பள்ளி கூடத்துக்கு கூட்டி போனதுக்கு இப்படி ஒரு கேஸா! அந்தநபர் யாரு முகத்துல முழிச்சாரோ தெரில, வசமா சிக்கிட்டாரு

சிறுவர்களை அதிக எண்ணிக்கையில் இருசக்கர வாகனத்தில் ஏற்றி சென்ற ஓர் இளைஞர் மீது இதுவரை மேற்கொண்டிராத உச்சபட்ச நடவடிக்கையை காவல்துறை எடுத்து உள்ளது. அப்படி என்ன நடவடிக்கையை காவல்துறை எடுத்து உள்ளது என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இப்படி ஒரு நடவடிக்கை இதற்கு முன்னதாக ஓர் வாகன போக்குவரத்து விதிமீறலுக்கு காவல்துறை மேற்கொண்டிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கவே மாட்டீர்கள். அப்படியான ஓர் அதிரடி நடவடிக்கையையே மும்பை நகர காவல்துறை ஓர் இளைஞர் மீது எடுத்து இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

7 Kids on scooter

இளைஞர் ஒருவர் தலையில் ஹெல்மெட் அணியாமல் ஒரே நேரத்தில் ஏழு சிறுவர்களை ஏற்றிச் சென்றிருக்கின்றார். இந்த போக்குவரத்து விதிமீறலையே மும்பை நகர போக்குவரத்துக் காவல்துறை கொலைமுயற்சியாக தற்போது வழக்கைப் பதிவு செய்திருக்கின்றது. மேலும், இருசக்கர வாகனத்தை ரைடு செய்த நபரையும் கைது செய்திருக்கின்றது.

இந்தியாவில் இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டு இருக்கின்றது. அதுவும் இருவரும் தலையில் கவசம் அணிந்திருக்க வேண்டும். இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர், பின்னால் அமர்ந்து பயணிப்பவர் என இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும். இது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

Man arrested

இந்த மாதிரியான சூழலிலேயே மும்பையைச் சேர்ந்த இளைஞர் சிறுவர்களை வைத்து வாகன ஸ்டண்டில் ஈடுபட்டு இருக்கின்றார். ஆகையால், அவர் மீது மிகக் கடுமையான பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது. இதே மாதிரியான சாகசங்களை ராணுவ வீரர்கள் செய்ய நாம் பார்த்திருப்போம்.

இந்த செயல்கள் அனைத்தும் பலமுறை ஒத்திகை பார்த்த பின்னரே களத்தில் செய்யப்படும். மேலும், பொதுவெளியில் அல்லாமல், வாகன ஸ்டண்ட் என்றே உருவாக்கப்பட்ட களத்தில் மட்டுமே செய்யப்படும். ஆகையால், இந்த செயல் அங்கீகரிக்கப்பட்ட செயலாக கருதப்படுகின்றது. ஆனால், இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் சம்பவமோ பொது வெளியில் (பொது சாலையில்) செய்யப்பட்டு இருக்கின்றது.

பொது வெளியில் வாகன ஸ்டண்டில் ஈடுபடும்போது நமக்கு மட்டுமின்றி பிறருக்கும் ஆபத்து ஏற்பட நேரிடலாம். எனவேதான் இந்த மாதிரியான செயல்கள் மீது சற்று கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. ஆனால், இப்போது மேற்கொள்ளப்பட்டு இருக்கும் நடவடிக்கையோ மிக மிக கடுமையான நடவடிக்கையாக உள்ளது.

மிகவும் அரிதாகவே இத்தகைய நடவடிக்கையை காவல்துறை மேற்கொள்கின்றனர். இந்த சம்பவத்தில் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ள முக்கிய காரணமாக இருப்பது சிறுவர்கள் ஸ்டண்டில் ஈடுபடுத்தப்பட்டதே ஆகும். விளையாட்டாக செய்யபோய் தற்போது இளைஞர் மிகப் பெரிய சிக்கலில் சிக்கி இருக்கின்றார். இந்த அனைத்திற்கும் ஓர் வீடியோவே காரணமாக அமைந்திருக்கின்றது.

ஆமாங்க, இளைஞரின் இந்த சாகச செயல்குறித்த வீடியோ அதிக வேகமாக பகிரப்பட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே இளைஞரின் சாகசத்திற்கு எதிராக கண்டனங்களும் கிளம்ப தொடங்கின. பலர் சிறுவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இளைஞர் நடந்துக் கொண்டதாகக் கூறி அவர்மீது மிகக் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையிலேயே மும்பை நகர காவல்துறையினர் ஐபிசி பிரிவு 308-இன் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். ஒரு சிலர் உண்மையில் இளைஞர் சாகச செயலில் ஈடுபடவில்லை. அவர் சிறுவர்களை பள்ளிக்கூடம் அழைத்து செல்லவே அவ்வாறு அழைத்துச் சென்றார் என கூறுகின்றனர். இதை உறுதிப்படுத்தும் விதமாக சிறுவர்கள் பள்ளிக்கூட பேக்கை வைத்திருப்பதையும் நம்மால் பார்க்க முடிகின்றது.

பொது போக்குவரத்து போதுமான அளவு இல்லாததாலும், அதேவேளையில், அதிக கூட்டங்களுடனும் அவைக் காணப்படுவதால் ஒரு சிலர் தங்களுடைய பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு தனியார் ஆட்டோ, கார் அல்லது பள்ளிக் கூட பேருந்துகளில் அனுப்பி வைத்து வருகின்றனர். இதற்கு வழி இல்லாதவர்கள் தாங்களாகவே தங்களது பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்கு அழைத்து சென்றுக் கொண்டிருக்கின்றனர்.

இதை செய்யபோயே இளைஞர் தற்போது சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிட்டிருக்கின்றது. அவர் சிறுவர்களுக்கு உதவி செய்யவே இதை செய்திருந்தாலும், அது ஓர் பாதுகாப்பற்ற செயல் ஆகும். இதன் அடிப்படையிலேயே காவல்துறை அவரை சிறைப் பிடித்திருக்கின்றது. மேலும், அவரது ஸ்கூட்டரையும் தற்போது பறிமுதல் செய்திருக்கின்றது. அவர் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரையே பயன்படுத்தி வந்திருக்கின்றார். இதையே தற்போது இளைஞர் இழந்திருக்கின்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: முக்கிய நகரங்கள் தொடங்கி சிறிய கிராமம் வரை என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பொது போக்குவரத்தில் சிக்கல் நிலவுகின்றது. இந்த மாதிரியான சூழலைக் கையாள ஒரு சிலர் ஒரே ஆட்டோவில் பத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களை அழைத்துச் செல்வது போன்ற சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

இதன் விளைவாக விபத்துகளும் அதிகளவில் அரங்கேறிக் கொண்டு இருக்கின்றன. அரசின் மெத்தன போக்கும் இதற்கு ஓர் காரணமாக இருக்கின்றது. போதுமான அளவு பள்ளி மாணவர்களுக்கான போக்குவரத்திற்கு வழி வகை செய்தால் இதுமாதிரியான சம்பவங்களும் குறையும், சிக்கலும் குறையும். மேலும், தேவையில்லாமல் அப்பாவிகள் பாதிக்கப்படுவதும் குறையும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 27, 2023, 9:48 [IST]
English summary
Mumbai police registered culpable homicide case a man who carried children on a scooter
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+