பல்சர் பைக்கை தலைக்கீழ மட்டும்தான் ஓட்டல!! பஜாஜ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கட்டுக்கடங்காத கூட்டம்!
பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனம் பல்சர் மேனியா (Pulsar Mania) என்கிற பெயரில் பல்சர் பைக்குகளை மட்டும் ஹைலைட்டாக காட்சிப்படுத்தி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. 2013ஆம் ஆண்டில் இருந்து பஜாஜ் நிறுவனத்தால் நடத்தப்பட்டுவரும் இந்த நிகழ்ச்சியின் 2.0 வெர்சன் இந்த 2023ஆம் வருடத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்துள்ளது.
கடந்த ஜூலையில் கோயம்புத்தூரிலும், செப்டம்பரில் உத்தர பிரதேசம், வாரணாசியிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற்று இருந்த நிலையில், இந்த 2023 டிசம்பர் மாதத்தில், கடந்த வாரத்தில் மும்பையில் பஜாஜ் பல்சர் மேனியா 2.0 நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பஜாஜ் பல்சர் பைக் வாடிக்கையாளர்கள் கலந்துக் கொண்டனர். நமது டிரைவ்ஸ்பார்க் குழுவும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டது.
அப்போது நாங்கள் பார்த்த விஷயங்களை மேலே உள்ள வீடியோவில் எளிமையான தமிழில் விவரித்துள்ளோம். வழக்கம்போல், மும்பையில் நடைபெற்ற இந்த பஜாஜ் பல்சர் மேனியா 2.0-விலும் பல்சர் பைக்குகளை கொண்டு பல்வேறு ஸ்டண்ட்கள் செய்யப்பட்டன. ஆபத்தான பைக் ஸ்டண்ட்கள் நடத்தப்பட்டாலும், ஈடுப்பட்ட ரைடர்கள் அனைவருக்கும் அனைத்து கார்ட்களும் முறையாக வழங்கப்பட்டு இருந்தன.

2001 நவம்பர் மாதத்தில் முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்ட முதல் பல்சர் பைக்கில் இருந்து சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பல்சர் என்150 பைக் வரையில் இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்று இருந்தன. நிகழ்ச்சி அரங்கிற்குள் நுழைந்தவுடன் முதலாவதாக நம்மை வரவேற்கும் விதமாக, 2001இல் அறிமுகம் செய்யப்பட்ட முதல் பல்சர் பைக்கை நிறுத்தி வைத்து இருந்தனர். முதல் பல்சர் பைக்கில் ஜப்பான் நாட்டில் உருவாக்கப்பட்ட என்ஜின் பொருத்தப்பட்டது நினைவுக்கூரத்தக்கது.


Click it and Unblock the Notifications








