இந்தா பாருங்க இந்த புல்லட் 350 பைக்க கொண்டாருவீங்களா, மாட்டீங்களா?.. அட தேதியே வெளியாகிருச்சு! அது தெரியாதா?
இந்திய இருசக்கர வாகன காதலர்கள் பலரின் எதிர்பார்ப்பாக புதிய தலைமுறை ராயல் என்பீல்டு புல்லட் 350 (New Gen Royal Enfield Bullet 350) இருக்கின்றது. ஆனால், இந்த பைக் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது யாரும் அறியாத ஒன்றாகவே இருந்து வந்தது. இந்த நிலையிலேயே புல்லட் 350 பைக்கின் அதிகாரப்பூர்வ வருகை நாள் பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனம் அதன் புதிய தலைமுறை புல்லட் 350 ((New Gen Bullet 350)) பைக்கை வெகு விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்தியர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இந்த பைக் இருந்து வரும்நிலையில், இப்போதே அதன் அதிகாரப்பூர்வ வருகை நாள் பற்றிய விபரம் வெளியாகி இருக்கின்றது.

வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதி அன்றே புதிய தலைமுறை புல்லட் 350 பைக் அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் அறிமுகம் செய்து வைக்கப்பட இருக்கின்றது. இந்தியாவில் இப்போதைய நிலவரப்படி ஹண்டர் 350 பைக் மாடலே ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மலிவு விலை மோட்டார்சைக்கிள் மாடலாக இருக்கின்றது.
இதைவிட சற்றே காஸ்ட்லியான பைக்காக புதிய தலைமுறை புல்லட் 350 விற்பனைக்கு வர இருக்கின்றது. ஹண்டர் 350 ரூ. 1.5 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

மிகப் பெரிய அளவிலான மாற்றங்களை வருவிருக்கும் புதிய புல்லட் 350இல் ராயல் என்பீல்டு செய்திருக்கும் என எண்ணிக் கொள்ள வேண்டாம். கணிசமான அளவிலேயே மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டால் புல்லட்டிற்கான தோற்றம் இழக்க நேரிடும் என்பதனாலேயே நிறுவனம் கணிசமான அளவில் மாற்றங்களைச் செய்திருக்கின்றது.
புதிய பாடி பேனல்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. அத்துடன், புதிய அம்சங்கள் சிலவும் புல்லட் 350இல் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட புதிய கிளாசிக் 350இல் சேர்க்கப்பட்ட அம்சங்கள் பல புதிய தலைமுறை புல்லட் 350-யிலும் சேர்க்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
வட்ட வடிவ ஹாலோஜன் லைட், ஒற்றை துண்டு அமைப்புடைய இருக்கை, கிளாசிக் 350 பைக்கில் இருப்பதை போல வால் பகுதி லைட் உள்ளிட்டவற்றையே ராயல் என்பீல்டு புதிய தலைமுறை புல்லட் 350 பைக்கில் சேர்த்திருக்கின்றது. இதேபோல், இதன் சேஸிஸும் மாற்றப்பட்டு இருக்கின்றது.
கிளாசிக் 350 பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் சேஸிஸே இதில் சேர்க்கப்பட்டு இருக்கின்றது. சஸ்பென்ஷனை பொருத்தவரை முன் பக்கத்தில் 41 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் பக்கத்தில் ட்வின் ஷாக் அப்சார்பரும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த ட்வின் ஷாக் 6 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்துக் கொள்ளும் வசதிக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
புதிய தலைமுறை புல்லட் 350 லைட் மற்றும் சேஸிஸ்-இல் மட்டுமில்லைங்க எஞ்ஜின் விஷயத்திலும் அதே 349 சிசி எஞ்ஜினைப் பெற்றிருக்கின்றது. 20 பிஎச்பி மற்றும் 27 என்எம் டார்க்கை அது வெளியேற்றும். இதுமட்டுமில்லைங்க, இதன் எக்சாஸ்ட் விஷயத்திலும் கணிசமான மாற்றங்களை ராயல் என்பீல்டு செய்திருக்கின்றது. ஆகையால், இது வெளியேற்றும் சத்தமே மாறி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சைலென்சரில் செய்யப்பட்டிருக்கும் மாற்றம் அதில் இருந்து வரும் சத்தத்தை இசையை போல் மாற்றி இருக்கின்றது. ஆகையால், இது இருசக்கர வாகன பிரியர்களின் மனதை மேலும் கவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே இதுவும் விற்பனையில் ஜொலிப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது.


Click it and Unblock the Notifications








