழ்வை ஊக்குவிப்பதையும் நாங்கள் எதிர்நோக்குகிறோம்.
இந்த அதிவேக பந்தய பயணத்திற்கு எங்களது ஆடியன்ஸை அழைத்து செல்ல (ரேடியோ வாயிலாக) நாங்கள் ஆவலாக உள்ளோம்" என்றார். பாரத் கிராண்ட் பிரிக்ஸில் மொத்தம் 41 ரேசிங் குழுக்கள் மற்றும் அவற்றின் 82 ரைடர்களும் கலந்துக் கொள்ள உள்ளனர். இந்த 82 ரைடர்களில் பிரான்செஸ்கோ பகானையா, மார்க் மார்க்கஸ், மார்கோ பெசாச்சி, பிராட் பைண்டர், ஜாக் மில்லர் மற்றும் ஜோர்ஜ் மார்டீன் போன்ற தற்கால உலகின் சிறந்த ரைடர்களூம் அடங்குகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் நடைபெறும் இந்தியன் ஆயில் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியை சுமார் 195 நாடுகளில் 450 மில்லியனுக்கும் அதிகமானோர் உலகம் முழுவதும் பார்வையிடுவார்கள் என கணிக்கப்பட்டு உள்ளது. இதற்காக 90 நெட்வோர்க்குகள் ஒளி/ ஒலிப்பரப்பும் உரிமையை பெற்றுள்ளன. இந்த வரிசையில், நமது சென்னையை சேர்ந்த ஓர் ரேடியோ நிலையமும் இணையவுள்ளது சந்தோஷமான விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications









