மோட்டோ ஜிபி பாரத் பந்தயத்தை நேரில் பார்க்க வேண்டுமா? எப்படி டிக்கெட் புக் பண்ணணும் தெரியுமா?
இந்தியாவில் வரும் செப்டம்பர் மாதம் நடக்கவுள்ள மோட்டோ ஜிபி பாரத் ரேஸ் போட்டிக்கான அதிகாரப்பூர்வ டிக்கெட்டிங் பார்ட்னராக புக் மை ஷோ நிறுவனம் இணைந்துள்ளது. டிக்கெட்டிற்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது. வரும் செப்டம்பர் மாதம் நடக்கவுள்ள போட்டிகாக மக்கள் டிக்கெட்களை புக் செய்யக் காத்திருந்த நிலையில் அதற்கான தருணம் தற்போது வந்துவிட்டது. இது குறித் விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
மோட்டோ ஜிபி என்பது உலகின் பிரபலமான பிரிமியர் கிளாஸ் பைக் ரேஸாகும். இதை வரும் செப்டம்பர் மாதம் 22-24ம் தேதிகளில் இந்தியாவில் மோட்டோ ஜிபி பாரத் என்ற பெயரில் நடந்த திட்டமிடப்பட்டுள்ளது. ஃபேர் ஸ்டிரீட் ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. டில்லியை அடுத்த நொய்டாவில் உள்ள புத் இண்டர்நேசனல் சர்க்யூட் என்ற இடத்தில் இந்த போட்டிகள் நடக்கவுள்ளன.

இது உலக அளவில் தற்போது நடந்து வரும் 2023ம் ஆண்டிற்கான சீசனில் 13வது போட்டியாக இந்தியாவில் நடக்கவுள்ளது. இந்தியாவில் நடக்கும் முதல் மோட்டோ ஜிபி போட்டி இது. இந்திய மோட்டார் சைக்கிள் ரேஸ் ரசிகர்களுக்கு இந்த போட்டி இந்த போட்டி வாழ்நாளில் ஒரு முறை கிடைக்கும் வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது. இதனால் இந்த போட்டியைக் காண ஏகப்பட்ட மக்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இப்படியாக மோட்டோ ஜிபி பாரத் போட்டியைக் காணக் காத்துக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்து வந்துள்ளது. இந்த நிகழ்ச்சியைக் காண்பதற்கான டிக்கெட்களை விற்பனை செய்யும் பார்ட்னராக பிரபலமான புக் மை ஷோ நிறுவனம் கை கோர்த்துள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட்களை புக் மை ஷோவில் புக்கிங் செய்து கொள்ளலாம்.

தற்போது இந்த டிக்கெட்டிற்கான முன்பதிவு நடக்கிறது. டிக்கெட் புக்கிங் இன்னும் துவங்கப்படவில்லை. ஆனால் தற்போது புக்கிங்கிற்கு முன்பதிவு செய்பவர்களுக்கு டிக்கெட் விற்பனை துவங்கும் போது முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ரசிகர்கள் தற்போதே டிக்கெட்களை பெற முன் பதிவு செய்து கொள்ளுங்கள். டிக்கெட் விற்பனை துவங்கும் போது உங்களுக்கு முன்னுரிமையில் டிக்கெட்கள் கிடைக்கும்.
புக் மை ஷோ மட்டுமல்ல இந்த மோட்டோ ஜிபி பாரத் ரேஸிற்காக ஃபேர் ஸ்டிரீட் நிறுவனம் மேலும் சில நிறுவனங்களுடன் பார்ட்னர்ஷிப்பிற்கான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் மேலும் சிறு நிறுவனங்கள் இந்த மோட்டோ ஜிபி போட்டிக்காக பார்ட்டனர்களாக இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து ஃபேர் ஸ்டிரீட் ஸ்போர்ட் நிறுவனத்தின் சிஓஓ குறிப்பிடும் போது : "நாங்கள் புக் மை ஷோ உடன் பார்ட்னர்ஷிப் வைத்தில் பெருமிதம் கொள்கிறோம். இது இந்திய ரசிகர்களுக்கு ஒரு ஈடு இணையற்ற வாய்ப்பை பெற்றுத் தரும். புக் மை ஷோ மூலம் 360 டிகிரி அனுபவத்தைப் பெற முடியும். ரசிகர்களுக்கு இந்த போட்டி ஒரு மறக்க முடியாத அனுபவமாக நிச்சயம் இருக்கும். " எனக் கூறினார்.
இது குறித்து புக் மை ஷோ சிஓஓ அணில் மக்ஹிஜா கூறும் போது : "மோட்டோ ஜிபி பாரத் உடன் இணைந்து பயணிப்பதில் மகிழ்ச்சியாக உணர்கிறோம். புக் மை ஷோ பிரத்தியேக பார்ட்னராக இணைந்துள்ளோம். மோட்டோ ஜிபி ரசிகர்களுக்கு எங்களிடம் டிக்கெட் புக் பண்ணுவதிலிருந்து தான் அவர்களது மோட்டோ ஜிபி பாரத் பயணம் துவங்குகிறது. இதில் எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது" எனக் கூறினார்.
இது குறித்து ஃபெடரேஷன் ஆஃப் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்ஸ் தலைவர் அக்பர் இப்ராஹிம் கூறும் போது : "ஃபேர் ஸ்டிரீட் நிறுவனமும், உலகளவிலான மோட்டோ ஜிபி காப்புரிமையாளரான டோர்னாவும் இந்த போட்டிக்காக ஒப்பந்தம் செய்துள்ளனர். அதன்படி வரும் செப் மாதம் இந்த போட்டி நடக்கிறது. இந்த தருணத்தில் ஃபெடரேஷன் ஆஃப் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சார்பில் எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்." என கூறினார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மோட்டோ ஜிபி பாரத் போட்டிக்காக இந்திய ரசிகர்கள் வெகு நாட்களாக காத்திருக்கின்றனர். இந்த டிக்கெட் புக்கிங் குறித்த செய்திக்காகப் பலர் காத்திருக்கின்றனர். தற்போது புக்கிங்கிற்கான பதிவு வந்துள்ளது ரசிகர்களைக் குஷியில் ஆழ்த்தியுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் இந்த போட்டியில் பெரும் ரசிகர் பட்டாளத்தையே எதிர்பார்க்கலாம்!


Click it and Unblock the Notifications









