இப்போதைய ராயல் என்பீல்டு பைக்குகள் மொத்தமா மாறிடுச்சு - முதல்முறையாக அலாய் சக்கரங்களுடன் காண்டினெண்டல் ஜிடி650
அப்டேட் செய்யப்பட்ட ராயல் என்பீல்டு காண்டினெண்டல் ஜிடி 650 பைக் கடந்த பிப்ரவரியில் யுகே-இல் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய காண்டினெண்டல் ஜிடி650-இல் அப்படி என்னென்ன அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை பற்றி இனி பார்க்கலாம்.
இந்தியாவில் ராயல் என்பீல்டு விற்பனை செய்வதிலேயே விலைமிக்க மோட்டார்சைக்கிள்களுள் ஒன்றான காண்டினெண்டல் ஜிடி650 நம் நாட்டு சந்தையில் அதிகம் விற்பனையாகும் 500சிசி+ பைக்குகளுள் ஒன்றாகும். இத்தகைய பைக்கின் தோற்றத்தை மெருக்கேற்றம் செய்து கடந்த பிப்ரவரி மாதத்தில் யுகே-இல் ராயல் என்பீல்டு நிறுவனம் அறிமுகம் செய்தது. அதனை தொடர்ந்து தற்போது இந்த பைக் நம் நாட்டு சந்தையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அப்டேட் செய்யப்பட்ட காண்டினெண்டல் ஜிடி650 பைக்கின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையை ரூ.3.19 லட்சமாக ராயல் என்பீல்டு நிறுவனம் நிர்ணயித்துள்ளது. அதுவே டாப் வேரியண்ட்டின் விலை ஆனது ரூ.3.45 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மிஸ்டர் க்ளீன் என்ற தூய்மையான வெள்ளை நிற பெயிண்ட்டில் வழங்கப்படும் இந்த டாப் வேரியண்ட்டில் க்ரோம் ஹைலைட்கள் அதிகளவில் கிடைக்கும்.
மேலும் இந்த வேரியண்ட்டில் வழக்கமான வயர்-ஸ்போக் சக்கரங்களே கிடைக்கும். இதை ஏன் இங்கே கூறுகிறேன் என்றால், முதல்முறையாக அலாய் சக்கரங்களுடனும் காண்டினெண்டல் ஜிடி650 பைக்கை ராயல் என்பீல்டு நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. அபெக்ஸ் கிரே அல்லது ஸ்லிப் ஸ்ட்ரீம் நீல நிறத்தில் இந்த பைக்கிற்கான அலாய் சக்கரங்களை தேர்வு செய்யலாம். இருப்பினும் சக்கரத்தின் அளவில் மாற்றமில்லை, அதே 18-இன்ச் தான்.

காண்டினெண்டல் ஜிடி650 பைக்கிற்கு மொத்தம் 6 விதமான பெயிண்ட் தேர்வுகளை (இதில் சில 2023ஆம் ஆண்டிற்காக புதியதாக சேர்க்கப்பட்டுள்ளன) ராயல் என்பீல்டு வழங்கவுள்ளது. ஆனால் அலாய் சக்கரங்களை மேற்கூறப்பட்ட இரு நிறங்களில் ஒன்றில் தான் தேர்வு செய்ய முடியும். அலாய் சக்கரங்கள் உடனான காண்டினெண்டல் ஜிடி650 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.3.39 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கூறியதுபோல், 500சிசி-க்கு மேல் இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகக்கூடிய மோட்டார்சைக்கிளாக காண்டினெண்டல் ஜிடி650 விளங்குகிறது. இருப்பினும் இந்த பைக் கடந்த சில வருடங்களாக அப்டேட் செய்யப்படாமல் இருந்து வந்ததை இந்த இடத்தில் கூறியே ஆக வேண்டும். ஏனெனில், குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் ராயல் என்பீல்டு பைக்குகளில் கூட மாடர்ன் அம்சங்கள் வழங்கப்பட்டு வந்தன, ஆனால் காண்டினெண்டல் ஜிடி650 பைக்கில் இல்லை.

ஆனால் இந்த நிலை இனி இருக்காது. ஏனெனில் அலாய் சக்கரங்கள் மட்டுமின்றி, காண்டினெண்டல் ஜிடி650 பைக்கில் முதல்முறையாக எல்இடி ஹெட்லைட்டையும் ராயல் என்பீல்டு நிறுவனம் வழங்கியுள்ளது. ஹலோஜன் ஒளி பிரதிப்பலிப்பான் ஹெட்லைட்டிற்கு பதிலாக எல்இடி ஹெட்லைட் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான எல்இடி ஹெட்லைட்டை சமீபத்தில் ராயல் என்பீல்டு பிராண்டில் இருந்து வெளிவந்த சூப்பர் மீட்டியோர் 650 பைக்கில் காண முடியும்.
எல்இடி ஹெட்லைட் மட்டுமில்லாமல், சூப்பர் மீட்டியோர் 650 பைக்கில் இருந்து அலுமினியத்திலான ஸ்விட்ச் கியரையும் காண்டினெண்டல் ஜிடி650 பைக்கிற்கு ராயல் என்பீல்டு நிறுவனம் கொடுத்துள்ளது. சக்கரங்களில் முன்பு சியாட் டயர்கள் பொருத்தப்பட்டு வந்தன. ஆனால் புதிய காண்டினெண்டல் ஜிடி650 பைக் வ்ரேடெஸ்டெயின் டயர்களுடன் கிடைக்கும். இந்த பைக்கில் கொண்டுவரப்பட்டுள்ள மற்றொரு தொழிற்நுட்ப அப்கிரேட் என்று பார்த்தால், யுஎஸ்பி சார்ஜிங் வசதி ஆகும்.


Click it and Unblock the Notifications








