இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதற்கு கூட்டம் குவிய போகுது!! இப்படி ஒன்றை தான் எதிர்பார்த்தோம் - ஸ்டைல் செம்ம
எம்.எக்ஸ் மோட்டோ (mXmoto) என்ற இவி ஸ்டார்ட்-அப் நிறுவனம் அதன் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை 'எம்.எக்ஸ்.வி ஈகோ' (mXv ECO) என்ற பெயரில் சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த வகையில் மார்க்கெட்டுக்கு வரும் இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
எலக்ட்ரிக் வாகனங்களின் வளர்ச்சியும், தேவையும் அதிகரித்து வருவதன் காரணமாக, இந்தியாவில் பல்வேறு இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் புதியதாக களமிறங்கி உள்ளன. இந்த வகையில், ஆட்டோமொபைல் சந்தைக்குள் களம்புகுந்து இருக்கும் இவி ஸ்டார்ட்-அப் நிறுவனம் எம்.எக்ஸ் மோட்டோ ஆகும். இந்த நிறுவனத்தில் இருந்து சமீபத்தில்தான் எம்.எக்ஸ்9 என்ற எலக்ட்ரிக் பைக் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், எம்.எக்ஸ்9 எலக்ட்ரிக் பைக்கை தொடர்ந்து, தற்போது எம்.எக்ஸ்.வி ஈகோ என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எம்.எக்ஸ் மோட்டோ நிறுவனத்தில் இருந்து அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய எம்.எக்ஸ்.வி ஈகோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.84,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ள 3.2 kWh லைஃப் பிஒ4 பேட்டரிகளை தனியாக வெளியே எடுக்க முடியும்.
பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்வதன் மூலம் அதிகப்பட்சமாக 80-இல் இருந்து 100கிமீ தொலைவிற்கு ஸ்கூட்டரை இயக்கி செல்லலாம். அதேநேரம், இதே எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 105- 120கிமீ ரேஞ்சிலும் கிடைக்கிறது. அதன் எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.94,999 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 80-100கிமீ ரேஞ்சை கொண்ட வெர்சனில் அதிகப்பட்சமாக மணிக்கு 70kmph வேகத்தில் இயங்கலாமாம்.

அதுவே, 105 -120கிமீ ரேஞ்சை கொண்ட வெர்சனின் டாப்-ஸ்பீடு 100kmph என எம்.எக்ஸ் மோட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த பேட்டரி தொகுப்பு 3000-வாட் BLDC எலக்ட்ரிக் மோட்டாரில் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த எலக்ட்ரிக் மோட்டார் அதிகப்பட்சமாக 140 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
இவற்றுடன், 38 ஆம்பியர் கண்ட்ரோலர் மற்றும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் உள்ளிட்ட அம்சங்களும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் உள்ளன. ஸ்கூட்டரில் முன் சக்கரத்தில் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் பின் சக்கரத்தில் டிரம் பிரேக் தான் கிடைக்கும். டர்ன் இண்டிகேட்டர்கள் எல்இடி-இல் வழங்கப்படுகின்றன.

ஹேண்டில் பாருக்கு மத்தியில் 6 இன்ச்சில் அட்வான்ஸான டிஎஃப்டி ஸ்க்ரீன் ஆன்போர்டு நாவிகேஷனுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இவை மட்டுமின்றி, ப்ளூடூத் சவுண்ட் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல், ரிவர்ஸில் செல்வதற்கான உதவி & பார்க்கிங் அசிஸ்ட், சுயமாக வாகனத்தின் பழுதுகளை கண்டறியும் நுட்பம் போன்றவையும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ளன. ஈகோ, கம்ஃபர்ட் மற்றும் ஸ்போர்ட் என்ற 3 விதமான ரைடிங் மோட்கள் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் கிடைக்கும்.
ஜெட் பிளாக், ராயல் நீலம், கார்னெட் சிவப்பு மற்றும் சாக்ராமெண்டோ பச்சை என்கிற 4 விதமான பெயிண்ட் தேர்வுகளில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பெறலாம். புதிய எம்.எக்ஸ்.வி ஈகோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் குறித்து எம்.எக்ஸ் மோட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜேந்திரா மல்கோத்ரா, "பட்ஜெட் விலையில் இருந்தாலும், எம்.எக்ஸ்.வி ஈகோ அனைத்து அதிநவீன வசதிகளையும் பெற்றுள்ளது" என தெரிவித்துள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சந்தையில் புது, புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்ட வண்ணம் உள்ளன. இந்த வரிசையில் தற்போது எலக்ட்ரிக் ஸ்கூட்டராக எம்.எக்ஸ்.வி ஈகோ விற்பனைக்கு வந்துள்ளது. ரூ.85,000 என்பது அனைவரும் ஏற்கக்கூடிய விலையாகவே கருதுகிறோம். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.


Click it and Unblock the Notifications









