இதைவிட விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ பைக் இந்தியாவில் இல்லை... 2023 ஆர்18 டிரான்ஸ் காண்டினெண்டல் அறிமுகம்!!

இந்தியாவிலேயே விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ பைக்காக 2023 ஆர்18 டிரான்ஸ் காண்டினெண்டல் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரூ.31.50 லட்சம் என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய பிஎம்டபிள்யூ பைக்கை பற்றிய முழுமையான விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.

பிஎம்டபிள்யூ பைக்குகள் என்றாலே விலைமிக்கவை என்பது எல்லாருக்கும் தெரியும். இருப்பினும், இந்த நிறுவனம் இந்தியாவில் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப ஜி310ஆர், ஜி310 ஜிஎஸ் போன்ற சில விலை குறைவான மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்கிறது. அதேநேரம், மற்ற வெளிநாட்டு சந்தைகளில் பிரபலமான, விலை உயர்ந்த பைக்குகளையும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவருகிறது.

2023 பிஎம்டபிள்யூ ஆர்18 டிரான்ஸ் காண்டினெண்டல் அறிமுகம்!!

அந்த வகையில் தான் தற்போது புதிய ஆர்18 டிரான்ஸ் காண்டினெண்டல் (R18 Transcontinental) மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆர்18 மோட்டார்சைக்கிள் குறிப்பாக அமெரிக்க சந்தையில் பிரபலமானது. அதன் புதிய டிரான்ஸ்காண்டினெண்டல் வெர்சன் தான் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலையை ரூ.31.50 லட்சமாக நிர்ணயித்துள்ளனர்.

இந்தியாவில் பிஎம்டபிள்யூவின் லக்சரி க்ரூஸர் பைக்கான ஆர்18 இத்துடன் மொத்தம் 3 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. ஆர்18, ஆர்18 கிளாசிக் மற்றும் புதிய ஆர்18 டிரான்ஸ் காண்டினெண்டல் என்பவையே அந்த 3 மாடல்கள் ஆகும். மற்ற இரு வெர்சன்களை போலவே தற்போது புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வெர்சனும் சிபியூ முறையில், அதாவது முழுவதும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யப்பட உள்ளது.

2023 பிஎம்டபிள்யூ ஆர்18 டிரான்ஸ் காண்டினெண்டல் அறிமுகம்!!

2023 பிஎம்டபிள்யூ ஆர்18 டிரான்ஸ் காண்டினெண்டல் பைக்கை வாடிக்கையாளர்கள் பல்வேறு விதமான தனிப்பயனாக்க தேர்வுகளுடன் பெற முடியும். இந்த லக்சரி மோட்டார்சைக்கிள் ஹேண்டில்பாரில் பெரிய விண்ட்ஷீல்டு கண்ணாடியை கொண்டுள்ளது. இதனுடன், விண்ட் டிஃப்லெக்டர்ஸ், இரு வட்ட வடிவிலான கண்ணாடிகள், பில்லன் இருக்கை, மத்தியில் பொருத்தப்பட்ட ஃபுட் பெக்ஸ் உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன.

இந்த பைக்கில் எடை குறைவான அலாய் காஸ்ட் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இரட்டை தொட்டில் சட்டகத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய ஆர்18 டிரான்ஸ் காண்டினெண்டல் பைக்கில் பெட்ரோல் டேங்க் மற்ற ஆர்18 பைக்குகளில் வழங்கப்படுவதை போல நீர்த்துளி வடிவிலும், ரைடரின் இருக்கை பொசிஷன் நிமிர்ந்ததாகவும் வழங்கப்பட்டுள்ளது. இவற்றுடன் நிக்கல்-பிளேட்டட் டிரைவ்ஷாஃப்ட் இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது.

2023 பிஎம்டபிள்யூ ஆர்18 டிரான்ஸ் காண்டினெண்டல் அறிமுகம்!!

கருப்பு ஸ்ட்ரோம் மெட்டாலிக், கிராவிட்டி நீலம் மெட்டாலிக், மன்ஹட்டான் மெட்டாலிக் மேட், 719 மினரல் வெள்ளை மெட்டாலிக் மற்றும் 719 கேலக்ஸி டஸ்ட் மெட்டாலிக்/ டைடன் சில்வர் 2 மெட்டாலிக் என 5 விதமான பெயிண்ட் தேர்வுகளில் இந்த புதிய ஆர்18 டிரான்ஸ் காண்டினெண்டல் பைக்கை பெறலாம். மழை, ரோல் மற்றும் ராக் என 3 ரைடிங் மோட்கள் இந்த பைக்கில் உள்ளன. இவற்றை பைக்கின் 10.25-இன்ச் டிஎஃப்டி வண்ண திரையின் வாயிலாக ரைடர் தேர்வு செய்யலாம்.

ஆற்றல்மிக்க பிஎம்டபிள்யூ பாக்ஸர் என்ஜினான 1,802சிசி ஏர்/ஆயில்-கூல்டு, 2-சிலிண்டர் இரட்டை என்ஜின் 2023 ஆர்18 டிரான்ஸ் காண்டினெண்டல் பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 4,750 ஆர்பிஎம்-இல் 90 பிஎச்பி மற்றும் 3,000 ஆர்பிஎம்-இல் 158 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரிவர்ஸ் கியரையும் இந்த பைக்கில் கூடுதல் தேர்வாக பெறலாம்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து

ஆர்18 சொகுசு பைக்கை விலையுயர்ந்த பைக்காக பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் விற்பனை செய்துவரும் நிலையில், தற்போது இத்தகைய மோட்டார்சைக்கிளில் புதியதொரு விலைமிக்க வெர்சனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய பைக்கின் பெயரில் இடம்பெற்றுள்ள டிரான்ஸ் காண்டினெண்டல் என்பதன் தமிழ் அர்த்தம் 'கண்டம் தாண்டிய' என்பதாகும். அதாவது, அமெரிக்க கண்டத்திற்கான இந்த மோட்டார்சைக்கிள் தற்போது கண்டம் தாண்டி இந்தியாவிற்கு வந்துள்ளது என்பதாகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, March 23, 2023, 21:39 [IST]
English summary
New bmw r18 transcontinental bike launched in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+