யாராலயும் கண்டுபிடிக்க முடியல! இது என்ன வண்டின்னு உங்களுக்கு தெரியுதா? ஆனா சூப்பரா இருக்குது!
எந்த நிறுவனத்தின் ஸ்கூட்டர் என்றே தெரியாத மர்மமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று பெங்களூரு முழுவதும் முற்றிலும் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இது பெட்ரோல் ஸ்கூட்டரா அல்லது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா என்ற விபரம் கூட யாருக்கும் தெரியவில்லை. இந்த ஸ்கூட்டர் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அவ்வப்போது தங்கள் வாகனங்களை பொதுமக்கள் பயன்படுத்தும் சாலைகளில் சோதனை செய்வது வழக்கம். இப்படியாக முழுமையாக தகுதி பெற்ற வாகனங்கள் அரசு அனுமதி பெற்று இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அப்பொழுது இந்த ஸ்கூட்டர் குறித்த தகவல் கசிந்து விடக்கூடாது என்பதற்காக இந்த ஸ்கூட்டரை சுற்றி மறைவான ஸ்டிக்கர் ஒன்றை ஒட்டி சோதனை செய்வார்கள்.

இப்படியான வாகனங்கள் குறித்த அப்டேட்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகும் சாலையில் இப்படி முற்றிலும் மூடப்பட்ட வாகனங்களை நாம் பார்த்தால் அது நிச்சயம் சோதனை செய்யப்படும். வாகனம் என்று நாம் தெரிந்து கொள்ள முடியும். இப்படியாக சமீபத்தில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு மர்மமான ஸ்கூட்டர் வலம் வந்துள்ளது. இதன் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
பொதுவாக இப்படியாக ஒரு வாகனம் சாலையில் மறைக்கப்பட்டு டெஸ்ட் செய்யப்பட்டாலும் அது என்ன வாகனம் என்பது தெளிவாக தெரியும். அதில் உள்ள அம்சங்களை நாம் இந்த புகைப்படத்தின் மூலமே தெரிந்து கொள்ள முடியும். ஆனால் குறிப்பிட்ட இந்த வாகனம் எந்த நிறுவனத்தின் வாகனம் என்று யாராலும் கண்டுபிடிக்கவில்லை. முற்றிலுமாக புதுமையான வடிவமைப்பில் இதுவரை வேறு எந்த நிறுவனம் வெளியிடும் வாகனங்களின் வடிவமைப்பிலும் இல்லாமல் இந்த ஸ்கூட்டர் இருக்கிறது.
இதை பார்க்கும் போது சிலர் டிவிஎஸ் ஐ-கியூப் ஸ்கூட்டர் போல இருக்கிறது என கூறுகிறார்கள். ஆனால் இந்த ஐ-கியூப் ஸ்கூட்டர் டிவிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் தமிழகத்தில் உள்ள ஓசூர் ஆலையில் தான் இந்த ஸ்கூட்டரை தயாரிக்கிறது. ஓசூரில் தயாரிக்கப்படும் ஸ்கூட்டர் பெங்களூர் சிட்டிக்குள் வருவதற்கு அனுமதி பெற முடியாது. குறிப்பிட்ட இந்த ஸ்கூட்டர் கர்நாடக மாநில அனுமதி பெற்று சோதனை செய்யப்படும் ஸ்கூட்டராக இருக்கிறது.
டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் பெரும்பாலும் அந்நிறுவனத்தின் ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் தான் அதிகம் காண முடியும். ஆனால் குறிப்பிட்ட இந்த மர்மமான ஸ்கூட்டர் பெங்களூர் பன்னார்காட்டா ரோட்டில் காணப்பட்டது. பெங்களூருவில் ஏகப்பட்ட எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இருக்கிறது. குறிப்பாக ரிவர்,அல்ட்ராவைலட், ஏத்தர் போன்ற நிறுவனங்கள் இங்குதான் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்களில் ஏதாவது ஒரு நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இது இருக்கும் என கூறப்படுகிறது.
இது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இல்ல பெட்ரோல் ஸ்கூட்டரா என்பது கூட இந்த புகைப்படத்தின் மூலம் உறுதியாக நமக்கு தெரியவில்லை. பெங்களூரில் சோதனை செய்யப்படுவதால் பெரும்பாலும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று பலர் கருதுகின்றனர். இந்த ஸ்கூட்டரை பார்க்கும்போது நமக்கு பல்வேறு விஷயங்கள் தெளிவாகத் தெரிகிறது. அதைப் பற்றி சற்று விரிவாக காணலாம்.
குறிப்பிட்ட இந்த ஸ்கூட்டரில் ஹேண்டில் பார் சற்று உயரமான இடத்தில் பொசிஷன் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ஸ்கூட்டரில் உயரமாக இருக்கும் வாகன ஓட்டிகள் பயணிக்கும் போது அவர்களுக்கு ஹேண்டில் பாரில் கால் மூட்டி தட்டாமல் இருக்கும் முக்கியமாக யூ-டர்ன் எடுக்கும் போது சிரமம் இல்லாமல் இருக்கும் சீட்டிங் பொசிஷன் சொகுசாகவும் ரிலாக்ஸ் ஆகவும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்கூட்டரின் முன் பக்கம் டெலஸ்கோபிக் போர்க் பொருத்தப்பட்டுள்ளது. பிரேக்கை பொருத்தவரை முன்பக்கம் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளன. இதுபோக முன் பக்கம் எல்இடி ஹெட்லைட்டும் வழங்கப்பட்டுள்ளது நமக்கு தெரிகிறது. இதைப் பார்க்கும்போதுதான் பலர் இது ஐக்கிய எலெக்ட்ரிக் ஸ்கூடராக இருக்கும் என சந்தேகித்தனர். ஆனால் நன்றாக உத்துப் பார்க்கும்போது இந்த இரண்டுக்கும் வித்தியாசங்கள் இருப்பது நமக்கு தெரிகிறது.
எது எப்படியோ இது வெற்றிகரமாக சோதனை முடிந்தவுடன் விரைவில் எந்த ஸ்கூட்டரை தயாரித்த நிறுவனம் இதுகுறித்து அறிவிப்பை வெளியிடும் அப்பொழுது நமக்கு இந்த ஸ்கூட்டர் குறித்த விவரம் மற்றும் இதை தயாரித்த கம்பெனி குறித்த விபரங்கள் எல்லாம் நமக்கு தெளிவாக தெரியும். அதுவரை நாம் எதிர்பார்ப்புடன் பொறுமையாக காத்திருப்போம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது இந்திய மார்க்கெட்டில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மிகப்பெரிய அளவில் மதிப்பு இருக்கிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க ஏகப்பட்ட மக்கள் போட்டி போட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பார்க்க நல்ல லுக்கில் இருப்பதால் இது விற்பனைக்கு வந்தாலும் சிறப்பாக விற்பனையாகும் என எதிர்பார்க்கலாம்.
Image Courtesy: Auto car


Click it and Unblock the Notifications








