மங்காத்தாவில் அஜித்துக்கு டூப் போட்டவர் இவரா!! பஜாஜ் நடத்திய நிகழ்ச்சியில் நம்ம ஊர் ரேஸர்கள்!
பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனம் மும்பையில் பல்சர் மேனியா 2.0 (Pulsar Mania 2.0) நிகழ்ச்சியை நடத்தியது. கோயம்புத்தூர், வாரணாசியை தொடர்ந்து இந்த 2023 வருடம் முடிவதற்கு உள்ளாக மும்பையிலும் பல்சர் மேனியா 2.0 நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பஜாஜ் பல்சர் பைக்குகளின் சிறப்பம்சங்களை கூறும் விதமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
மும்பையில் நடந்த பல்சர் மேனியா 2.0-இல் தமிழகத்தை சேர்ந்த பைக் ஸ்டண்டர்கள் சரவணா, செந்தில் குமார் மற்றும் அபிஷேக் ஆகியோர் கலந்துக் கொண்டனர். அவர்களுடன் ஓர் சிறிய உரையாடலை நமது டிரைவ்ஸ்பார்க் குழு மேற்கொண்டது. அதன் முதல் பாதியை ஏற்கனவே நமது செய்தித்தளத்தில் பார்த்துவிட்ட நிலையில், 2ஆம் பாதியை கீழுள்ள வீடியோவில் காணலாம்.
இந்த பேட்டியை வழங்கியவர்களில் ஒருவர்தான் மங்காத்தா திரைப்படத்தில் ஒரு பைக் சேசிங் சீனில் அஜித்திற்கு டூப் போட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு அருமையாக பேசும் இவர்கள் பல்சர் மேனியா 2.0 நிகழ்ச்சியில் பல்வேறு விதமான ஸ்டண்ட்களை செய்து அனைவரையும் அசத்திவிட்டனர். நிகழ்ச்சியில், ஸ்டண்ட் செய்த போது ரைடர்களுக்கு பாதுகாப்புக்காக தேவையான கார்ட்கள் அனைத்தும் வழங்கப்பட்டு இருந்தன.

2013ஆம் ஆண்டில் இருந்து பல்சர் மேனியா 2.0 நிகழ்ச்சிகளை பஜாஜ் நிறுவனம் நடத்தி வருகிறது. ஏற்கனவே கூறியதுபோல், பல்சர் பைக்குகளின் சிறப்பம்சங்களை பார்வையாளர்களுக்கு தெரிவிக்கும் விதமாக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில், 2001ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் பல்சர் பைக்கில் இருந்து, மாடர்ன் பல்சர் பைக்குகள் வரையில் காட்சிக்கு நிறுத்தப்படுகின்றன.


Click it and Unblock the Notifications








