விலை இவ்ளோதானா! டோனி வாங்கிய பைக்கை வாங்க டிவிஎஸ் ஷோரூம்களுக்கு படையெடுக்கும் ரசிகர்கள்! வண்டி செமயா இருக்கே!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் டோனி (MS Dhoni), கிரிக்கெட்டை போலவே, வாகனங்களையும் உயிருக்கு உயிராக நேசிக்க கூடியவர். அவரிடம் மிகவும் விலை உயர்ந்த மற்றும் அரிதான வாகனங்கள் ஏராளமாக இருக்கின்றன. இந்த சூழலில் புதிய பைக் ஒன்றை டோனி தற்போது டெலிவரி எடுத்துள்ளார்.

டோனி புதிதாக டெலிவரி எடுத்திருப்பது டிவிஎஸ் ரோனின் (TVS Ronin) பைக் ஆகும். இது இந்திய சந்தைக்கு புதுவரவு. டிவிஎஸ் ரோனின் பைக் மொத்தம் 6 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும். அவை லைட்னிங் பிளாக், ஸ்டார்கேஸ் ப்ளாக், டெல்டா ப்ளூ, மேக்மா ரெட், கேலட்டிக் க்ரே மற்றும் டான் ஆரஞ்ச் ஆகியவை ஆகும். இதில் கேலட்டிக் க்ரே கலர் ஆப்ஷனை டோனி தேர்வு செய்துள்ளார்.

விலை இவ்ளோதானா! டோனி வாங்கிய பைக்கை வாங்க டிவிஎஸ் ஷோரூம்களுக்கு படையெடுக்கும் ரசிகர்கள்! வண்டி செமயா இருக்கே!

இவ்ளோ கம்மியான ரேட் பைக்கா இது!

டிவிஎஸ் ரோனின் பைக்கின் ஆரம்ப விலை (Price) 1.49 லட்ச ரூபாய் ஆகும். அதே நேரத்தில் இந்த பைக்கின் டாப் வேரியண்ட்டின் விலை 1.71 லட்ச ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டிருப்பதாலும், சக்தி வாய்ந்த இன்ஜின் இடம்பெற்றிருப்பதாலும், டிவிஎஸ் ரோனின் பைக் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுகிறது.

இந்த பைக்குகளுக்கு எல்லாம் செம போட்டி!

ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350), ஹோண்டா சிபி350 ஆர்எஸ் (Honda CB350 RS) மற்றும் யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர் (Yezdi Scrambler) ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக டிவிஎஸ் ரோனின் பைக் விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது. ஸ்க்ராம்ப்ளர் மற்றும் க்ரூஸர் ரக பைக்குகளின் கலவையாக புத்தம் புதிய ரோனின் பைக்கை டிவிஎஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

விலை இவ்ளோதானா! டோனி வாங்கிய பைக்கை வாங்க டிவிஎஸ் ஷோரூம்களுக்கு படையெடுக்கும் ரசிகர்கள்! வண்டி செமயா இருக்கே!

இன்ஜின், கியர் பாக்ஸை பத்தி கொஞ்சம் சொல்லுங்க!

டிவிஎஸ் ரோனின் பைக்கில் 225.9 சிசி சிங்கிள் சிலிண்டர் ஆயில் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 7,750 ஆர்பிஎம்மில் 20.4 பிஹெச்பி பவரையும், 3,750 ஆர்பிஎம்மில் 19.93 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

என்னங்க இவ்ளோ வசதிகள் குடுத்திருக்காங்க!

ஓரளவிற்கு விலை குறைவானதாக இருந்தாலும் கூட, ப்ளூடூத் கனெக்டிவிட்டி வசதியுடன் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், டர்ன் பை டர்ன் நேவிகேஷன், வாய்ஸ் அஸிஸ்டன்ஸ், அர்பன் மற்றும் ரெயின் ரைடு மோடுகள், மெசேஜ் மற்றுல் கால் அலர்ட் என டிவிஎஸ் ரோனின் பைக்கில் ஏராளமான வசதிகள் வாரி வழங்கப்பட்டுள்ளன. எனவேதான் இது கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுகிறது.

டோனியின் பைக் கலெக்ஸனில் இணைந்தது!

டோனியிடம் கான்ஃபெடரேட் ஹெல்கேட் எக்ஸ்132 (Confederate Hellcat X132), டுகாட்டி 1098 (Ducati 1098), கவாஸாகி நின்ஜா இஸட்எக்ஸ்14ஆர் (Kawasaki Ninja ZX14R) மற்றும் ஹார்லி டேவிட்சன் ஃபேட்பாய் (Harley Davidson Fatboy) என ஏராளமான பைக்குகள் இருக்கின்றன. இந்த வரிசையில் தற்போது ஓரளவிற்கு விலை குறைந்த டிவிஎஸ் ரோனின் பைக்கும் டோனியின் பைக் கலெக்ஸனில் இணைந்துள்ளது.

இன்னொரு பைக் வருது!

இதற்கிடையே டிவிஎஸ் நிறுவனம் புதிய 310 சிசி பைக் ஒன்றை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய பைக் வரும் வாரங்களில் விற்பனைக்கு களமிறக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய பைக்கும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் டிவிஎஸ் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.

More from DriveSpark

Article Published On: Saturday, February 18, 2023, 22:55 [IST]
English summary
Ms dhoni takes delivery of tvs ronin all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+