கேடிஎம் 390 பைக் மார்க்கெட் மொத்தமா காலியாக போகுது!! ராயல் என்பீல்டு தரமான சம்பவம் செய்ய தயாராகுது!
ராயல் என்பீல்டு ஹிமாலயன் (Royal Enfield Himalayan), இந்தியாவின் விலை குறைவான அட்வென்ச்சர் பைக்குகளுள் ஒன்று. இதனை ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய வெர்சனில் விற்பனைக்கு கொண்டுவர தயாராகி வருகிறது. இன்னும் சொல்லப்போனால், தற்போதைய ஹிமாலயனை காட்டிலும் மேம்படுத்தப்பட்ட மாடலாக ஹிமாலயன் 450 கொண்டுவரப்படுகிறது.
தற்போதைய ஹிமாலயனுக்கு போட்டியாக விளங்கும் கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் புதிய ஹிமாலயன் 450 பைக்கிற்கும் விற்பனையில் போட்டியாக இருக்கும். இந்த கேடிஎம் அட்வென்ச்சர் பைக் உடன் ஒப்பிடுகையில், புதிய ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 தோற்றத்திலும், இயக்க ஆற்றலிலும், வசதிகளிலும் எவ்வாறானதாக இருக்கும் என்பதை இனி பார்க்கலாம்.

தோற்றம்: வழக்கமான ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கின் மெருக்கேற்றப்பட்ட வெர்சனாக புதிய ஹிமாலயன் 450 கொண்டுவரப்படுகிறது. அதாவது, ஹிமாலயன் பைக்கின் வழக்கமான சாயல் புதிய ஹிமாலயன் 450 பைக்கிலும் இருக்கும். மறுப்பக்கம், கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் கட்ஸ் & க்ரீஸஸ் உடன் முற்றிலும் வேறுப்பட்ட தோற்றத்தில் உள்ளது.
வசதிகள்: புதிய ஹிமாலயன் 450 பைக்கில் எல்இடி விளக்குகள், 4-இன்ச் டிஎஃப்டி ஸ்மார்ட்போன் கனெட்டிவிட்டி, ஸ்விட்ச் செய்யக்கூடிய ஏபிஎஸ், ரைட் மோட்கள் (ஈக்கோ & பெர்ஃபார்மன்ஸ்) மற்றும் சைடு-ஸ்டாண்ட் கட்-ஆஃப் வசதிகளை ராயல் என்பீல்டு வழங்குகிறது. கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கிலும் எல்இடி விளக்குகள், ஏபிஎஸ் மோட்கள், டிராக்ஷன் கண்ட்ரோல், பை-டைரக்ஷனல் குயிக்ஷிஃப்டர் மற்றும் முழு-டிஜிட்டல் டிஎஃப்டி ஸ்மார்ட்போன் இணைப்பு வசதிகள் கிடைக்கின்றன.

என்ஜின்: புதிய ஹிமாலயன் 450 பைக்கில் 450சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 40 பிஎச்பி மற்றும் 40 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. ஆஸ்திரியன் ஸ்டைல் அட்வென்ச்சர் பைக்கான கேடிஎம் 390 அட்வென்ச்சரில் 373சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது.
ஹார்ட்வேர்: ஹிமாலயன் 450 பைக்கின் மெக்கானிக்கல் பாகங்கள் செட்-அப் எளிமையானது. இந்த புதிய ஹிமாலயன் பைக்கில் முன்பக்கத்தில் யுஎஸ்டி ஃபோர்க்குகள் வழங்கப்படுகின்றன. அதுவே, பின்பக்கத்தில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஆஃப்செட் மோனோஷாக் பொருத்தப்படுகிறது. பிரேக்கிங் பணியை முன் சக்கரத்தில் 320மிமீ டிஸ்க்கும், பின் சக்கரத்தில் 270மிமீ டிஸ்க்கும் கவனித்துக் கொள்கின்றன.

இந்த புதிய ஹிமாலயன் பைக்கில் முன் சக்கரம் 21-இன்ச்சிலும், பின் சக்கரம் 17 இன்ச்சிலும் வழங்கப்பட உள்ளது. கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கில் எண்ட்ரீ-லெவல் வேரியண்ட் மற்றும் மிட் வேரியண்ட்களில் அலாய் சக்கரங்கள் வழங்கப்படுகின்றன. அதுவே, டாப் வேரியண்ட்களில் ட்யூப்டு ஸ்போக் சக்கரங்கள் பொருத்தப்படுகின்றன. இந்த கேடிஎம் அட்வென்ச்சர் பைக்கில் முன் சக்கரத்தில் 320மிமீ டிஸ்க்கும், பின் சக்கரத்தில் 230மிமீ டிஸ்க்கும் வழங்கப்படுகின்றன.
விலை: ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று (நவம்பர் 24) வெளியிடப்படுகிறது. புதிய ஹிமாலயன் 450 பைக்கின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையை ரூ.2.60 லட்சத்தில் எதிர்பார்க்கிறோம். கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் விலை குறைவான வெர்சனாக 390 அட்வென்ச்சர் எக்ஸ் (ரூ.2.81 லட்சம்) விளங்குகிறது. அதனை காட்டிலும், புதிய ஹிமாலயன் 450 பைக்கின் விலை குறைவானதாக எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்பீல்டு ஹிமாலயனில் புதிய அத்தியாயம் உருவாகிறது என்றுதான் சொல்ல வேண்டும். தற்போதைய ஹிமாலயனை சமாளித்தது போல், புதிய ஹிமாலயன் 450 பைக்கையும் கேடிஎம் 390 அட்வென்ச்சர் சமாளிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். விலை மட்டும் வாடிக்கையாளர்களால் ஏற்கக்கூடியதாக நிர்ணயிக்கப்பட்டால், நிச்சயம் ஹிலாமயன் 450 வெற்றிப் பெறும்.


Click it and Unblock the Notifications









