ராயல் என்பீல்டு இந்தியாவுலேயே இருக்ககூடாதுனு முடிவு பண்ணிருச்சா! சூப்பரான அப்டேட்டுடன் விரைவில் வரும் 42 பாபர்

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள்ஸ் (Jawa Yezdi Motorcycles) தனது புதிய இருசக்கர வாகனத்தின் டீசர் (Teaser) படத்தை வெளியிட்டு இருக்கின்றது. இதன் வாயிலாக புதிய வாகனத்தின் வருகையை அந்நிறுவனம் உறுதி செய்து இருக்கின்றது. அது வெளியிட்டிருப்பது எந்த மோட்டார்சைக்கிளின் டீசர் படம்? அந்த மோட்டார்சைக்கிளின் சிறப்புகள் என்ன? என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

மஹிந்திரா (Mahindra)-வின், கிளாசிக் லெஜண்ட்ஸ் (Classic Legends) நிறுவனத்திற்கு சொந்தமான இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமே ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள்ஸ் (Jawa Yezdi Motorcycles) ஆகும். இந்த நிறுவனம் இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ராயல் என்பீல்டு (Royal Enfield)-க்கு போட்டியாக அதன் டூ-வீலர்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

Jawa 42 bobber

தான் ஏற்கனவே வழங்கிக் கொண்டிருக்கும் போட்டி போதாதென்று அந்த போட்டி தன்மையை இரட்டிப்பாக்கும் முயற்சியிலேயே தற்போது அந்நிறுவனம் களமிறங்கி இருக்கின்றது. இதன் அடிப்படையில் புதியதோர் மோட்டார்சைக்கிளை இந்திய இருசக்கர வாகன சந்தையில் ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள்ஸ் விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் களமிறங்கி இருக்கின்றது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது விரைவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கும் தனது புதிய மோட்டார்சைக்கிளின் டீசர் (Teaser) படத்தை ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள்ஸ் வெளியிட்டு இருக்கின்றது. நிறுவனம் வெளியிட்டு இருப்பது 2023 எடிசன் ஜாவா 42 பாபர் மாடல் உடையதாகும்.

ஆமாங்க, இதன் டீசர் படத்தையே ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள்ஸ் தற்போது வெளியீடு செய்திருக்கின்றது. இந்த படம் புதிய ஜாவா 42 பாபர் பைக்கின் பக்கத்தை வெளிக்கொணரும் வகையில் இருக்கின்றது. மேலும், புதிய 42 பாபர் பைக்கில் இடம் பெற இருக்கும் அம்சங்கள் சிலவற்றையும் இந்த டீசர் படம் உறுதி செய்திருக்கின்றது.

குறிப்பாக, ஒற்றை துண்டு அமைப்புடைய இருக்கை வசதி உடன் புதிய 42 பாவர் விற்பனைக்கு வர இருப்பதையும் இந்த டீசர் உறுதிப்படுத்தி இருக்கின்றது. இதுதவிர, புதிய 42 பாபர் பைக்கில் பன்முக ஸ்போக்குகள் கொண்ட அலாய் வீல்கள், இரட்டை துளைக் கொண்ட எக்சாஸ்ட் சிஸ்டம் மற்றும் வட்ட வடிவ டெயில் லேம்ப் உள்ளிட்டவை இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

புதிய 42 பாபர் பைக்கில் வழங்கப்பட்டிருக்கும் பெரும்பாலான அம்சங்களை அதன் முந்தைய வெர்ஷனிலும் நம்மால் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதாவது, புதுப்பித்திலின் கீழ் கணிசமான அம்சங்களை மட்டுமே ஜாவா மாற்றி இருக்கின்றது. அதேவேளையில், பெரும்பாலான அம்சங்கள் அப்படியே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

குறிப்பாக, இப்போது விற்பனையில் இருக்கும் 42 பாபர் பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அதே 334 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜினே விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் 42 பாபரிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 30.22 பிஎச்பி பவரையும், 32.64 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

6 ஸ்பீடு கியர்பாக்ஸிலேயே இந்த மோட்டார் இயங்கும். இத்துடன் மிக சிறந்த சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் சிஸ்டமும் இந்த பைக்கில் வழங்கப்பட இருக்கின்றது. சொல்லப் போனால் இப்போது விற்பனையில் இருக்கும் அதே சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் சிஸ்டமே 2023 ஜாவா 42 பாபர் பைக்கிலும் இடம் பெற இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஜாவா நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு மிகவும் கணிசமான அளவிலேயே வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. எனவேதான் இதனை இரட்டிப்பாக்கும் முயற்சியில் அந்நிறுவனம் தீவிரமாக களமிறங்கி இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே விரைவில் 2023 வெர்ஷன் 42 பாபர் பைக்கை ஜாவா விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, September 1, 2023, 23:54 [IST]
English summary
New jawa 42 bobber bike teaser out here is more details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+