ஓலா எஸ்1 ஸ்கூட்டரின் மார்க்கெட்டை காலி பண்ண போகும் டிவிஎஸ்!! 2வது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயார்...

டிவிஎஸ் மோட்டார் (TVS Motor)-இல் இருந்து புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று சந்தையில் அறிமுகமாக உள்ளது. ஐ-க்யூப்பிற்கு அடுத்து டிவிஎஸ் பிராண்டில் இருந்து வெளிவரும் 2வது எலக்ட்ரிக் வாகனமான இது எந்த மாதிரியான எலக்ட்ரிக் ஸ்கூட்டராக விளங்கும் என்ற கேள்வி எழுந்துவந்த நிலையில், இந்த புதிய டிவிஎஸ் தயாரிப்பு குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றை இனி பார்க்கலாம்.

எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவது நம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் விரிவடைந்து வருகிறது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இந்த விஷயத்தில் நம் இந்தியாவே சற்று பின்தங்கி தான் உள்ளது. இருப்பினும், நம் நாட்டின் சாலைகளில் தற்சமயம் கணிசமான எண்ணிக்கையில் எலக்ட்ரிக் வாகனங்களை பார்க்க முடிகிறது.

new tvs electric scooter launch date announced

குறிப்பாக, எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான தேவை சிறப்பான அளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளது. இதனை நன்கு பயன்படுத்தி கொள்ளும் விதமாக இந்திய சந்தையில் பல்வேறு இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் கடந்த சில வருடங்களில் நுழைந்துள்ளன. அதேநேரம் ஏற்கனவே முன்னணி இருசக்கர வாகன நிறுவனமாக உள்ள பஜாஜ், டிவிஎஸ் மோட்டார் போன்றவையும் களத்தில் குதித்துள்ளன.

இதில், தமிழகத்தை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் கடந்த 2020ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஐக்யூப் என்ற தனது நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. அதனை தொடர்ந்து, இந்திய சந்தையில் தனது 2வது எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய டிவிஎஸ் மோட்டார் தயாராகி வருகிறது. இதற்கான வேலைகளில் கடந்த 1 வருடத்திற்கும் மேலாகவே டிவிஎஸ் நிறுவனம் ஈடுப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

new tvs electric scooter launch date announced

இந்த நிலையில், புதிய வாகனம் ஒன்று வருகிற ஆகஸ்ட் 23ஆம் தேதி துபாயில் இருந்து வெளியீடு செய்யப்பட உள்ளதாகவும், இந்த புதிய வாகனம் ஓர் எலக்ட்ரிக் வாகனமாக இருக்கும் எனவும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது சமீபத்திய ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. மற்றப்படி, அந்த அறிக்கையில் அந்த புதிய டிவிஎஸ் 2-வீலர் குறித்த எந்த விபரமும் குறிப்பிடப்படவில்லை.

ஆனால் எங்களுக்கு தெரிந்தவரையில், இது கடந்த ஜனவரி மாதத்தில் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் டிவிஎஸ் சார்பில் காட்சிக்கு நிறுத்தப்பட்ட கிரேயோன் எலக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கலாம். ஏனெனில் டிவிஎஸ் மோட்டார் ஏற்கனவே கிரேயோன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை கிட்டத்தட்ட வடிவமைத்து முடித்துவிட்டது மற்றும் 2023 ஆட்டோ எக்ஸ்போவின் போதே டிவிஎஸ் மோட்டாரின் அடுத்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான் என்ற பேச்சுகள் எழுந்தன. இது ஒரு காரணம்.

new tvs electric scooter launch date announced

2வது காரணம், தற்போது நமது டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு டிவிஎஸ் மோட்டார் சார்பில் அனுப்பப்பட்டுள்ள அறிக்கையில், ஒளிரக்கூடிய 4 வெள்ளை நிற சதுரங்கள் ஒன்றின் மீது ஒன்றாக நீள் செவ்வக வடிவில் இருப்பதுபோல் காட்டப்பட்டுள்ளது. கிரேயோன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஹெட்லைட் அமைப்பு இதேபோன்றதான நீள் செவ்வக வடிவத்தை கொண்டதை இங்கு நினைவுப்படுத்துகிறோம்.

ஆதலால் டிவிஎஸ் மோட்டாரில் இருந்து அடுத்ததாக வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள எலக்ட்ரிக் வாகனம் கிரேயோனாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது. ஓலா எஸ்1 பிரோ, ஏத்தர் 450எக்ஸ், விடா வி1 போன்ற பிரீமியம் தரத்திலான ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக டிவிஎஸ் கொண்டுவரும் கிரேயோன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலையை ரூ.1.20 லட்சத்தில் இருந்து ரூ.1.50 லட்சத்திற்குள் எதிர்பார்க்கிறோம்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: டிவிஎஸ் மோட்டார் ஏற்கனவே ஐக்யூப் மூலமாக குறிப்பிடத்தக்க வெற்றியை கண்டுவிட்டது. தற்போது கிரேயோன் மூலமாக பிரீமியம் தரத்திலான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பிரிவிலும் வெற்றியை பெற ஆயத்தமாகி வருகிறது. நமக்கு கிடைத்துள்ள அறிகுறிகளை வைத்து இது கிரேயோனாக இருக்கலாம் என யூகித்துள்ளோம். ஆனால், டிவிஎஸ் மோட்டார் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக இதுவரையில் நாம் பார்த்திராத முற்றிலும் புதிய தயாரிப்பை வெளியீடு செய்யவும் வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, July 9, 2023, 0:00 [IST]
English summary
New tvs electric scooter launch date announced
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X