பெண்கள் ஸ்கூட்டர் மட்டுமில்ல, இந்த பைக்குகளையும் ஓட்டலாம்!! குறைவான எடை & உயரம் - விலையை பார்த்து வாங்குங்க!
பெண்களுக்கு ஸ்கூட்டர் தான் சரியாக இருக்கும் என்ற காலம் போய், தற்போது பெண்கள் பலர் மோட்டார்சைக்கிள்களை ஓட்ட ஆரம்பித்து விட்டனர். இருப்பினும், பெண்களால் சில எடைமிக்க பைக்குகளை இயக்க முடிவதில்லை. எடை குறைவான மற்றும் தங்களது சவுகரியத்திற்கு ஏற்ப பாடி ஸ்டைலை கொண்ட பைக்குகளையே பெண்கள் அதிகம் விரும்புகின்றனர். அத்தகைய மோட்டார்சைக்கிள்களுள் இந்திய சந்தையில் உள்ள சிலவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஜாவா பெராக்: ஒற்றை இருக்கை உடன் கிடைக்கும் இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.2.13 லட்சமாக உள்ளது. தரையில் இருந்து 750மிமீ உயரத்தில் ரைடர் இருக்கையை கொண்ட இந்த ஜாவா பைக்கின் எடை 185 கிலோ. பெராக் பைக்கில் 334சிசி சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு, 4-ஸ்ட்ரோக் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 30.2 எச்பி மற்றும் 32.74 என்எம் டார்க் திறன் வரையில் இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

பஜாஜ் அவெஞ்சர்: பஜாஜ் ஆட்டோவின் க்ரூஸர் மோட்டார்சைக்கிள். அவெஞ்சரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.1.16 லட்சத்தில் இருந்து துவங்குகிறது 160 ஸ்ட்ரீட், 220 ஸ்ட்ரீட் மற்றும் 220 க்ரூஸ் என 160சிசி வெர்சன் மற்றும் 220சிசி வெர்சனில் அவெஞ்சர் பைக்கை பெறலாம். இதில் அவெஞ்சர் 160 பைக்கின் எடை வெறும் 156 கிலோ மற்றும் அவெஞ்சர் 220 பைக்குகளின் எடை 163 கிலோ ஆகும்.

கேடிஎம் 200 ட்யூக்: கேடிஎம் பைக்குகள் பொதுவாக அளவில்-பெரியதாக, பிரம்மாண்டமாக காட்சித் தருபவை. ஆனால் கேடிஎம் பைக்குகள் எடை குறைந்தவையே. குறிப்பாக, 200 ட்யூக்கின் எடை 159 கிலோ மட்டுமே. ஆனால் கேடிஎம் பைக்குகள் சற்று விலை அதிகமானவை. 200 ட்யூக்கின் விலை கூட ரூ.2 லட்சம் என்ற அளவில் உள்ளது. 200 ட்யூக்கில் 199.5சிசி சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு, DOHC, ஃப்யுல்-இன்ஜெக்டட் என்ஜின் பொருத்தப்படுகிறது.

ஹஸ்க்வர்னா ஸ்வார்ட்பிளேன் 250 & விட்பிளேன் 250: கேடிஎம் பிராண்டை போன்று பஜாஜ் உடன் கூட்டணியில் மற்றொரு ஐரோப்பிய பைக் பிராண்ட் ஹஸ்க்வர்னா ஆகும். இந்த பிராண்டில் தற்போதைக்கு 2 பைக்குகள் மட்டுமே விற்கப்படுகின்றன. ஸ்வார்ட்பிளேன் 250 மற்றும் விட்பிளேன் 250 என்ற அவை இரண்டும் நாக்டு பைக்குகளாக இருப்பதால் எடை குறைவானவை. இவற்றின் எடை முறையே 153 கிலோ மற்றும் 152 கிலோ என உள்ளன.

டிவிஎஸ் ரோனின்: டிவிஎஸ் மோட்டாரின் சமீபத்திய புத்தம் புதிய மோட்டார்சைக்கிள்கள் ரோனின் ஆகும். ரூ.1.49 லட்சத்தில் இருந்து ரூ.1.69 லட்சம் வரையில் விலை கொண்ட இந்த பைக்கின் எடை ஆனது 160 கிலோ ஆகும். அதேபோல், தரையில் இருந்து ஓட்டுனர் இருக்கையின் உயரமும் தாழ்வாக வழங்கப்படுகிறது. ரோனின் பைக்கில் 225.9சிசி ஆயில்-கூல்டு என்ஜினை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் பொருத்துகிறது.

ஹோண்டா ஹைனெஸ் சிபி350: அப்டேட் செய்யப்பட்ட சிபி350 பைக் சமீபத்தில்தான் இந்தியாவில் ரூ.2.10 லட்சம் என்கிற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. டி.எல்.எக்ஸ் மற்றும் டி.எல்.எக்ஸ் புரோ என்கிற 2 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகின்ற இந்த ஹோண்டா பைக்கின் எடை சற்று அதிகம் 181 கிலோ ஆகும். இந்த பைக்கில் 349சிசி ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது.

ராயல் என்பீல்டு ஹண்டர் 350: இருப்பதிலேயே எடை & விலை குறைவான ராயல் என்பீல்டு பைக்காக விற்பனையில் ஜொலித்துவரும் பைக். இதன் ரெட்ரோ வேரியண்ட்டின் எடை 178 கிலோ மற்றும் மெட்ரோ வேரியண்ட்டின் எடை 181 கிலோ ஆகும். இந்த இரு வேரியண்ட்களிலும் ஒரே மாதிரியான 349சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. ஹண்டர் 350 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.50 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: மேலே பார்த்த பைக்குகளில் ஹைனெஸ் சிபி350க்கு விற்பனையில் போட்டியாக விளங்கும் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350-ஐ கூட இந்த லிஸ்ட்டில் சேர்க்கலாம். ஆனால் மீட்டியோர் 350-இன் எடை 191 கிலோவாக உள்ளது. பெண்களுக்கு க்ரூஸர் ரக பைக்குகளே ஏற்றவை. ஏனெனில், க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள்கள் பொதுவாகவே உயரம் குறைந்தவையாக இருக்கும். அவற்றை எளிமையாக ஹேண்ட்லிங் செய்யலாம்.


Click it and Unblock the Notifications









