கண்ணை கவரக்கூடிய ரிவர் இண்டீ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - ஃபோட்டோஸ் கேலரி...!!
'ஸ்கூட்டர்களின் எஸ்யூவி' என்ற அடைமொழி உடன் சந்தையில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரிவர் இண்டீ (River Indie) எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஃபோட்டோஸ் கேலரி...
அதிக நீளம் & அகலத்துடன் அளவில் பெரிய தோற்றத்துடன் சற்று வித்தியாசமான ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டு சமீபத்தில் ரிவர் இண்டீ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் பருமனான தோற்றத்திற்கு ஏற்ப 14-இன்ச்சில் சக்கரங்கள் இந்த ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ளன.

இதனாலேயே இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 'ஸ்கூட்டர்களின் எஸ்யூவி' என அழைக்கப்படுகிறது. இந்த இண்டீ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பெங்களூரை சேர்ந்த ரிவர் நிறுவனம் தயாரித்துள்ளது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு நம் நாட்டு சந்தையில் பஞ்சமே கிடையாது. இருப்பினும் மற்றவைகளுக்கு சரியான போட்டி அளிக்கும் விதத்தில் ரிவர் இண்டீ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால், மேடு, பள்ளங்கள் நிறைந்த சாலைகளை சமாளிக்க இண்டீ ஸ்கூட்டரில் முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் ட்வின் ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. பிரேக்கிங் பணியை கவனிக்க இந்த ஸ்கூட்டரில் டிஸ்க்குகள் இடம் பெற்றுள்ளன. இதன்படி முன் சக்கரத்தில் 240மிமீ டிஸ்க்கும், பின் சக்கரத்தில் 200மிமீ டிஸ்க்கும் சிபிஎஸ் உடன் உள்ளன.

மற்ற தொழிற்நுட்ப அம்சங்கள் என்று பார்த்தால், பெரிய எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் திரை, கண் போன்றதான எல்இடி ஹெட்லைட்கள், ரிவர்ஸ் பார்க்கிங் உதவி மற்றும் 2 யுஎஸ்பி சார்ஜிங் துளைகள் உள்ளிட்டவை ரிவர் இண்டீ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன. இயக்க ஆற்றலை வழங்குவதற்கு இந்த ஸ்கூட்டரில் 4kWh பேட்டரி தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 120கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம்.
இந்த பேட்டரிக்கு 5 வருடங்கள்/ 50,000 கிமீ உத்தரவாதத்தை ரிவர் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பேட்டரியை எந்தெந்த முறைகளில் சார்ஜ் செய்யலாம் என்பது குறித்த விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளிவரவில்லை. இண்டீ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 4kWh பேட்டரி தொகுப்பு 6.7 கிலோவாட்ஸ் திறன் கொண்ட எலக்ட்ரிக் மோட்டாரில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் மோட்டார் ஸ்கூட்டரில் சரியாக நடுப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

0-வில் இருந்து 40kmph வேகத்தை வெறும் 3.9 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய ரிவர் இண்டீ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப்-ஸ்பீடு 90kmph ஆகும். இடவசதி என்று பார்த்தால், இருக்கைக்கு அடியிலும், க்ளோவ் பாக்ஸ் பகுதியில் இடவசதிகள் உள்ளன. குறிப்பாக, இருக்கைக்கு அடியில் சுமார் 43 லிட்டர்கள் கொள்ளளவில் இடவசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. க்ளோவ் பாக்ஸ் பகுதியில் 12 லிட்டர்கள் கொள்ளளவில் இடவசதி உள்ளது.
இண்டீ எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ.1.25 லட்சம் என்ற தொகையை எக்ஸ்-ஷோரூம் விலையாக ரிவர் நிறுவனம் நிர்ணயித்துள்ளது. எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ.1.25 லட்சம் என்பது சற்று அதிகமாக தோன்றலாம். ஆனால், வழங்கப்பட்டுள்ள தொழிற்நுட்ப வசதிகளை கருத்தில் கொண்டால் இது ஏற்கக்கூடிய விலையே ஆகும். அதுமட்டுமின்றி, இண்டீயின் அளவில் பருத்த தோற்றம் நிச்சயம் உங்களை வெகுவாக கவர்ந்திழுக்கும். இதற்கு ஸ்கூட்டரை நேரில் பார்த்த நாங்களே சாட்சி.
புதிய ரிவர் இண்டீ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் முழுமையான ஃபோட்டோ கேலரியை காண இங்கே க்ளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications









