பைக் ரேஸை நேரில் பாக்கனுமா? டிக்கெட் விற்பனை ஸ்டார்ட் ஆகிடுச்சு, விலையும் கம்மி தான்!
இந்தியாவில் முதல்முறையாக நடைபெறும் மோட்டோ ஜிபி பாரத் போட்டிக்கான முதல் டிக்கெட் உ.பி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்க்கு வழங்கப்பட்டது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனையும் தற்போது துவங்கியுள்ளது. இதுகுறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
உலக அளவில் பிரபலமான பைக் ரேஸ் பந்தயம் மோட்டோ ஜி பி. இந்தப் பந்தயம் சமீப காலத்தில் இந்தியாவில் நடந்ததில்லை. இந்நிலையில் இந்த போட்டி வரும் செப்டம்பர் மாதம் 22 முதல் 24ம் தேதி வரை நொய்டா பெருநகர பகுதியில் உள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் என்ற இடத்தில் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இந்த போட்டியில் பெரும்பாலான டூவீலர் தயாரிப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த போட்டி இந்தியாவில் நடப்பது ரசிகர்களுக்கு மட்டுமல்ல இந்தியாவின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறைக்கு மிக முக்கியமான மைல் கல்லாக இருக்கிறது. இதனால் இந்த போட்டிக்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தப் போட்டியில் ஹோண்டா, அப்ரில்லா, கேடிஎம், யமஹா மற்றும் டுகாட்டி ஆகிய நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இந்த பாரத் ஜிபி போட்டியில் மோட்டோ இ ரேஸ், மோட்டோ ஜி பி, மோட்டோ 2, மோட்டோ 3 ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த ஃபார்மெட்டில் போட்டிகள் ஐரோப்பாவில் இல்லாமல் வெளிநாடுகளில் நடப்பது இதுதான் முதல் முறை.

இந்தியாவில் இந்த போட்டியை ஃபேர் ஸ்ட்ரீட் ஸ்போர்ட்ஸ் என்ற அமைப்பு எடுத்து நடத்துகிறது. இந்தப் போட்டிக்கான டிக்கெட்டை ஆன்லைன் விற்பனை துவங்கும் முன்பே முன்பதிவைத் துவங்கியது. முன்பதிவு செய்பவருக்கு ஆன்லைன் பதிவு துவங்கும் போது டிக்கெட் விற்பனையில் முன்னுரிமையில் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ஏராளமான மக்கள் இந்த டிக்கெட்டுக்காக முன்பதிவு செய்தனர்.
இந்நிலையில் தற்போது முன்பதிவு செய்தவர்களுக்கான டிக்கெட் விற்பனை இன்று 23ஆம் தேதி துவங்கியுள்ளது. மற்றவர்களுக்கான பொது டிக்கெட் விற்பனை நாளை 24ஆம் தேதி துவங்குகிறது. டிக்கெட் விலை ரூ. 800 முதல் விற்பனையாகிறது. டிராக்கில் எந்த பகுதியில் டிக்கெட் வேண்டும் என்பதைப் பொறுத்து டிக்கெட் விலை மாறுபடும். அதிகபட்சமாக ஒரு டிக்கெட் ரூ1.5 லட்சம் வரை விற்பனையாகிறது.

டிக்கெட் விற்பனை துவங்கப்பட்ட நிலையில் இந்த மோட்டோ ஜிபி பாரத் பந்தயத்திற்கான முதல் டிக்கெட்டை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு ஃபேர் ஸ்டிரீட் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வழங்கியது. இதை அந்நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கங்களிலும் வெளியிட்டுள்ளது.
இந்த போட்டிக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்யாதவர்கள் நாளை 24-ம் தேதி முதல் புக்மைஷோ தளத்தில் தங்களது டிக்கெட்டை புக்கிங் செய்து கொள்ளலாம். போட்டி செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த மூன்று நாட்கள் சேர்த்து ஒரே டிக்கெட்டை வாங்கினால் போதுமானது. புக் செய்தவர்கள் இன்றே டிக்கெட்களை வாங்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய பைக் ரேஸ் ரசிகர்களுக்கு நீண்ட ஆண்டுகளாக மோட்டோ ஜிபி பந்தயத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. இதனால் வெளி நாட்டிற்குத் தான் பயணிக்க வ வேண்டும் என்பதால் பலர் இதைப் பார்ப்பதைக் கனவாக வைத்திருந்தனர். தற்போது இது நினைவாகப்போகிறது. இந்தியாவிலேயே இந்த போட்டியைக் காண வாய்ப்பு கிடைத்துவிட்டது. இதனால் டிக்கெட் விற்பனை அமோகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









